Published:Updated:

ரிட்டர்ன் கிஃப்ட்டுக்கு... பனை ஓலை பாக்ஸ்!

ரிட்டர்ன் கிஃப்ட்டுக்கு... பனை ஓலை பாக்ஸ்!

திருமணங்களில், வரும் விருந்தினர்களுக்கு தாம்பூலப்பை கொடுக்கும் கலாசாரத்தின் இன்றைய அப்கிரேடட் வெர்ஷன்... ‘ரிட்டர்ன் கிஃப்ட்ஸ்’. ஜூட் பையில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் வரை, ஒவ்வொருவரும் அவரவரின் வசதி, ரசனைக்கு ஏற்ப ரிட்டர்ன் கிஃப்ட்டை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தப் புள்ளியில் கொஞ்சம் புதுமையாக யோசித்து, தனக்கான தொழிலை ஏற்படுத்திக்கொண்டுள்ளார் கோவையைச் சேர்ந்த ரேணுகா. இவர் செய்து கொடுப்பது, ரிட்டர்ன் கிஃப்ட்டுகளுக்கான பனை ஓலை பாக்ஸ்கள்!

‘‘எம்.பி.ஏ. ஃபைனான்ஸ் படிச்சுட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். திருமணத்துக்கு அப்புறம் வேலையைத் தொடர முடியலை. இயற்கையின் மீது எனக்கு எப்பவுமே பிரியம். அதுக்கு ஆதரவான ஒரு விஷயத்தை செய்யலாம்னு யோசிச்சேன். கிராஃப்ட்டில் ஆர்வம் உள்ள நான், என் உறவினர் ஒருவரின் குழந்தையோட பிறந்தநாளுக்கு, பனை ஓலை பாக்ஸில் கிஃப்ட் கொடுத்தேன். விழாவுக்கு வந்திருந்த எல்லோரும் அதை ரொம்பவே ஆச்சர்யத்தோட ரசிச்சுப் பாராட்டினாங்க. அதையே பிசினஸா மாற்றினேன். சின்ன வட்டம், கொஞ்சம் பெரிய வட்டம், பெரிய வட்டம்னு படிப்படியா தொழில் வளர்ந்தது. இப்போ திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்கு ஆர்டர்கள் எடுத்து பனை ஓலை பாக்ஸை செய்து கொடுக்கிறேன்.

ரிட்டர்ன் கிஃப்ட்டுக்கு... பனை ஓலை பாக்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்போவெல்லாம் எல்லா விசேஷங்களிலும் ‘தீம் செலிப்ரேஷன்’ ஃபேஷனாகிட்டதால, அவங்க தேர்ந்தெடுத்திருக்குற `தீம்’-க்கு ஏற்றவாறு என்னை செய்து தரச் சொல்லிக் கேட்பாங்க. நானும் பனை ஓலையில், அந்தத் `தீம்’-க்கு செட் ஆகுற மாதிரி என்ன செய்யலாம்னு யோசிச்சு, புதுமையா செஞ்சு கொடுப்பேன். பனை ஓலை பாக்ஸ்னாலும், அதில் செய்யும் அலங்காரத்துக்கு ரொம்பவே மெனக்கெடுவேன். நகை செய்ய பயன்படுத்தும் கற்களை டெல்லியில் இருந்து மொத்தமா வாங்கிட்டு வந்து, அதுக்காகப் பயன்படுத்துவேன். வேண்டிய கிஃப்ட் பொருட்களை இந்த பாக்‌ஸில் போட்டு, ரிட்டர்ன் கிஃப்ட்டா கொடுப்பாங்க.

சிலர், ரிட்டர்ன் கிஃப்ட் பாக்ஸில் அவங்க தரவிருக்கிற சாக்லேட், ஸ்வீட், டிரை ஃப்ரூட்ஸ் போன்றவற்றையும் என்கிட்டயே கொடுத்து, அதையும் பாக்ஸில் போட்டே டெலிவரி கொடுக்கச் சொல்லுவாங்க. அதையும் செய்து கொடுக்கறேன். எங்கிட்ட குறைந்தது ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஆர்டர் கொடுத்தாதான், வேலையை முடிக்க முடியும். முகூர்த்த சீஸன்னா, இன்னும் முன்கூட்டியே சொல்லிடலாம்!’’

- பனை ஓலை பாக்ஸில் `பளிச் பளிச்’ என கற்களை ஒட்ட ஆரம்பிக்கிறார் ரேணுகா!

- ந.ஆஷிகா