Published:Updated:

ஹலோ விகடன்....

கலங்காதிரு மனமே!

ஹலோ விகடன்....

வாழ்க்கையில் நாம் சிந்திக்க மறந்த விஷயங்கள், சிந்தித்துக்கொண்டே இருக்கும் விஷயங்களைப் பற்றி, எளிமையான, சிநேகமான வார்த்தைகளில் பேசுகிறார், ஊடகவியலாளர் இ.மாலா... 

‘‘அவள் விகடன் வாசகிகளுக்கு என் வணக்கம்!

ஹலோ விகடன்....

• நம் நாட்டில் நிறத்தை அழகுடன் தொடர்புபடுத்தி, மாநிறமானவர்களின் தன்னம்பிக்கையை கீழிறக்குகிறார்கள். மேலும் அவர்களைக் குறிவைத்து ‘ஃபேர்னெஸ் க்ரீம்’ சந்தையை விரிவுபடுத்த நினைக்கிறார்கள். மற்ற நாடுகளைவிட இந்தியாதான் அவர்களின் முதன்மை இலக்காக இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

• வாழ்வை ரசிக்க, முதலில் கண் பார்வையின் ஆரோக்கியம் முக்கியம். அப்படியென்றால், பார்வையில்லாதவர்களுக்கு வாழ்க்கை இல்லையா? வாழ்க்கைப் பார்வை பற்றிச் சொல்கிறேன்.

• சுனித்தி சாலமன்... இந்தியாவில் ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிப்பை முதலில் கண்டுபிடித்து உலகுக்குச் சொன்ன தமிழ்ப்பெண். சில தினங்களுக்கு முன் மறைந்த அவரைப் பற்றி, ஆச்சர்யப்படத்தக்க தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

• மதுஒழிப்புப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. அது சாத்தியமா? நம்மால் அதில் எந்த வகையில் பங்களிக்க முடியும்? இந்தப் போராட்டத்துக்கு என்னதான் முடிவு?

• ‘என்னடா வாழ்க்கை இது’ என்று நொந்துபோகிறவர்களுக்கு, ஒரு சின்னக் கதை சொல்கிறேன்.

• இன்றைய பெற்றோர்களுக்கான பெரிய சவால், பருவப் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பதுதான். அவர்களுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொண்டால் யாவும் நலமே! அதற்கு எப்படி நம்மைத் தயார் செய்துகொள்வது?

• ‘கனவு காணுங்கள்’ என்று சொன்ன அப்துல் கலாம் அய்யாவின் ஒரு பெரிய கனவு பற்றி அறிவீர்களா?

- இப்படி பல விஷயங்களை நான் வைத்திருக்கிறேன்... ‘கலங்காதிரு மனமே’ குரல்வழியில் உங்களுடன் பேச! ஆகஸ்ட் 18 முதல் 24 வரை  044 - 66802912* என்ற எண்ணை டயல் பண்ணுங்க!’’

கே.அபிநயா படம்: சொ.பாலசுப்ரமணியன்

அடுத்த கட்டுரைக்கு