Published:Updated:

ஃபாரின் சரக்கு

Vikatan Correspondent
ஃபாரின் சரக்கு

மெரிக்க டி.வி நடிகை கெய்லி ஜென்னர் 18 வயதை அடைந்துவிட்டார். ‘இதுவரை நான் செய்த எல்லா கலாட்டாக்களையும் இனிமேல் சட்டப்படி செய்ய முடியும்’ என உற்சாகக் குரல் எழுப்பியிருக்கிறார் கெய்லி. சென்ற வாரம் நடந்த அவருடைய பிறந்த நாள் விழா பார்ட்டிதான் நெட்டிசன்ஸ் இடையே ஹைலைட். ஹை ஸ்கூல் முடித்ததற்கே ஜென்னருக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சைப் பரிசளித்தார் அவரின் பாய் ஃப்ரெண்ட் டைகா. பிறந்த நாள் என்றால் சும்மா இருப்பாரா? மெர்சிடிஸ் பென்ஸ் ஜி ரக காரைப் பரிசளித்திருக்கிறார். நடத்துங்க நடத்துங்க!

ஃபாரின் சரக்கு

ந்த வாரம் வெளியாகியுள்ள ‘தி டைரி ஆஃப் டீனேஜ் கேர்ள்’ படத்துக்கு இங்கிலாந்து நாட்டு சென்ஸார் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் பார்க்கக் கூடியது என ‘அடல்ட்ஸ் ஒன்லி’ சான்றிதழ் அளிக்க, புலம்பித் தீர்த்துவிட்டார் அதில் நடித்துள்ள பெல் பௌலி. தன் அம்மாவின் நண்பரோடு காதல் வயப்படும் பெண்ணைப் பற்றியது படம். ‘சென்ஸாரில் ஆணாதிக்கம் மிகுந்துள்ளதால், பெண்களின் மனநிலையைச் சொல்லும் இந்தப் படத்துக்கு இப்படி சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டார்கள்’ என்று பொருமித் தள்ளிய பெல் பௌலி, ‘18 வயது ஆகிவிட்டது என்று பொய்யாக ஐ.டி கார்ட் ரெடி பண்ணியாவது படத்தைப் பார்த்திடுங்க’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதுசரி!