பட்டப் படிப்பு முடிச்ச முத்துமணி வேலைவெட்டி இல்லாம விருதாப்பயல்களோட சுத்தித் திரிஞ்ச காலத்துல குடல் வெந்து கும்பி கருகிப் பேசுனாரு கருத்தமாயி;

''மகனே! போற போக்குச் சரியில்லப்பா; புத்திய மாத்திக்க. வம்பாடு பட்டு உன்னப் படிக்கவச்சேன்டா. படிச்சு முடிச்சுட்டு உங்கவும் ஒறங்கவும் ஊர் மேயறதுமா இருந்தா, வீடு வெளங்காதுரா. அரை உசுராக்கெடக்கன்டா அப்பன். கை கால் விழுகுறதுக்கு முன்ன கை கொடு மகனே. ரெண்டு கடன்பட்டவன்டா நானு. ஒண்ணு, எங்கப்பன்பட்ட கடன். ரெண்டாவது கடன் - நான் பெத்த கடன்டா. உங்க மூணு பேரையும் கரை சேத்துட்டாக் கட்டையச் சாச்சிருவேன். மண்ணும் மக்களும் தவிர வேற என்னடா இருக்கு விவசாயி பொழப்புல...''

கருத்தமாயி இன்னும் பேசி முடிக்கல.

தட்டுலவச்ச சோத்தை மோந்து பாக்க வந்த பூனைய வெளக்கமாரு எடுத்து ஒரு வீசு வீசிட்டு ஆரம்பிச்சிட்டா சிட்டம்மா.

''ஏ பூனைக் குட்டி! பிள்ளமேல சும்மா வள்ளுவள்ளுன்னு விழுக வேணாம்னு சொல்லிவையி. எம் பிள்ள பிச்சையெடுத்து எச்சிச் சோறு தின்னு படிச்சிட்டு வந்து நிக்குது. சும்மா அது காதுக்குள்ள தார்க்குச்சியவச்சுக் குத்திக்கிட்டேயிருந்தா வேலை வந்துருமா? வேலை வேலைன்னா விட்டத்துல இருந்து குதிச்சிருமா? அததுக்கு ஒரு காலம் வரணும்; கருப்புசாமியும் கண்ணு தொறக்கணும்.''

அப்பன் ஆத்தாள மோதவிட்டுட்டுக் கயித்துக் கட்டில்ல ஒக்காந்து காலாட்டிக்கிட்டே அவிச்ச வேர்க்கடலையத் தின்னுக் கிட்டிருக்கான் முத்துமணி.

திண்ணையில படிச்சுக்கிட்டிருக்கான் சின்னப்பாண்டி. அடுப்புலகிடந்த பாலுக்குக் கங்கு தள்ளிக்கிட்டிருக்கா தேனு.

''ஆத்தா! வேலைக்குப் பேசிவச்சுட்டேன். அதுக்குக் கருப்புசாமி கண்ணு தொறக்க வேணாம். கருத்தமாயி கண்ணு தொறந்தாப் போதும்.''

''என்னடா சொல்ற?'' இழுத்தா ஆத்தா.

''காட்டு இலாகாவுல வேலை காலியிருக்காம். போட்டுத் தாரேங்குறாக. மூணு லட்சம் போகுதாம். சாதிசனமாப் போயிட்ட, குடுக்கிறதக் குடு முத்துமணி... செஞ்சு தாரேன்னு சொல்லியிருக்காரு மாவட்டச் செயலாளரு.''

''லஞ்சக் காசுக்கு எங்கடா போறது? நெலத்தக் கிலத்த விக்கச் சொல்றியா?'' பதறிப்போனாரு கருத்தமாயி.

''இல்லாதவன்தான விக்கணும்?''

''அப்ப நான் வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்?''

''வஞ்சகம் பண்ண மாட்ட. ஆனா... வச்சிருக்க.''

''நானே இத்து எலும்பில்லாம செத்துச் சீவனில்லாமக்கெடக்கேன். என்னத்தடா வச்சிருக்கேன்?''

''தங்கச்சி கல்யாணத்துக்கு நகையும் காசும் சிறுகச் சிறுகச் சேத்துவச்சிருக்கீகல்ல..? வித்துக் குடுத்தா வேல வாங்கிருவேனில்ல..?''

அது வரைக்கும் சுவர்ல வரைஞ்ச கோடு மாதிரி சுவத்துல ஒட்டியே கிடந்த கருத்தமாயி அடிச்ச பந்து மாதிரி வெடிச்சு எந்திருச்சாரு.

''ஏன்டா காலிப் பயலே! அங்க வச்சு இங்க வச்சுக் கடைசியிலே அடி மடியிலையா கை வைக்கப் பாக்கிற..? ஒன்னியக் கொல்லாம விட மாட்டேன்.''

முறுக்கி நின்ன தகப்பன ஒரே ஓட்டமா ஓடி வந்து கையப் புடிச்சு இழுத்துட்டான் சின்னப்பாண்டி.

அப்பன் 'காச்மூச்சு’ன்னு கத்த, ஆத்தா 'குய்யோ முய்யோ’ன்னு கூச்சல் போட, தேனு பயந்துபோயி தலையில கைவச்சு ஒரு மூலையில முண்டி நிக்க, குடும்பத்துக்குள்ள குத்துவெட்டாகத் தெரிஞ்சிச்சு.

இத்தன கூத்துக்கு மத்தியில ஆடாம அசையாம சொத்தைக் கடலைக்குள்ள நல்ல கடலையைத் தேடித் தின்னுக்கிட்டே பதறாமச் சொன்னான் முத்துமணி:

''மொதல்ல மகளுக்கு மாலையா? மகனுக்கு வேலையா? கெழவன் கெழவி முடிவு பண்ணிக்குங்க.''

மாவட்டச் செயலாளர்னா லேசுப்பட்ட உத்தியோகம் இல்ல. மந்திரியில பாதி; சமயத்துல சகலத்துலயும் பாதின்னுகூடச் சொல்லலாம். 'பொக்கப்பாண்டி பொக்கப்பாண்டி’ன்னு சொன்னாத்தான் அந்த ஆள ஊரு நாடு அறியும். மத்தபடி 'பொற்கைப் பாண்டியன்’ங்கற தெல்லாம் தட்டிக்கும் சுவரொட்டிக்கும் உண்டான பேரு.

ஊர்ல பெரிய வீடு; ஆனா - தெரியாது அப்படி. முன் பக்கம் பழைய கூரைய அப்படியே வச்சுக்கிட்டுப் பின்பக்கம் ஏகத்துக்கும் இழுத்துக் கட்டியிருக்காரு வீட்ட.

திறந்தேகிடக்கும் கதவு; கொறையாது கூட்டம். நாற்காலியில் ஒருத்தனும் கைப்பிடியில ஒருத்தனுமா ஒழுங்கு மரியாதை இல்லாம ஒக்காந்திருப்பாக ஆளுக.

தங்கச் சங்கிலி போட்ட தலை சீவாத ஒருத்தனும், மூஞ்சி செரைக்காமக் கறுப்புக் கண்ணாடி போட்ட ஒருத்தனும் மோப்ப நாய்க மாதிரி வந்து போவானுக. மோப்ப நாய்க கண்டுபுடிச்சுடும் வந்திருக்கிறவன் மூட்டை முடிச்சுக்குள்ள என்னன்ன இருக்குன்னு.

அப்பன் ஆத்தாகிட்ட அடிச்சுப் பறிச்ச காசை அடி மடியில் கட்டி ஒளிச்சுவச்சிருக்கான் முத்துமணி. அவன் பக்கத்துல ஒரு பய; அவன் வயசுதான் இருக்கும் - செக்கச் செவேர்னு ஒக்காந்திருக்கான் பக்கு பக்குன்னு முழிச்சுக்கிட்டு.

அவன் மடியில் கன்னங்கரேல்னு ஒரு கறுப்புப் பை;

கண்ணுல ஒரு கலவரம். பயந்து பயந்து பேசறான் காதுக்குள்ள:

''நிச்சயமாக் கெடைக்குமா முத்துமணி?''

''நம்பு ராம்குமார். மாவட்டச் செயலாளர் ஒரு வகையில் எனக்குத் தூரத்துச் சொந்தம். மனுஷன் பணத்துக்கு அஞ்சலேன்னாக்கூட எனத்துக்கு அஞ்சுவாரு. உறுதியா ஒனக்கு இந்த வேலை வாங்கித் தர்றேன். கல்லூரியில எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்க. உனக்கு இதுகூடச் செய்ய மாட்டனா? காசை நீ குடு; கவரை நான் குடுக்கறேன்.''

''முத்துமணி யாருப்பா? அண்ணன்

கூப்புடுறாரு.''

தடபுடன்னு எந்திரிச்சு உள்ள போனாக ரெண்டு பேரும்.

''வாப்பா... ஒக்காரு.'' உணர்ச்சியில்லாம உதடு மட்டும் ஆடுச்சு பொக்கப் பாண்டிக்கு. முன் மண்டையில முடி இல்லேன்னு மீசையப் பெருசா வச்சிருந்தாரு பொக்கப் பாண்டி. அந்த மீச என்னடான்னா தான் சிறுசாகி வழுக்கையப் பெருசாக் காமிச்சு நிக்குது.

''அண்ணே... இவருதான் ராம்குமாரு. கூடப் படிச்சவரு.''

கும்புட்டு அறிமுகப்படுத்துன முத்துமணி, ராம்குமாரப் பாத்து ஒரு கண்ண மட்டும் ஓரமா அடிச்சான்.

அவனும் எந்திரிச்சுப் பவ்யமாக் குடுத்தான் பைய. 'பணத்தக் கையால தொடறது இல்ல’ன்னு பாலிசி உள்ளவரு பொக்கப் பாண்டி; அதக் கை நீட்டி வாங்காம, ஓரமா வைக்கச் சொல்லி சாடை மட்டும் காட்டுனாரு.

மேசை மேல பொத்துனாப்புல பைய வச்சான் பய.

''மல போல நம்பியிருக்கேன் ஒங்கள. மாவட்டத்துக்கு எங்க குலசாமி நீங்கதாண்ணே. எப்பிடியும் செஞ்சு குடுத்துருங்கண்ணே.''

''பாப்பம்; என் கோட்டா இருக்குல்ல மாவட்டத்துக்கு'' மேசையில இருந்த அட்டையை ஒரு சைசாச் சாச்சு ஒரு தள்ளுத் தள்ளுனாரு பைய; பாம்பு வாயில விழுந்த தேரை மாதிரி பக்குன்னு ஓடி உள்ள விழுந்துபோச்சு பையி.

சட்டுன்னு எந்திரிச்சான் முத்துமணி.

''ராம்குமார்... ஒரு நிமிஷம் வெளிய இரு'', சத்தமாச் சொன்னவன் அவன் காதுக்குள்ள கமுக்கமாச் சொன்னான்; ''அண்ணன்கிட்ட அழுத்திச் சொல்லிட்டு வந்துர்றேன்.''

ரெண்டாவது கும்புடு போட்டுட்டு விசுக்குன்னு வெளியேறிட்டான் ராம்குமார்.

அவன் போன வேகத்துல ராம்குமார் கொடுத்த கவரைப் பனியனுக்குள்ள போட்டுக்கிட்டுத் தன் கவரை எடுத்தான் முத்துமணி.

''அண்ணே... அவன் என்கூடப் படிச்சவண்ணே அவன் கை கால்ல விழுந்து கடன் காசு வாங்கிட்டு வந்து குடுத்துருக்கேண்ணே. இது சத்தியமா உங்களுக்குச் சேர வேண்டிய காசுன்னுதான் அவனக் கூப்பிட்டு வந்தேன். இந்தக் கவர்ல இருக்குண்ணே என் விவரம். இந்த வேலைய எப்பிடியாச்சும் எனக்கு வாங்கிக் குடுத்துட்டீ கன்னா, மூணு தலமுறைக்கு ஒங்க காலடியிலேயே கெடக்கும் எங்க குடும்பம். உங்கள அமைச்சராக்கி அழகு பாக்கற வரைக்கும் எங்க அட்டணம்பட்டி ஓயாதுண்ணே.''

கவரைக் குடுத்தான்; கையப் புடிச்சான்; கண்ணுல தண்ணிய ஒழுகவிட்டான். விறுவிறுன்னு வெளிய வந்தான். சிநேகிதனக் கட்டிப் புடிச்சுச் சொல்றான்:

''ராம்குமார்... வேலை நிச்சயம். இது நம்ம நட்பு மேல சத்தியம்.''

''ஒன்ன மறக்க மாட்டேன் முத்துமணி. எங்க குடும்பமே ஒனக்குக் கடமைப்பட்டிருக்கு.''

நண்பனை பஸ் ஏத்தி அனுப்பிவச்சுட்டு சரசரன்னு சாராயக் கடைக்குப் போயி மூணு பாட்டில் தண்ணி அடிச்சான்; வறுத்த பன்னிக் கறி வாங்கி ஊறுகாயிலயும் லேசா ஒரசிக்கிட்டான்.

அடுத்தவன் காசு... வேல வாங்க;

அப்பன் ஆத்தா காசு... தண்ணியடிக்க.

ஏழே மாசத்துல வேலை வாங்கிட்டான் முத்துமணி. சத்தியமங்கலம் காட்டுல போயி வேலைய ஒப்புக்கொள்ளுன்னு 'ஆடர்’ வந்துருச்சு அட்டணம்பட்டிக்கு. மூணு சாமி மரத்துக்கும் 'விழுடா கால்ல’ன்னு விழுகவச்சு, அழுது திருநீறு கொடுத்து அனுப்பிவச்சாக அப்பனும் ஆத்தாளும்.

போனவன் போனவன்தான்; ஒரு தகவலும் இல்ல.

ஒரு நாள் உச்சிவெயில்ல அப்பனும் ஆத்தாளும் எள்ளுச் செடிக்குக் களைஎடுத்துக்கிட்டிருக்கப்ப வாரான் பய வரப்பு வழியா.

சூட்டும் சட்டையும் கறுப்புக் கண்ணாடி யும் மாட்டி ஒரு மார்க்கமா வந்த மகனப் பாத்ததும், ''வாடா மகனே வாடா வாடா''ன்னு வேர்வையும் புழுதியுமாத் தடுமாறி ஓடி வர்றா சிட்டம்மா.

''இப்பத்தான் கண்ணு தெரிஞ்சதோ துரைக்கு?''

அண்ணாந்து பாத்துட்டு அவர்பாட்டுக்குக் களை வெட்டிக்கிட்டிருக்காரு கருத்தமாயி.

மிச்சரு - அல்வா - பூந்தின்னு எள்ளுக் காடே மணக்குது.

''ஆத்தா இது என்னான்னு மோந்துபாரு.''

அவன் கொடுத்த கட்டைய மோந்துபாத்தா சிட்டம்மா.

''என்னடா மகனே இந்த மணம் மணக்குது?''

''சந்தனக் கட்டை. என்னைக்குக் குளிக்கிறியோ அன்னைக்கெல்லாம் உரசிக் குளி.''

''வீட்டுக்குப் போகலாம்டா மகனே. வெடக்கோழி அடிச்சுச் சாறுவச்சுத் தாரேன்.''

''அதிருக்கட்டும். மொதல்ல அப்பன் ஆத்தா ரெண்டு பேரையும் வச்சு ஒரு போட்டாப் படம் புடிக்கணும். ஆசை இருக்காதா உம் புள்ளைக்கு?''

ஆத்தா கையில கொத்துக்களையக் கொடுத்தான்; அப்பன் தோள்ல மம்பட்டிய மாட்டிவிட்டான்; நடுவுல அவன் நின்னுக்கிட்டு, ரெண்டு பேர் தோள்லயும் கை போட்டுக்கிட்டான். 'இப்ப எடு’ன்னான் கூட வந்தவன.

''சிரிங்க ரெண்டு பேரும்.''

வாழ்க்கையில ரெண்டாந்தடவையா சேந்து சிரிக்குதுக ரெண்டும். பெரியகுளம் மீனாட்சி போட்டாக் கடையில் சிரிச்சது மொதச் சிரிப்பு.

போட்டோ எடுத்தாச்சு.

''லீவு இல்ல. வாரேன்''னு வந்த வழியே போயிட்டான் முத்துமணி.

''எம்புட்டுப் பாசம் எம்புள்ளைக்கு எம்மேல'' ஒரு ஓரமா ஒக்காந்து அழுது மூஞ்சி வீங்கிப்போனா சிட்டம்மா.

மறுநாள் மாவட்ட வனத் துறை அலுவலர் மேசை மேல போட்டான் போட்டாவ.

''பாருங்க சார்! இவங்கதான் சார் என் தாய் - தகப்பன். இன்னைக்கு வரைக்கும் அவங்க சொந்தமா உழைச்சாத்தான் சார் சோறு. இப்பக்கூட இவங்கள நான் பக்கத்துல இருந்து பாத்துக்கலேன்னா, எங்கம்மா கொடுத்த பாலு என் உடம்புல ஒட்டுமா சார்? தயவுசெய்து என்ன திண்டுக்கல் சரகத்துக்கு மாத்திவிடுங்க சார். உங்க காலப் புடிச்சிருவன் சார், ஆனா உங்களுக்கு அது புடிக்குமோ புடிக்காதோன்னுதான் புடிக்காம இருக்கேன்.''

எறும்பு ஊரக் கல்லும் தேயும்பாங்க; இது பாம்பு. தேச்சேபுடுச்சு கல்ல.

மகன் மாத்தலாகி வந்ததும் மக கல்யாணப் பேச்ச எடுத்துட்டா சிட்டம்மா.

''ஏலே அய்யா முத்துமணி... உன் தங்கச்சியக் கரைசேக்கக் கருமாயப்பட்டுச் சேத்துவச்ச காசெடுத்து நீ லஞ்சம் கொடுத்து மஞ்சக் குளிச்சுக்கிட்ட, ஆளாகி வருசம் ஏழாயிருச்சுடா உன் தங்கச்சிக்கு. 'ஆணு வளத்தி அவரைக்கா வளத்தி, பொண்ணு வளத்தி புடலங்கா வளத்தி’ன்னு சொலவஞ் சொல்லுறது கணக்கா நிலைதட்டி வளந்து நிக்கிறா தேனு. மாப்ளைய நாங்க பாக்கறோம்; செலவ நீ பாக்கணும்டா மகனே.''

''பொட்டச்சிக்கு மாப்ள பாக்கறதுலயே இருக்கிற கெழவிக்கு, மகனுக்குப் பொண்ணுப் பாக்கணும்ங்கற எண்ணம் வந்திருக்கா என்னைக்காச்சும்? எனக்கும் வயசாகுதுல்ல. இப்பிடியே விட்டா ரெண்டே வருசத்துல பின்மண்டை கழிஞ்சிரும்; இல்ல முன்மண்டை நரைச்சிரும். அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும் இப்பச் சொல்றேன் கேட்டுக்குங்க. பொண்ணுக்கு மாப்ளைய நீங்க பாருங்க; எனக்குப் பொண்ண நான் பாத்துக்கிர்றேன். எது முந்துதோ, முடிப்போம்.''

அடுத்த ஆறே மாசத்துல பொண்ணுப் பாத்துட்டான் முத்துமணி.

பொண்ணு-ஆனைமலையான்பட்டி.

பேரு லச்சுமி.

பொண்ணுக்கு அப்பன் மேகமலை எஸ்டேட்ல கணக்கப்பிள்ளையா இருந்தவரு; ஆத்தா, பள்ளிக்கூட டீச்சரு.

வீடு சொந்த வீடு; ஏகப்பட்ட விவசாயம். புதுசா வாங்குன கார் ஒண்ணு நிக்குது வீட்டுல. எரநூறு பவுன் நகை கெடக்கு பொண்ணு கழுத்துல.

ஒரே புள்ள; அடுத்து எடுத்து ஆள ஆம்பள இல்ல வீட்டுல.

தங்கச்சிக்கு முன்ன தனக்கு முடிச்சிட்டான் கல்யாணத்த.

ஆனா, கல்யாணமாகிப் பொண்ணு மாப்ள மறுவீடு போய் வர்ற வரைக்கும் கருத்தமாயிக்கும் சிட்டம்மாவுக்கும் தெரியாது கட்டிட்டு வந்த பொண்டாட்டி ஒரு கைம்பொண்டாட்டின்னு.

லச்சுமிக்கு முதல் கல்யாணமான மூணு மாசத்துல பாளையத்துல படம் பாத்துட்டு வீடு திரும்பறப்ப சுருளித்தீர்த்த விலக்குல அடிச்சான் ஒரு லாரிக்காரன். அண்ணனும் புருசனும் அங்கேயே 'அவுட்’டு.

முத்துமணி தேடுனதெல்லாம் சொத்துள்ள ஒத்தப் பொண்ணு. எட்டுத் திசை தேடியும் இவதான் சிக்குனா. சேத்துக் குரவைய வேட்டி போட்டு அமுக்குற மாதிரி ஒரே அமுக்கா அமுக்கிட்டான்.

நெளிஞ்ச காரைப் பழுது பாத்து வீட்டுல கொண்டாந்து நிறுத்திட்டாரு மாமனாரு.

''லாபம் இருக்குன்னா, ஒடைஞ்ச காரைப் பழுது பாத்து ஓட்டுறமா இல்லையா..? ஒடைஞ்ச பொம்பளையப் பழுது பாத்து ஓட்டுனா மட்டும் என்ன தப்பு?'' இது முத்துமணி வாசகம்.

நெசம் தெரிஞ்சு அப்பன் ஆத்தா ரெண்டு பேரும் நெஞ்சப்புடிச்சு ஒக்காந்து போனாக.

அப்பறம் என்ன பண்றது? ஈசன் விட்ட வழின்னு ஒழுகுற கண்ணத் தொடச்சு ஒண்ணு கூடிட்டாக.

அப்பன் ஆத்தாகிட்ட ரூவா இருபத்தஞ்சாயிரத்த எண்ணி எடுத்துவச்சான் முத்துமணி.

''யப்பே! யாத்தே! நானும் குடும்பஸ்தனாகிப்போனேன். நாளைக்கு எனக்கு ஒரு புள்ள குட்டின்னு ஆகிப்போனா, நீங்க என்னிய வளத்த மாதிரி நான் அவங்கள வளத்துறக் கூடாது; நல்ல பொழப்புக் கொடுக்கணும். இந்தா இந்த ரூவாயவச்சு என் தங்கச்சி கல்யாணத்த நடத்துங்க. பத்தும் பத்தலேன்னாக் கேளுங்க. ஒன்ன மறந்துராதீங்க. இது மகன் ஒங்களுக்குத் தர்ற கடன். நாளைக்கே திருப்பிக் கொடுன்னு நச்சுப் பண்ண மாட்டேன்; என்னைக்கு வெள்ளாமை ஏறி விளையுதோ, அன்னைக்குத் திருப்பிக் கொடுங்க. வாரேன்.''

அப்பன் விட்ட கடன் - ஒண்ணு

பிள்ளைகளப் பெத்த கடன் - ரெண்டு

பெத்த பிள்ளைகிட்ட இப்பப் பட்ட கடன் - மூணு

மூச்சுப் பேச்சு இல்லாம நிக்குது மூணு கடன் பட்ட உசுரு.

- மூளும்