Published:Updated:

தல செம மாஸ் !

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார்

''இந்த முடிதான் என் சொத்து; இதுதான் என் அடையாளம். இது மட்டும்தான்!'' விறுவிறுவென தலைமுடியில் ஏகப்பட்ட ஸ்டைல் போட்டுக்கொண்டே பேசுகிறார் மாரி. 'வாலு’ படத்தில் ரோஷக்காரனாக சந்தானத்தின் முன் இரவு முழுக்க நின்றுகொண்டே இருப்பவரின் சிகை அலங்காரம்... செம மாஸ்! 

தல செம மாஸ் !

''என் தாத்தா, அப்பாவுக்கு எல்லாம் இதே மாதிரி முடிதான். கோவில்பட்டி பக்கத்துல துறையூர் கிராமத்திலும் அதைச் சுத்தியுள்ள எட்டுப்பட்டி பஞ்சாயத்திலும் எங்க குடும்ப ஹேர்ஸ்டைல் ரொம்ப ஃபேமஸ். எனக்கும் அதே கோரை முடிதான். இதைவெச்சே என்னைக் கிண்டலடிப்பாங்க. செம கோபம் வரும். அதனால இந்த முடியே வேண்டாம்னு மொட்டை அடிச்சுக்குவேன். ஊருக்குள்ள மொட்டைத்தலையாத்தான் பல நாட்கள் திரிவேன். ஆனா, கடவுள் நமக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த முடியைக் கொடுத்திருக்கார்னு தோணுச்சு... அதையே என் அடையாளமா ஏத்துக்கிட்டேன். அஞ்சாவதுக்கு மேல படிப்பு ஏறலை. ஆடு, மாடு மேய்ச்சுட்டு இருந்தப்ப பொழுதுபோகாம விதவிதமா ஹேர்ஸ்டைல் பண்ணிப் பார்ப்பேன். கையில கண்ணாடிகூட இருக்காது. முடியை டிசைன் பண்ணி வெயில்ல விழுற நிழல் வெச்சே டிசைன் எப்படி இருக்கும்னு பார்த்துப்பேன். எனக்கே காமெடியா இருக்கும். இப்படி ஊர் முழுக்க நானும் பிரபலம் ஆகிட்டேன். கிண்டல், கேலிகளுக்கு நடுவுல சில நண்பர்கள், 'இந்த முடியை வெச்சு சினிமா சான்ஸ் வாங்கிரலாம்டா. முயற்சி பண்ணிப் பாரு’னு சொன்னாங்க. பரோட்டா மாஸ்டர் வேலையை விட்டுட்டு சென்னைக்கு வந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தல செம மாஸ் !

சினிமாவுல சேர என்ன செய்யணும்? எதுவும் தெரியலை. கைக்காசு தீர்ந்ததும் திரும்ப பரோட்டா மாஸ்டரா வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேயும் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் பண்ணிக் காமிப்பேன். கிட்டத்தட்ட 44 விதமா டிசைன் பண்ணுவேன்.

தல செம மாஸ் !
தல செம மாஸ் !

லீவு போட்டுட்டு சினிமா வாய்ப்புத் தேடுறது... லீவு கிடைக்காதப்ப வேலையை விட்டுட்டு வாய்ப்பு தேடுறதுனு அலைஞ்சுட்டு இருந்தப்ப, விக்ரம் சார் நடிச்ச 'ராஜபாட்டை’ படத்துல ஜிம் பாய் வேஷம் கிடைச்சது. சந்தோஷத்துக்கு அளவே இல்லை. படம் முழுக்க விக்ரம் சார் ஃப்ரெண்ட் மாதிரி ஃப்ரேம்ல ஒரு ஓரமா நிக்கிற கேரக்டர். அப்போ விக்ரம் சாருக்கும் முடியில் நிறைய டிசைன் போட்டு காமிச்சேன். அவர் மகன் துருவுக்கும் டிசைன் போட்டு காமிக்கச் சொன்னார். ரெண்டு பேரும் செம குஷி ஆகிட்டாங்க. அப்புறம் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, 'ஜில்லா’ படங்கள்ல சின்னச்சின்ன கேரக்டர்ல நடிச்சேன். விஜய் சார் என் முடியைப் பார்த்துட்டு, 'தல செம மாஸ்’னு சொன்னார்.  'நண்பேன்டா’ படத்துல நடிச்சப்ப நயன்தாரா மேடம் என்னைப் பார்த்துட்டு, 'நான் என் முடியில் சுருள் சுருளா கர்ல் கொண்டுவரக் கஷ்டப்படுறேன். ஆனா, நீங்க டக் டக்னு பண்ணிடுறீங்க. என் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆகிடுறீங்களா?’னு சிரிச்சுட்டே கேட்டாங்க. சந்தானம் சாரும் என் முடியைப் பார்த்து மிரண்டுட்டார். சிம்பு சார் 'வாலு’ படப்பிடிப்புல என்னைப் பார்த்துட்டு, 'தல... தலய நல்லா பார்த்துக்கங்க’னு சிரிச்சார். ஒரு சீன்தான்... ஆனாலும் நச்னு வாய்ப்பு கொடுத்த 'வாலு’ பட இயக்குநர் விஜய் சந்தர் சாருக்கு பெரிய நன்றி சொல்லணும். இப்போ எங்க ஊர்ல நான் நடிச்ச சீன் வந்தப்ப தியேட்டர்ல செமயா விசில் அடிச்சிருக்காங்க. அதைவிட வேற என்ன சார் சந்தோஷம் வேணும்?! இப்பவும் சினிமா ஷூட்டிங் இல்லாத நாட்களில் மேஸ்திரி வேலை, பரோட்டா மாஸ்டர் வேலை பார்த்துட்டுத்தான் இருக்கேன். ஆனா, எனக்கு இந்த சினிமாதான் எல்லாம்!''

'குடும்பத்துல உங்க முடிக்கு என்ன ரியாக்ஷன்?''

தல செம மாஸ் !

''சம்சாரம் மகாலட்சுமி. அவங்களை நான் பொண்ணு பார்க்கப் போனப்போ நல்ல பிள்ளை கணக்கா முடியை ஒட்ட வெட்டிகிட்டேன். கல்யாணம் முடிஞ்சதும் நான் முடியை இப்படி வளர்க்க... அதிர்ச்சி ஆகிட்டாங்க. 'இவ்ளோ வேண்டாம். வெட்டிருங்க’னு சொல்வாங்க. அப்புறம் அந்த முடிதான் என் உயிர்னு அவங்களுக்கே தெரிஞ்சிடுச்சு. இப்ப ஒண்ணும் சொல்றது இல்லை. ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. அவங்களுக்கு எல்லாம் முடி என் மாதிரி இல்லை. இதுவரை இயல்பாத்தான் இருக்கு. 'மூணு குழந்தைங்க இருக்காங்க. ஒழுங்கா சினிமாவை விட்டுட்டு பொழப்பைப் பாரு’னு லட்சுமி சொல்லிட்டே இருக்கு. நம்ம பொழப்பே சினிமாதானேங்க!''

நீ கலக்கு 'தல’!