எதிர்த்த வீட்டுத் தோட்டம்... அடுத்த வீட்டுத் தோட்டம்... நம் வீட்டுத் தோட்டம்.... என்று விடாமல் தேடித் தேடி மருதாணி இலைகளைப் பறித்து வந்து... மாங்குமாங்கென்று அரைத்து; அழகழகாக கைகளில் டிசைன் செய்து, இரவெல்லாம் கண்விழித்து கலையாமல் பார்த்துக் கொண்டு; அதையும் மீறி தூங்கிப்போய் சட்டைத் துணிகளில் இலுப்பிக் கொண்டு...

உங்கள் வீட்டில் கல்யாணமென்றால்... இதை அனுபவித்திருப்பீர்கள்தானே!

மாறும் காலங்களுக்கேற்ப மருதாணியும் மாறிப்போய்... இப்போது பியூட்டி பார்லரில் மெகந்தியாக மெருகேறி நிற்கிறது!

ஆம், இப்போதெல்லாம் விதம்விதமான டிசைன்களில் மெகந்தி போடுவதுதான் கல்யாண ஃபேஷன்.

சென்னை ஐ.சி.எஃப். வடக்கு காலனியைச் சேர்ந்த ஹரிணிஸ்ரீ என்கிற சௌம்யாவுக்கு, 12 ஆண்டுகளாக மெகந்தி போடுவதுதான் தொழிலே!

''இக்சா மெகந்தி ஆர்ட்ஸ்ங்கற பெயரில், பதினைந்து விதமான மெகந்தி டிசைன்ஸ் போடுறது என்னோட ஸ்பெஷல். சாதாரணமா 100 ரூபாய்ல தொடங்கி 500 ரூபாய் வரைக்கும் சார்ஜ் பண்றேன். பிரைடல் மெகந்தியா இருந்தா 1,000 ரூபாய்ல தொடங்கி 4 ஆயிரம் வரைக்கும் போகும். தவிர, மெகந்தி போடுறதுக்கு பயிற்சியும் கொடுக்கிறேன்'' என்று சிரிக்கிறார் ஹரிணிஸ்ரீ!

பிரபல சாஃப்ட்வேர் நிறுவனமான 'டிசிஎஸ்' நிறுவனத்தில் பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த ப்ரியா, மணமகள்களுக்கு மெகந்தி போடுவதில் கில்லாடி.

''8 வயசுல இருந்தே மெகந்தி மேல ஆசை. அப்ப இருந்தே டிரை பண்ணதால.... இப்ப நான் மாஸ்டராவே ஆயிட்டேன். காலேஜ் டேஸ்ல... ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் போட்டு விடுவேன். காலேஜ் முடிச்ச பிறகு, திருச்சியில இருக்கற பியூட்டி பார்லர்ல பார்ட் டைமா மெகந்தி போட்டுட்டிருந்தேன். சில ஐடியாஸ்... கான்செப்ட்ஸ்னு டிரை பண்ணினேன். முதல் தடவையே க்ளிக் ஆயிடுச்சு. கிட்டத்தட்ட 6 வருஷமாத்தான் புரொஃபஷனலா கல்யாணத்துக்கு இதைச் செய்துட்டிருக்கேன். ஒரு கை முழுக்க மெகந்தி போடுறதுக்கு 1,000 ரூபாய். ஒரு காலுக்கு 750 ரூபாய்னு சார்ஜ் பண்றேன்.

இப்ப சென்னையில வொர்க் பண்றேன். ஓய்வு நேரத்துல மெஹந்தி போடுற வேலையை தொடர்ந்துட்டிருக்கேன். திருச்சியில எங்க வீட்டுல, 'ரைனோஸ்'ங்கற பேர்ல மெகந்தி போடறதுக்காக ஒரு சென்டர் இயங்கிட்டிருக்கு தெரியுமோ...'' என்று உற்சாகம் பொங்குகிறார் ப்ரியா!

- எம்.மரிய பெல்சின், பி.விவேக் ஆனந்த்

படங்கள்: பா.கார்த்திக், தே.தீட்ஷித்