திருமணத்தில் தாலி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சம்பிரதாய முக்கியத்துவம் பெற்றது மாலை. சம்பங்கி மாலையில் இருந்து, ரோஜா மாலை வரை மக்கள் தங்கள் வசதிக்கேற்றவாறு விதவிதமான மாலைகளை ஆர்டர் செய்கிறார்கள். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே... 'ஜோதிகா மாலைக்கு ஆர்டர் கொடுத்துடுங்க. அதுதான் மணமாலையா இருக்கணும்!' என்று கண்டிஷன் போடும் அளவுக்கு தமிழகம் முழுக்கவே புகழ்பெற்றிருக்கிறது அந்த மாலை!

'அது என்ன ஜோதிகா மாலை.?!

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் உள்ள 'பூக்கடை’ ஜான், அதைப் பற்றி ஆர்வம் பொங்கப் பேசுகிறார் கேளுங்களேன்...

''இதுவும் ரோஜா மாலைதான்.

சூர்யா / ஜோதிகா கல்யாணத்துக்கு இந்த வகை மாலையைத்தான் போட்டிருந்தாங்க. அதுல எல்லா பேப்பர், டி.வி-னு வந்து, எல்லாரையும் பேச வெச்சுடுச்சு. அதலிருந்தே 'ஜோதிகா மாலை’னு பெயர் வந்திடுச்சு. ஆனா, சூர்யா / ஜோதிகா கல்யாணத்துக்கு முன்ன இருந்து இந்த மாலையை நாங்க கட்டிகிட்டுதான் இருக்கோம். அப்போ எல்லாம் பெருசா வெளிய தெரியல. ஒரு சில ஆளுங்க மட்டும்தான் ஆர்டர் கொடுப்பாங்க. ஜோதிகா கல்யாணத்துக்குப் பிறகு, கல்யாணம்னாலே... இந்த மாலைக்குதான் அதிகம் ஆர்டர் வருது!'' என்றவர், மாலையைப் பற்றிச் சொன்னார்.

''முழுக்க முழுக்க ரோஜா இதழ்களை வெச்சுத்தான் இந்த மாலையை கட்டுவோம். இதுக்காக ஸ்பெஷலா ஓசூர்ல இருந்து ரோஜா வரும். ஒரு ஜோடி மாலை கட்டுறதுக்கு 200 பூக்கள் வேணும்.

ரோஜா இதழ்கள உதிர்த்துவிட்டு, ஒவ்வொரு இதழா எடுத்து மடிச்சு வெச்சு கட்டுவோம். பார்டருக்கு சவுக்கு வெச்சு, இடையில பிட்டு துணினு சொல்ற சின்ன துணிகளை வெப்போம். கல்யாணப் பொண்ணு எந்த கலர் புடவை கட்டுறாங்களோ, அதுக்கு மேட்சாவும் இந்த பிட்டு துணிகளோட கலர் இருக்கும். பிங்க், ஆரஞ்சு, மாம்பழ கலர், மெரூன்னு நாலு கலர் ரோஜா பூவுலதான் இந்த மாலையைக் கட்டுவோம். இதுல பிங்க் கலர்தான் அதிகமா கேக்கறாங்க. பிங்க், மாம்பழ கலர் ரெண்டும் கொஞ்சம் விலை அதிகம். ஜோடி... குறைஞ்ச பட்சம் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கொடுக்குறோம். மத்த ரெண்டு கலரும் 3 ஆயிரம் ரூபாய்னு கொடுக்குறோம்! கல்யாண வீட்டுக்காரங்களோட தேவையைப் பொறுத்து விலை அதிகரிக்கும்'' என்று சொன்னார்.

- ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்