Published:Updated:

காக்டெயில் @ கோக் ஸ்டுடியோ!

காக்டெயில் @ கோக் ஸ்டுடியோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

கோக் ஸ்டுடியோ @ எம்.டிவி. 2008-ம் வருடம் பிரேசிலில் ஆரம்பித்து, பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்திருக்கும் இசை உற்சவம். பிரேசிலில் ஸ்பானிஷ் இசை, பாகிஸ்தானில் கவாலி, சூஃபி எனும் இசை வடிவங்களோடு கோக் ஸ்டுடியோ நின்றுகொள்ள, இந்தியாவில் உள்ள அத்தனை இசை வடிவங்களையும் தன்னுள் அடக்கி ஒரு புது மாதிரியான ஃப்யூ ஷன் இசையை வழங்கிக்கொண்டு இருக்கிறது எம். டி.வி. அறுபதுக்கும் மேற்பட்ட பாடகர்களும், இசையமைப்பாளர்களும், கோக் ஸ்டுடியோவில் சங்கமித்து இருக்க... அதில் நான்கு பேரை மட்டும் சென்னைக்கு அழைத்துவந்து கான்செர்ட் நடத்தியது எம்.டி.வி. இடம் டப்ளின், பார்க் ஷெரட்டன் ஹோட்டல்.

 'நாக்கமுக்க’ சின்னப்பொண்ணு, ஏ.ஆர்.ரஹ்மானின் கிடாரிஸ்ட் சஞ்சீவ், அசாமைச் சேர்ந்த பிஃகு பாடகரான பாப்போன், சூஃபி பாடகி ஹர்ஸ்தீப் கௌர் என வண்ணக் கலவை வானவில். கான்செர்ட்டுக்கு முன்னால் கிடைத்த, கொஞ்சமே கொஞ்சம் நேரத்தில்,அவர் களோடு நடத்திய ஸரிகம கச்சேரி இது.

காக்டெயில் @ கோக் ஸ்டுடியோ!

''கோயில் திருவிழாவுலயும் கிராமத்துக் கச்சேரிகள்லயும் பாட்டுப் பாடின நான், அறிவுமதி அண்ணன் மூலமா சினிமாவுக்கு வந்தேன். ஆனா, எம்.டி.வி-யில் தமிழ்ப் பாட்டுப் பாடு வேன்னு நெனச்சதுகூட இல்லை. இந்த நிகழ்ச்சி யில கலந்துக்குறதுக்கு முன்னாடி எம். டி.வி. பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்ல!''- வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் சின்னப்பொண்ணு. இந்திக்காரர் களுக்கு சின்னப்பொண்ணுவின் பாடல்கள், அளவுக்கு அதிகமாகவே பிடித்திருக்கிறது. டெல்லிவாலாக்கள் அவருக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் 'சிரிப்புக் கொலைகாரி’யாம். கிடார் கதறல்களுக்கு இடையே சின்னப்பொண்ணு வின் தெம்மாங்குக் குரலுக்குத் துணை வருவது அவரது கணவர் குமாரின் தவில்.

காக்டெயில் @ கோக் ஸ்டுடியோ!

அடுத்து சஞ்சீவ். ரஹ்மானின் கிடாரிஸ்ட். 'கஜினி’, 'டெல்லி-6’ ஆரம்பித்து, அடுத்து வரப்போகும் ராக் ஸ்டார் வரை ஏராளமானரஹ்மான் பாடல்களுக்கு கிடார் வாசித்தவர். 'தலைவர் இப்போ இன்டர்நேஷனல் புராஜெக்ட்டுகளில் ரொம்பவே பிஸி. அந்த கேப்பில் நான் இந்தப் பக்கம் வந்துட்டேன். ஸ்டுடியோவுக்குள் ரீ-டேக் வாங்கி வாசிப்பதைவிட, ஆடியன்ஸ் முன்னால் வாசிப்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும்'' என்னும் சஞ்சீவ், பாடகரும்கூட. இவரும்சின்னப் பொண்ணும் இணைந்து பாடிய 'இந்தியன் ஜடூ’ ஆல்பம்தான், சின்னப்பொண்ணுக்கு எம்.டிவி. வாய்ப்பைத் தந்தது.

பாப்போன், அஸ்ஸாம் நாட்டுப்புறப் பாடலான பிஃகு பாடல்கள் பாடுவதில் வல்லவர். நாட்டுப் புறப் பாடகர் என்றதும் நம் மனதில் அவர் தோற்றத்தைப் பற்றிய ஒரு கற்பனை இருக்கும். அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, ஜடாமுடி, ஸ்டோன்வாஷ் ஜீன்ஸ் எனக் கலக்கலாக இருக் கிறார் பாப்போன்.

'பாப்மார்லே ஆஃப் இந்தியா’ - இது இவருக்கு யூ-டியூப் ரசிகர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர். ''திரையிசை என்று தனியாக ஏதும் இல்லாத அஸ்ஸாம்காரர்களுக்கு, எலெக்ட்ரோ கஜல், அகஸ்ட்டிக் ஃபோக்னு என்னால் முடிந்த அளவுக்குப் புது மாதிரியான இசையைத் தரு கிறேன்'' என்கிறார்.  

ஹர்ஷ்தீப் கௌர், கோக் ஸ்டுடியோவின், மிக இளம் வயதுக் கலைஞர். வடஇந்திய சேனல்கள் எந்தப் பாட்டுப் போட்டி நடத்தினாலும், முதல் பரிசு இவருக்குத்தான். 'டார்லிங் ஆஃப் ரியாலிட்டி ஷோஸ்’-இது இவரின் செல்லப் பெயராம்.

ஆறு வயதில் இருந்து சூஃபி இசையைக் கற்று வரும் இவர் பாட ஆரம்பித்தால், கண்கள் திறப்பது இல்லை. ஹை-பிட்ச்சில் பாடும்போது முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல், தியானம் போலப் பாடுகிறார். ''சூஃபி பாடல்களைப் பாடும்போது என்னால் கண்களைத் திறக்க முடிவது இல்லை. கடவுளைக் காதலனாக, தந்தையாக, சகோதரனாக நினைத்து உயிர் உருகிப் பாடுகிறேன். மிக அழகான பாடலை ரசிகர்கள் கேட்டுக்கொண்டு இருக்கும்போது முகபாவனைகள் அஷ்டகோணலாகப்போனால், அவர்கள் தேவையில்லாமல் டிஸ்டர்ப் ஆவார் கள்'' - வயதுக்குச் சம்பந்தமே இல்லாமல் வந்து விழும் வார்த்தைகளில் அவ்வளவு முதிர்ச்சி.

சின்னப்பொண்ணுவின் தெம்மாங்குப் பாட்டுக்கு ஹர்ஷ்தீப் இடையிடையே சேர்க்கும் பல்லே... பல்லே... பாங்ரா இசையும் பாப்போனின் பாக்... பாக்... பாடலுக்குச் சேர்க்கப்படும் சஞ்சீவின் கிடார் இசைச் சிதறல்களும் மொழி கடந்து பயணிக்கும்  தன்மைகொண்டது!

- மோ.அருண்ரூப பிரசாந்த்,படங்கள்: ஜெ.தான்யராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு