இன்ஷுரன்ஸ் இப்போ ஈஸி -1

ருத்துவ சிகிச்சை, இன்றைக்கு மிகவும் செலவுபிடிக்கிற விஷயம். சாதாரண காய்ச்சல் என்றாலே 500 ரூபாய் வரை சர்வ சாதாரணமாக செலவாகிறது. இன்னொருபுறம், மாரடைப்பு, புற்றுநோய், மூட்டுவலி போன்ற செலவு பிடிக்கும் நோய்களால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவருகிறது.

இந்தியாவில், 10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பணம் செலுத்தக்கூடிய அளவுக்கு வசதி பெற்றவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இதுபோன்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வது? அதற்கான அற்புதத் தீர்வாக வந்திருப்பதுதான் ‘மெடிக்ளெய்ம் பாலிசி’ எனப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இங்குள்ள ஏரளமான மெடிக்ளெய்ம் பாலிச்களில் எது சிறந்தது எனத் தெரிந்துகொண்டு வாங்குவது நல்லது. ஆனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கட்டாயம் மெடிக்கல் பாலிசி கவரேஜ் இருப்பது அவசியம். தனிநபர் காப்பீட்டுக்கும் குடும்பம் முழுமைக்குமான காப்பீட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காப்பீடு செய்வதற்கு பதிலாக, மொத்தமாகக் குடும்பத்துக்கு என ஒரு காப்பீடு செய்வது சிறந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெடிக்ளெய்மின் அவசியம் பற்றி அடுத்த இதழில்...

இன்ஷுரன்ஸ் இப்போ ஈஸி -1

பாலிசி அலசல்

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் கேன்சர் கேர் பாலிசி

சென்ற வாரம் வரை நன்றாக சிரித்துப் பேசிய நண்பரோ, உறவினரோ திடீரெனப் புற்றுநோய் என சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்போம். கிட்டத்தட்ட நாம் அனைவருமே புற்றுநோய் தொடர்பான பயத்துடனேயேதான் வாழ்கிறோம். புற்றுநோயை எதிர்த்துப் போராட, தைரியம் மட்டும் இருந்தால் போதாது. பணமும் தேவை. சிகிச்சைக்குப் போதுமான நிதி வசதி இல்லாமல்தான் பலரும் உயிர் இழக்கிறார்கள். இந்தப் பணச் சுமையைக் குறைக்கும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது ‘ஹெச்.டி.எஃப்.சி லைஃப் கேன்சர் கேர்’ பாலிசி.

மிகக் குறைந்த ப்ரீமியத்தில் புற்றுநோய்க்கான பாலிசியை இது அளிக்கிறது. 18 வயது முதல் 65 வயது வரை யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்கலாம். ஆன்
லைனிலேயேகூட இந்த பாலிசியை எடுக்க முடியும்; எந்தப் பரிசோதனையும் தேவைப்படாது.

பாலிசி எடுத்து 180 நாட்களுக்குள் புற்றுநோய் கண்டறியப்பட்டால், காப்பீடு கவர் ஆகாது. இதை, ‘காத்திருப்புக் காலம்’ என்கின்றனர். ஒருவேளை, 180 நாட்களுக்குப் பிறகு புற்றுநோய் கண்டறியப்பட்டால், அவர் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற முடியும். புற்றுநோய் ஆரம்பநிலையில் இருப்பது கண்டறியப்பட்டால், அவருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாலிசி ப்ரீமியம் கட்டுவதில் இருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது. இந்த பாலிசி குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 40 லட்சம் ரூபாய் வரை பாதுகாப்பு அளிக்கிறது.

• இந்த பாலிசியில், ‘சில்வர்’, ‘கோல்டு’, ‘பிளாட்டினம்’ எனும் மூன்று வகையான பிளான்கள் உள்ளன.

• சில்வர் பிரிவில், ஆரம்ப நிலையிலோ முற்றிய நிலையிலோ புற்றுநோய் கண்டறியப்பட்டால், மொத்த சிகிச்சை செலவையும் அளிப்பதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ப்ரீமியம் கட்டுவதில் இருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது.

• கோல்டு பிரிவில், சில்வர் பிரிவில் அளிக்கப்படும் சலுகையுடன் ஒவ்வோர் ஆண்டும் மொத்த பாலிசி தொகையில் 10 சதவிகிதம் அதிகரிக்கப்படும். அதாவது, 10 லட்ச ரூபாய் பாலிசி எடுத்தால், அடுத்த ஆண்டு பாலிசி மதிப்பு 11 லட்சமாக இருக்கும். ஆனால், 10 லட்சத்துக்கான ப்ரீமியம் மட்டும் கட்டினால் போதும்.

• பிளாட்டினம் பிரிவில், சில்வர் மற்றும் கோல்டு பிரிவு சலுகையுடன், மிக மேஜரான கேன்சர் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாதம்தோறும் மொத்தக் காப்பீட்டுத் தொகையில் 1 சதவிகிதம் நிதி உதவியாக அளிக்கப்படும். அதாவது, மூன்று ஆண்டுகளுக்கு ப்ரீமியம் செலுத்துவதில் இருந்து விலக்கு, ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகித் அதிகரிப்பதுடன், 10 லட்சம் பாலிசி எடுத்திருந்தால் அவர்களுக்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்.

• 35 வயதுடைய ஆண், 20 ஆண்டு காலத்துக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு பிளாட்டினம் பாலிசியை எடுத்தால், அவர் ஒவ்வோர் ஆண்டும் பாலிசி கட்டணமாக, வரிகள் உட்பட ரூ.4,620 செலுத்த வேண்டியிருக்கும். கோல்டு, சில்வர் பாலிசி என்றால் இதைவிடக் குறைவான ப்ரீமியமே வரும். பெண்களுக்குப் புற்றுநோய்க்கான வாய்ப்பு சற்று அதிகம் என்பதால், ப்ரீமியம் இரட்டிப்பாகிறது. 35 வயதுள்ள பெண், 20 ஆண்டு காலத்துக்கு, ரூ.20 லட்சத்துக்கு பாலிசி எடுக்கிறார் என்றால், அவர் ஆண்டுக்கு ரூ.8,931 செலுத்த வேண்டும். பாலிசி எடுப்பதற்கு முன்பு தீவிரமாக ஆலோசனைசெய்து முடிவு செய்வது நல்லது.

• புற்றுநோயை ஆரம்பநிலையில் கண்டறிந்தால், அதை எளிதில் குணப்படுத்த முடியும் ஆனால்,  முழுமையாகக் குணப்படுத்த அதிகப் பணம் செலவாகும். இதுபோன்ற காப்பீடு இருந்தால், மிகத் துணிவுடன் புற்றுநோயை விரட்ட முடியும்.

- பா.பிரவீன் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism