Published:Updated:

நெல்லையில் பெண்கள் திருவிழா!

நெல்லையில் பெண்கள் திருவிழா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

நெல்லை ஹலோ எஃப்.எம். மற்றும் ஆசீர்வாத் ஆட்டா இணைந்து சோனா மஹாலில் நடத்திய 'லேடீஸ் டே’ நிகழ்ச்சிக்கு செம ரெஸ்பான்ஸ். நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி மாவட்டத்தில் இருந்து வந்து குவிந்து விட்டார்கள் பெண்கள். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, சித்தாடைக் கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்பு சுந்தரி மாதிரி மேடை ஏறினார் 'அக்கம் பக்கம்’ சரண்யா. முதல் நிகழ்ச்சி 'ஜஸ்ட் எ மினிட்’. மேடையில் ஏறி ஒரு நிமிடத்தில் ஏதாவது ஒரு திறமையைக் காட்ட வேண்டும். தச்சநல்லூர் வசந்தா, 'கங்கைக்கரைத் தோட்டம்.. கன்னிப் பெண்கள் கூட்டம்... கண்ணன் நடுவினிலே...’ என்று பாட,  முன் வரிசைப் பெண்கள் அனைவரும் தொகுப்பாளர் மணிகண்டனைக் கைகாட்டி னார்கள். அடுத்தது, 'லெட்ஸ் வார்ம் அப்’. அதாவது, கடலை உடைக்கும் போட்டி. ஒரு நிமிடத்தில் யார் அதிக கடலை உடைக்கிறார் களோ, அவர்களே வின்னர்ஸ். மேடையில் போட்டி நடந்துகொண்டு இருக்கும்போதே பல இளம் பெண்கள் செல்போனில் கடலை போட்டுக்கொண்டு இருந்தார்கள். அடுத்ததாக, வித்தியாசமான சமையல் போட்டி. சீதாலட்சுமி, வெண்மதி

நெல்லையில் பெண்கள் திருவிழா!

மேற்பார்வையில் நடந்தது. சப்பாத்தி மாவு ஒரு உருண்டை கொடுத்து, அதில் யார் அழகான பொம்மை செய்கிறார்களோ அவருக்கே வெற்றி. மேலப்பாளையம் ஹரியா அழகான டெடிபியர் செய்து பரிசைத் தட்டிச் சென்றார். க்ளைமாக்ஸ் நிகழ்ச்சியாக 'ஃபேஷன் ஷோ’. முதலில் ஆலங்குளம் ஜெயந்தியும் பானுமதியும் மேடை ஏறி 'கேட் வாக்’கினார்கள். அவர்களை அடுத்து என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த 72 வயது கோமதி ராமலிங்கம் பாட்டி காதில் பாம்படம், இடுப்பில் சுருக்குப் பை சகிதம் மேடை ஏறி வர, அரங்கம் அதிர்ந்து அடங்கியது. பாட்டி கேட் வாக் எல்லாம் நடக்கவில்லை. மேடையில் ஓர் ஓரமாக உட்கார்ந்து வெற்றிலை இடிக்க ஆரம்பித்துவிட்டார். ஃபேஷன் ஷோ பெண்கள் அனைவருக்கும் பரிசு கொடுத்துச்

நெல்லையில் பெண்கள் திருவிழா!

சந்தோஷப்படுத்தினார்கள். நிகழ்ச்சியின் இடையிடையே திருநெல்வேலி எஸ்.ஏ. கல்லூரி மாணவர் இப்ராஹிம் சிலம்பாட்டம், தீ விளையாட்டு, சுருள் வாள், இரட்டை வாள் விளையாட்டு, நுன்ஷாக் போன்ற வீர தீரச் செயல்களை நடத்திக் காட்டினார். அவருக்குப் போட்டியாக ராணி அண்ணா கல்லூரி மாணவிகளும் வீர விளையாட்டில் அசத்தினார்கள்!

நெல்லையில் பெண்கள் திருவிழா!

 - ஆ.கோமதிநாயகம், படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு