Published:Updated:

பச்சை குத்தி வெச்சிருக்கேன் துரையம்மா!

பச்சை குத்தி வெச்சிருக்கேன் துரையம்மா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

ப்பும் மந்தாரமுமாக மழை மேகம், பத்து நிமிடத்தில் சுள்ளென்று வெயில் என்று பருவநிலை மாறி மாறி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தது. ஆனாலும்,  'விடுவேனா பார்’ என்று சொத்திக்குப்பம் கடற்கரையில் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தனர் சில இளைஞர்கள். அவர்களைக் கஷ்டப்பட்டு கரையேற்றிப் பேச்சு கொடுத்தோம். கடலூர் கிருஷ்ணசாமி பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் செட்டாம். வாராவாரம் இப்படி கடற்கரைக்கு ஆட்டம் போட வந்துவிடுவார்களாம்.

 ''அண்ணா கடலூர்ல சீனியர் லெவல்ல டெவில் பாய்ஸ் யாருமே இல்லைங்கிற குறையை எங்க டீம்தான் தீர்த்துவைக்குது'' என்று இன்ட்ரோ கொடுத்த அஸ்வின்தான் கேங் லீடர். அப்படி அஸ்வினே சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளும்போதே, ''சார் அஸ்வின் மான் கராத்தே மன்னன் சார்!'' என்று பின்னால் இருந்து ஒரு குரல்! இப்போது கேங் அந்த உள்குத்து மன்னனைச் சூழ்ந்துகொண்டது

''சார் இவருதான் எங்க டீம் ஆர்யா. பையன் எமி ஜாக்சனை நெனைச்சு நெனைச்சு துரும்பா இளைச்சுப் போறான். நாங்க எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டோம்... மனசை மாத்திக்க மாட்டேங்குறான். நீங்களாவது எமி ஜாக்சன்கிட்டே இவன் காதலை எடுத்துச் சொல்வீங்களா?'' என்று நம்மையே லந்தடிக்கிறார்கள். கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அது உண்மைதான் என்று தெரிகிறது. எமி என்று நெஞ்சில் பச்சை குத்தியிருக்கிறார் புகழேந்தி.

பச்சை குத்தி வெச்சிருக்கேன் துரையம்மா!

''சார் எமிக்கு என்னைவிட ரெண்டு வயசுதான் அதிகம். ஆனாலும், பரவாயில்லை சமாளிச்சுக்குறேன் சார்'' என்று புகழேந்தி சீரியஸாகப் பேச, சபை களை கட்டுகிறது.

பாக்ஸர் ராகுல், டெரர் ஆகாஸ், லேடீஸ் மணி, வண்டு முருகன், அழகர்சாமி அப்பு என ஆளாளுக்கு பட்டப் பெயர்களை அள்ளித் தெளித்து ரோடு போட்டு, கோடு போட்டு கோலம் போட்டார்கள்.

பச்சை குத்தி வெச்சிருக்கேன் துரையம்மா!

உள்ளூராகவே இருந்தாலும் செலவுக்கு ஸ்பான்ஸர் பிடித்துக்கொண்டுதான் வெளியே கிளம்புவார்களாம். இந்த வாரம் டீமுக்கான ஸ்பான்ஸர் சொத்திக்குப்பம் ஜெகதீஷ். (இளிச்சவாயரின் நாகரிகப் பெயர்தான் 'ஸ்பான்ஸர்’!) ''நம்ம ஸ்பான்ஸர் சொத்திக்குப்பம் ஜெகதீஷ§க்கு 'ஓ’ போடுங்கடா!'' என்று ஒரு சேரக் கூட்டம் 'ஓ’ போடுகிறது.

யுவேஸ், மொபினாவை சைட் அடிக்கும் கதையை ஒருவன் எடுத்துவிட, ''சார் அநியாயத்துக்கு வெக்கப்படுறான் யுவேஸ். மொபினா அவன் அத்தைப் பொண்ணுதான். அதனால, நீங்க வெட்கப்படாம இந்தப் புனிதமான காதலைப் பதிவு பண்ணுங்க''  என்று எடுத்துக் கொடுக்கும் ஜெகதீஷ், பாக்ஸிங் கிளாஸ் போகிறாராம். 'ஏதோ இவன் இருக்குற தைரியத்துலதான் எங்க வண்டியே ஓடுது’ என்று ஜெகதீஷ§க்கு மீண்டும் ஒரு 'ஓ’ போடுகிறது மொத்தக் கூட்டமும்.

''சார் எங்க பேரு, ஊரைப் போடுங்க. ஆனா, ஸ்கூல் பேரை மட்டும் போட்டுடாதீங்க. அப்புறம், நாங்க வெளியே வந்தாலே கூட்டம் கூடி ஆட்டோகிராஃப் கேட்கும். கடலூர்ல எங்க பிரைவஸி போயிடும்'' என்று கூலாகச் சொல்லிவிட்டு நம் பெயர்களை விசாரித்தார்கள். நாமும் பெயர்களைச் சொன்னதும் கூச்சல் எழுந்தது... ''நம்ம மகேந்திரன் அண்ணனுக்கும் தேவராஜன் அண்ணனுக்கும் ஒரு 'ஓ’ போடேய்!''

- நீரை.மகேந்திரன், படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு