Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

வே.கிருஷ்ணவேணி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

வே.கிருஷ்ணவேணி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

‘அலைபாயுதே’ முதல் ‘ஓ காதல் கண்மணி’ வரை..!

திருமணம், குழந்தை வளர்ப்பு, பொரு ளாதாரச் சிக்கல்கள், பாலியல் தொல்லை என பெண் உலகின் பிரச்னைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் அழகாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த குடும்பநல ஆலோசகர் ஜெ.வசந்தகுமாரி...

•  ‘‘கடந்த 10, 15 ஆண்டுகளில் திருமண உறவு எப்படி மாறியிருக்கிறது என்பதற்கு, மணிரத்னம் இயக்கத்தில் 2000-ல் வெளியான ‘அலைபாயுதே’ மற்றும் 2015-ல் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படங்களை உதாரணமாகச் சொல்லலாம். தாலி கட்டிக்கொண்டு தனித்து வாழ்வது, தாலிக்கு முன்னே ஒன்றாக வாழ்வது என கால ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் இந்தப் படங்களின் பொதுத்தன்மை... பிரிவு! விவாகரத்துகள் பெருகி வரும் சூழலில், பிரிவைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பேசுவது அவசியமாகிறது.

•   உறவுகள், பணம்... இதற்கு இடையில்தான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது பலரின் வாழ்க்கையும். உறவுகளை அனுசரித்துப் போகத் தெரியாமல் நிம்மதி இழக்கும் கூட்டம் ஒரு பக்கம்; பணத்தை சம்பாதிக்கச் சந்திக்கும் பிரச்னைகள், சம்பாதிக்கும் பணத்தைக் கையாள்வதில் பிரச்னைகள் என்று சுழன்றுகொண்டிருக்கிற கூட்டம் ஒரு பக்கம். இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம் கைகூடிவிட்டால், வாழ்க்கை ‘கூல்’ ஆகிவிடும்!

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

•  ஒரு சைக்காலஜிஸ்டாக, என்னிடம் கவுன்சலிங்குக்கு வரும் பலதரப்பட்ட மக்களிடம் நான் கவனித்த முக்கிய விஷயம்... பெரும்பாலானவர்கள் தாங்களே தங்களின் பிரச்னைக்குக் காரணமாக இருக்கிறார்கள். நீங்களும்கூட இந்த வகைப்பாட்டில் வரலாம்!

•   இளம்பெண்களுக்கு சமுதாயத்திலும்,  பணி செல்லும் பெண்களுக்கு அலுவல் சூழலிலும் ஏற்படும் பாலியல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளை சமாளிக்கத் தேவை... தெளிவும், தைரியமும்!

•  இன்று பல தாய்மார்கள் குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதுகூட, அந்தப் பேரனுபவத்தை உணர்ந்து மனநிறைவோடு செய்வதில்லை. ‘இந்த நேரம் குழந்தைக்குப் பாலூட்டணும்’ என்று அதையும் அட்டவணைப்படியே செய்கிறார்கள். குழந்தை வளர்ப்பு பற்றிய ஆலோசனைகளை, தாய்ப்பாலில் இருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது இன்றைய மம்மீஸ்களுக்கு!

- இவற்றுடன், இன்னும்  பலதரப் பட்ட பிரச்னைகளோடும், அவற்றுக்கான  தீர்வுகளோடும் காத்திருக்கிறேன்... கேளுங்கள்!’’ எனும் ஜெ.வசந்தகுமாரி, ‘கலங்காதிரு மனமே’ குரல் ஒலியில், 044-66802912* எண்ணில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 வரை பேசுகிறார். டயல் செய்யுங்கள்... குழப்பங்கள், பிரச்னைகளை சால்வ் செய்யுங்கள்!

* சாதாரண கட்டணம்