Published:Updated:

நிலா வந்தாச்சு... கிருஷ்ணா வந்தாச்சு!

புதுவை புதுமை மணல் சிற்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

கால்களை அலை நனைக்கும் கடற்கரை மணலைக் கண்டால் நமக்கு கவிதை வரும். ஆனால், புதுவை குபேந்திரனுக்கோ சிற்பம் வருகிறது! புதுச்சேரி அரியாங்குப்பம் அருகில் உள்ள வீராம்பட்டினம் கிராமத்தில் மீனவக் குடும்பத்தில் பிறந்த குபேந்திரன் ஆயில் பெயின்டிங், மணல் சிற்பம், சுடு மண் சிற்பம் என்று விதவிதமாகக் கலை வண்ணம் படைக்கிறார்.

 ''முழுக்கவே கடலன்னையை நம்பித்தான் எங்கப் பிழைப்பே. எட்டு வயசிலே முதன்முதலா பெயின்டிங் பிரஷ் பிடிச்சு வரைய ஆரம்பிச்சேன். அடுத்தடுத்த வருஷத்துலே போர்ட்ராய்ட் பண்ற அளவுக்கு முன்னேற்றம்.  ஆனா, வீட்டைப் பொறுத்தவரை பிரஷை எடுத்தாலே பெயின்ட் அடிக்கிற தொழில் தான்னு நினைச்சாங்க. அதனால், ஓவியம் வரைய ஆரம்பிச்சாலே அண்ணன்கிட்டே செம அடி விழும். ஸ்கூல் முடிச்சதும் விடாப்பிடியா புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்தில் சேர்ந்தேன். மணல் சிற்பம், ஆயில் பெயின்டிங், சுடுமண் சிற்பம்னு எல்லாமே கத்துக்கிட்டேன். அறிவியல் புத்தகம், வரலாற்றுப் புத்தகத்தில் உள்ள படங்களைப் போர்ட்ராய்ட் செய்தேன். இப்படி போர்ட்ராய்ட் பண்ணிப் பழகியதுதான் இப்போ மணல் சிற்பம் செய்ய உதவுது.

நிலா வந்தாச்சு... கிருஷ்ணா வந்தாச்சு!

அப்பாகூட கடலுக்குப் போய்ட்டு வந்தா 500 ரூபா கிடைக்கும். அவ்வளவா மீன் சிக்கலைனா வெறும் 200 ரூபாதான் கிடைக்கும். அதுதான் பாக்கெட் மணி. அதை வெச்சுதான் சார்ட், பிரஷ் எல்லாம் வாங்குவேன். வீட்ல தொடர்ச்சியா பிரச்னைகள் இருந்ததால் தனியா ஸ்டுடியோ வெச்சு வரையத் தொடங்கினேன்.

நிலா வந்தாச்சு... கிருஷ்ணா வந்தாச்சு!

சின்ன வயசிலே அப்பாகூட கடலுக்குப் போகும்போது நடுக்கடலில படகு நிக்கும்போது  குட்டிக் குட்டி மீன்கள்லாம் போட்டுக்கு கீழே வந்து நிற்கும். அதை மனசுல வெச்சி குட்டி மீன்களை ஓவியமா வரைஞ்சேன். நல்ல வரவேற்பு. எங்க மேடம் கீர்த்தி சந்தக்தான் என் குரு. அவங்க கொடுத்த ஊக்கம் காரணமா விதவிதமா மீன் ஓவியங்கள் வரைந்தேன்.  ஓவியங்கள் வரைஞ்சு முடிக்க குறைஞ்சது 20 நாட்களாவது ஆகும்.

இப்போ வீட்லயும் ஆதரவு கிடைக் குது. கடைசியா வரைஞ்ச ஒரு பெயின் டிங் 50 ஆயிரத்துக்கு விலை போச்சு. அந்தக் காசை அப்படியே அம்மாகிட்ட கொடுத்தேன். அவ்வளவு சந்தோஷம். அடுத்து பெங்களூரு ஓவியக் கல்லூரியில் சேர அனுமதி கிடைச்சிருக்கு. அங்கே ஸீட் கிடைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை. அங்கே சேர்றது பல கலைஞர் களுக்கு கனவு. அது எனக்கு நனவாகி இருக்கு!''-குதூகலம் பொங்குகிறது குபேந்திரன் வார்த்தைகளில்.

நமக்காக 'தெய்வத் திருமகள்’  மணல் சிற்பம் செய்ய நான்கு மணி நேரம் ஆனது குபேந்திரனுக்கு. முடித்ததும் பார்த்தால்.. ஆஹா, நிலா வந்தாச்சு... கிருஷ்ணா வந்தாச்சு!

- நா.இள.அறவாழி, படம்:ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு