Published:Updated:

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ் விகடன் டீம்படங்கள்: சு.குமரேசன், எம்.விஜயகுமார், ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார், தி.ஹரிஹரன், குகன்

னந்த விகடன் - ராகவா லாரன்ஸ் இணைந்து செயல்படுத்தும் 'அறம் செய விரும்பு’ திட்டத்தின் கீழ், சில பெரும் திட்டங்களுக்கான ஆலோசனைகளும் ஆய்வுசெய்யும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. அடுத்தடுத்த இதழ்களில் விவரங்கள் வெளியாகும். இந்தத் திட்டத்துக்கு என ஆறாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தன்னார்வலர்கள் பற்றிய அறிமுகம் இங்கே... 

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

பாஸ்கர் சக்தி (எழுத்தாளர்)

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

'வெண்ணிலா கபடிகுழு,’ 'நான் மகான் அல்ல’ படங்களின் வசனகர்த்தா, 'அழகர்சாமியின் குதிரை’ படக் கதாசிரியர். ''பெற்றவர்கள் சிறை சென்ற பிறகு ஆதரவு இல்லாமல் நிற்கும் குழந்தைகள் தங்களின் படிப்பு, உணவு போன்ற விஷயங்களுக்கு யாரிடம் யாசகம் கேட்பார்கள்? அப்படியான குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மூலம் உதவ விருப்பம்'' என்கிறார்!

ஜோதிமணி (இளைஞர் காங்கிரஸ் செயலாளர்)

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

அரசியலில் நம்பிக்கையையும் மாற்றத்தையும் உண்டாக்க உழைத்துவரும் இவர் ஓர் எழுத்தாளரும்கூட. ''கரூர் பகுதி முழுக்க நிலத்தடிநீர் அதிக அளவிலான போர்வெல்களால் உறிஞ்சப்படுகிறது. அதனால் மரம் நடும் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிறேன். அதில் முடிந்தவரை குழந்தைகளையே பங்குபெறச் செய்து ஆளுக்கு ஒரு மரத்தைக் கொடுத்துப் பராமரிக்கச் செய்ய விருப்பம்!''

ராஜு முருகன் (திரைப்பட இயக்குநர்)

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

'வட்டியுமும் முதலும்’ பத்திரிகையாளர், 'குக்கூ’ திரைப்பட இயக்குநர். எளிய மக்களின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களை ஆவணப்படுத்த எப்போதும் உன்னிப்பாகச் செயல்படுபவர். ''கல்வியும் சுற்றுச்சூழலும்தான் நாளைய சமூகத்தை வடிவமைக்கக்கூடியவை. இயற்கையைக் காக்கும் விழிப்புஉணர்வை கல்வி மூலமே உண்டாக்க முடியும். இந்த இரண்டு துறைகள் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்'' என்கிறார்!

கோபி (சமூக ஆர்வலர்)

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

வழக்கமான சினிமாக்களுக்கு இடையே மாற்று சினிமாவை உருவாக்கத் துடிக்கும் ஆர்வலர். விளிம்புநிலை மனிதர்களின் கதைகளைப் பதிய முனைபவர். ''மருத்துவச் செலவைச் சமாளிக்க முடியாமல் வாடிக்கொண்டிருப்பவர்களுக்கு உதவுவேன். அனுதினமும் பல சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ விருப்பம்'' என்கிறார்!

'லிவிங் ஸ்மைல்’ வித்யா (சமூக ஆர்வலர்)

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடுபவர். ''நலிந்துகிடக்கும் நாடகக் கலைஞர்கள் கவனிப்பார் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் நிலையைப் பற்றி கவலைப்பட, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ இந்தத் திட்டம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறது'' என்கிறார்!

இளமதி (ஊடகவியலாளர்)

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 'ரௌத்திரம் பழகு’ நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட். 10 வருட பத்திரிகையாளர் அனுபவமும் உள்ளவர். மக்களின் பிரச்னைகள், முன்னேறத் துடிப்பவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது எனப் பல விஷயங்கள் செய்துவருகிறார். ''சுற்றுச்சூழல் பிரச்னைகள் உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும். இது அடித்தட்டு மக்களைத்தான் உடனடியாகப் பாதிக்கிறது. இயற்கை சார்ந்த விஷயங்களைக் காக்க என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன்'' என்கிறார்.

ஃப்ராங்ளின் (ஆசிரியர்)

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

13 மாணவர்கள் மட்டுமே படித்த பள்ளியில் ஓர் ஆசிரியராக ஒன்றரை ஆண்டுகள் பணிசெய்தவர். அங்கு இருந்து செல்லும்போது 37 மாணவர்களாக எண்ணிக்கையை உயர்த்தி இருந்தார். ''கிராம மக்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உழைத்துக்கொண்டிருக்கிறேன். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தைப் புரியவைத்து, அவர்களையும் இணைத்துக்கொண்டால்தான், சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்க முடியும்'' என்கிறார்!

ஜஸ்டின் விஜய் ஜேசுதாஸ் (நீச்சல் சாம்பியன்)

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

29-வது வயதில் ஏற்பட்ட விபத்து, கழுத்துக்குக் கீழே உடலில் எந்த இயக்கமும் இல்லாமல் இவரை சக்கர நாற்காலியில் முடக்கியது. ஆனால், அதன் பிறகே சாதிக்கக் 'குளம்’ புகுந்தார் ஜஸ்டின். ''முதுகுத்தண்டு பாதிப்பால் முடங்கியிருப்பவர்களுக்கு, 'எதுவும் முடிந்துபோகவில்லை. சாதிக்க பல வழிகள் இருக்கின்றன’ என்பதை உணர்த்த முயற்சிப்பேன். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உதவவும் வழிகாட்டவும் ஆசை'' என்கிறார்!

விக்கி (சமூக ஆர்வலர்)

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

தமிழ் ஆய்வுப் பணிகளை மேற்கொள்பவர்... 'சீட் ப்ளான்’ என்ற அமைப்பு மூலம் சேரி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி அளிப்பதில் தீவிரமாக இயங்கிவருகிறார். ''கல்வி அமைப்பே மனப்பாடம் செய்து... மதிப்பெண் குவிப்பது என மாறிவருகிறது. மாணவர்களிடம் கல்வி மீதான ஆர்வத்தை இயல்பாக ஊற்றெடுக்கவைப்பதே என் விருப்பம். சின்னப் பசங்களுக்கு பெரிய விஷயங்களை எளிமையாகக் கற்றுக்கொடுக்கலாம். ஏனென்றால், அவர்கள் நம்மைவிட அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்'' என்கிறார்!

பிரின்சு என்னாரெசு பெரியார் (ஊடகவியலாளர்)

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

10 ஆண்டுகளாக ஊடகத் துறையில் இயங்கிவருபவர். சமூக நலன் சார்ந்த விஷயங்களில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ''பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய வேறுபாடு குறித்த விழிப்புஉணர்வையும் அறிவியல் பற்றிய விழிப்புஉணர்வையும் அவசியம் கொண்டுசெல்ல வேண்டும். சாதியாலே பிரிந்து கிடக்கும் அனைவரையும் இணைக்க ஆரம்பப் புள்ளியே இவர்கள்தான். கற்றல் குறைபாடுகொண்ட குழந்தைகளை அடையாளம் காணவும், அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி முன்னேற்றவும் அறம் செய்வேன்'' என்கிறார்!