Published:Updated:

18 வயசுல..!

18 வயசுல..!

18 வயசுல..!

18 வயசுல..!

Published:Updated:
18 வயசுல..!

நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிப்போடும் என்றால்
உன் கேசம் இறகு போடாதா?

அது எப்படி உனக்கு மட்டும்
ஒரே நேரத்தில் உன் முகத்தை
அப்பாவி மாதிரியும் காட்ட முடிகிறது
அம்பாள் மாதிரியும் காட்ட முடிகிறது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உன்வீட்டில்
வீட்டுக்கு வெளியே தோட்டம் வளர்க்கிறார்கள்

18 வயசுல..!


வீட்டுக்குள்ளே உன்னை வளர்க்கிறார்கள்

பள்ளிவிட்டு வந்ததும்
கைகால் முகம் கழுவி
பளிச்சென்று வருவாய்
இது இரண்டாவது சூர்யோதயமோ!

நீ சிறுமியும் அல்ல
குமரியும் அல்ல
சிறுங்குமரி

நீ கூட ஒரு
என்சைக்ளோபீடியாதான்
புரியாத பல ஜாடைகளுக்கான
புதைபொருள் அர்த்தங்களை
புதைத்து வைத்திருப்பதால்!

உன் அழகு
நீ இருக்கும்
எல்லா இடங்களிலும்
ஒட்டிக்கொண்டு விடுகிறது
உன்னால்
அதை ஒன்றும் செய்ய முடியாது
நீ
மலர்களைத் தொட்டாய்
உன் கைகளில் ஒட்டிக்கொண்டது
வாசம்!
நீ
புத்தகங்களைத் தொட்டாய்
உன் விரல்களில் படிந்துவிட்டது
கவிதை!
எங்கே என்னைத் தொடு!

தேவதைகள்
தங்கள் தேசத்தில் வாழ்த்து அட்டையாய்
பயன்படுத்திக்கொள்வது
நீ
பல்வேறு கோணங்களில்
எடுத்துக்கொண்ட
புகைப்படங்களைத்தான்!

18 வயசுல..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism