Published:Updated:

ஷாப்பிங் போகலாமா?

ஷாப்பிங் போகலாமா?

ஷாப்பிங் போகலாமா?

ஷாப்பிங் போகலாமா?

Published:Updated:

ஷாப்பிங் செல்வது இன்று வீக் எண்ட் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், உழைத்த பணத்தைச் செலுத்தி

ஷாப்பிங் போகலாமா?

வாங்கும் ஒவ்வொரு பொருளையும், கவனித்து வாங்குவதுதான் பலரும் கற்றுக்கொள்ள வேண்டியது. அப்படி ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு முன் ஆலோசிக்க வேண்டிய விஷயங்கள், செய்ய வேண்டிய தரப் பரிசோதனைகள், பழுதாகும் வாய்ப்புகள், பராமரிப்புத் தகவல்கள் என எல்லாம் தந்து உங்களுக்கு வழிகாட்டவிருக்கிறது... ‘ஷாப்பிங் போலாமா..?’ தொடர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷாப்பிங் போகலாமா?

மிக்ஸி... இது இல்லை என்றால் இன்று எல்லா கிச்சன்களும் ஸ்தம்பித்துவிடும். மிக்ஸி வாங்கும்போது

ஷாப்பிங் போகலாமா?

பரிசீலிக்க வேண்டிய, வாங்கிய பின் கவனம் செலுத்த வேண்டிய விவரங்களை விரிவாகப் பேசுகிறார், கடந்த 35 வருடங்களாக மிக்ஸி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ‘பட்டர்ஃபிளை’ நிறுவனத்தின் தர உத்தரவாதப் பிரிவின் சீனியர் மேனேஜர் சண்முகவேலு.

மிக்ஸி வாங்கப் போகிறீர்கள் என்றால் முதலில் மூன்று கேள்விகள் உங்கள் முன்...

•  வீட்டில் மொத்தம் எத்தனை பேர்?

•  மிக்ஸியை ஒரு நாளைக்கு எத்தனை முறை பயன்படுத்துவீர்கள்?
 

•  கிச்சனில் மிக்ஸி வைக்க இட வசதி எப்படி இருக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையில்தான், உங்கள் கிச்சனுக்குத் தேவையான மிக்ஸி மாடலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டில் அதிகம் பேர்... நிறைய, அடிக்கடி அரைக்க வேண்டியிருக்கும் என்றால், அதிக வாட்ஸ் உள்ள மிக்ஸியை வாங்குவது நல்லது. குறைந்த வாட்ஸ் உள்ள மிக்ஸியை

ஷாப்பிங் போகலாமா?

வாங்கி, ‘அதான் இடமிருக்கிறதே...’ என்று ஓவர்லோடு போட்டு, காலை, இரவு என அரைத்தால், அதிக மின்சார யூனிட்கள் செல வாகும் என்பதுடன், மோட்டார் விரைவில் பழுதடைந்துவிடும். கிச்சனில் உள்ள இடவசதியைப் பொறுத்து, மிக்ஸியை தேர்வு செய்யவும். மார்க்கெட்டில் பல்வேறு டிசைன்களில், வண்ணங்களில் கிடைக்கும் மிக்ஸியின் மீது ஆசைப்படலாம். ஆனால், அதை வைக்க கிச்சனில் அடுப்புக்கு அருகில் இல்லாத அளவுக்கு விஸ்தாரமான இடமும், காற்றோட வசதியும் அவசியம்.

விலை, வாரன்டி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். வாங்கப் போகும் மிக்ஸியில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன.

வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

•  அரைக்கும்போது ஜாரில் இருந்து தண்ணீர் வெளியேறினால், அது மிக்ஸியில் தேங்காமல் வெளியேற வசதியிருக்க வேண்டும்.

•  மிக்ஸி இயங்கும்போது அதிர்வில் நகராமல் இருக்க அடிப்பாகத்தில் வேக்குவம் புஷ் அவசியம்.

•  எத்தனை வாட்ஸ் என்று கேட்டு வாங்கவும்.

•  ஐ.எஸ்.ஐ ஸ்டாண்டர்ட் சர்டிஃபிகேட் இருக்கிறதா என்று செக் செய்யவும்.

•  ஜாரில் கலந்திருக்கும் நிக்கல் சதவிகிதம் 4-க்கு குறையக் கூடாது.

•  என்னதான் பொருளைப் பார்த்துப் பார்த்து வாங்கினாலும், பராமரிப்பிலும்தான் இருக்கிறது அதன் ஆயுள். உங்கள் வீட்டு மிக்ஸி நீடித்து உழைக்க, இந்த டிப்ஸ் கைகொடுக்கும்.

சரி, தவறு...
 

•  மிக்ஸியில் பொருள் இல்லாமல் ஒருபோதும் இயக்கக் கூடாது. 
 

•  அவசரப்படாமல் ஜாடியை சரியாகப் பொருத்தியே இயக்க வேண்டும். 
 

•  ஓவர்லோடு எப்போதும் கூடாது. அது பழுதாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும். 
 

•  மிக்ஸியின் அடிப்பகுதி யில் மெல்லிய பாலித்தீன் கவர், துணி போன்றவை இல்லாது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், மோட்டார் இயங்கும்போது அதன் விசையில் இது உள் இழுக்கப்பட்டு சிக்கிக் கொள்ளலாம்.
 

•  மிக்ஸியை தொடர்ச்சி யாக 30 நிமிடங்களுக்கு மேல் இயக்கக் கூடாது.
 

•  அடுப்புக்கு அருகில் மற்றும் நேரடியாக சூரியஒளி படும் இடத்தில் மிக்ஸியை வைக்கக் கூடாது. 
 

•  மிக்ஸியை இயக்குவதற்கு வசதியான உயரத்தில் வைப்பதுடன், மிக்ஸி இருக்கும் மேடைக்கு மேற்புறம் ஸ்விட்ச் போர்டு இருக்க வேண்டும்.
 

•  பிளேடின் அடியில் படிந்த உணவு காய்ந்ததும், சுத்தம் செய்ய சிரமாமாகும் என்பதால், ஜார்களைப் பயன்படுத்திய பிறகு உடனடியாகக் கழுவ வேண்டும்.
 

•  வோல்டேஜ் சரியாக இருக்கிறதா என்று சரிபார்ப்பதுடன், அரைக்கும்போது மிக்ஸி சட்டென்று நின்றுவிட்டால் சில நொடிகள் காத்திருந்து மீண்டும் இயக்கவும்.
 

•  கவனிக்க... ஜாரில் குறைந்த அளவு என்பது பிளேடு உள்ள வரை, அதிகளவு என்பது பாதியளவு மட்டுமே. அதாவது, குறைந்தது, பிளேடு பாகம் மூழ்கும் அளவுக்கும்... அதிகபட்சம், ஜாரின் பாதி வரையிலும் பொருட்களை நிரப்பிப் பயன்படுத்தலாம்.

•  ஹேப்பி லாங் லைஃப் மிக்ஸி!

ஷாப்பிங் போகலாமா?

மிக்ஸி மற்றும் ஜாரில் இருக்கும் கப்ளர் (ஜாரையும் மிக்ஸியையும் இணைக்கும் கனெக்டர்), வெள்ளை நிறத்தில் சுழலுமே... அது நைலானா என்று கேட்டு வாங்குங்கள்.

ஷாப்பிங் போகலாமா?

ஜாரின் அடிப்பாகம் இணைப் பதற்கு ஜாருக் குள்ளே அட்டாச்மென்ட் இருக் கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அதன் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேர்ந்துகொள்ளும், சுத்தம் செய்வது கடினம். எனவே, அவைஎல்லாம் வெளியிருந்து ஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கும் மாடலே சிறந்தது.

ஷாப்பிங் போகலாமா?

ஜாரின் மூடி பாலிகார்ப னேட்டால் ஆனதாக இருந்தால்தான் சீக்கிரம் உடையாது.

ஷாப்பிங் போகலாமா?

மிக்ஸி இயங் கும் வேகத்தைக் கட்டுப்படுத்த பட்டன்களைவிட ரெகுலேட்டர் இருப்பதுதான் பாதுகாப்பு.

ந.ஆஷிகா  படங்கள்:  சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism