Published:Updated:

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே V 2.0

twitter.com/Deva_twits:  'தலையில கொஞ்சமாவது எண்ணெய் தேய்டா!’னு அம்மா சொல்லும்போது 'முடியாது’னு சொன்னவன் எல்லாம், இப்ப எர்வாமாட்டின் வாங்கி தேய்ச்சுட்டு இருக்கான்! 

twitter.com/shanth_twits:  உண்மையைக்கூட நம்பும்படியான விதத்தில் கூறவேண்டியிருப்பது சாபம்!

twitter.com/skclusive: புகைப்படம் என்பது, காலத்தின் கச்சித நிறுத்தம்!

twitter.com/NKKannan1:  'குறள்’வழி நடப்பவர்கள், 'அதிகார’ப் பிரியர்களாகவும் இருக்கலாம்!

 twitter.com/ThePayon: அதோ அந்தப் புடைவைபோல வாங்க வேண்டும்... # கொலுப் பாடல்கள்!

twitter.com/psrajarajan:   'தே.மு.தி.க., ராணுவம் போன்றது!’ -பிரேமலதா # மேடம்... அங்க பாருங்க, துப்பாக்கியைத் தலைகீழா பிடிச்சிருக்கார் கேப்டன்!

twitter.com/mpgiri: எதையாவது கண்டித்து, நாம எல்லாரும் நம்ம இன்ஜினீயர் பட்டத்தைத் திருப்பிக் கொடுத்துட்டா என்ன? சும்மாதான வெச்சிருக்கோம்! # சாகித்ய அகாடமி.

twitter.com/departed_girl: உனது நிரூபிக்கும் முயற்சிகளில்தான் நம்பிக்கை இழக்கிறேன்!

twitter.com/SuruliOfficial: டென்ஷனா இருக்கிறதுனால தம் அடிக்கிறானாம்! 'என்னடா டென்ஷன்?’னு கேட்டா, வீட்டுக்குப் போனா தம் அடிச்ச வாடை தெரியாம இருக்கணும்... அந்த டென்ஷனாம்!

twitter.com/i_Soruba: 'இதைச் செய்தால்... இதைப் பேசினால் திட்டு விழுமோ!’ என்ற யோசனை தோன்றாத வரையே... குழந்தைகள்!

வலைபாயுதே V 2.0

 twitter.com/nithil_an:  'வேற மொபைல் மாத்தினதுல உன் நம்பர் மிஸ் ஆகிருச்சு’ - சமீபத்தில் அதிகம் சொல்லப்படும் பொய்களில் ஒன்று!

twitter.com/rajinirams: 'காலத்தால் அழியாத பாடல்கள்’ எல்லாம், இனிமேல் சாத்தியமே இல்லை எனத் தோன்றுகிறது!

twitter.com/BeingNandhu:  ஆறுதல் பரிசுகள், ஒருபோதும் ஆறுதல்படுத்தியது இல்லை!

twitter.com/I_Puruzho:  தோனிகிட்ட புடிச்சதே, பஞ்சரான வண்டியின் பெட்ரோல் டேங்க் மேல ஏறி உக்காந்துகினு பஞ்சர் கடை வரை ஓட்டிகினு போற அந்தத் திறமைதான்!

twitter.com/MrElani : இதெல்லாம் ஏன் சொல்றேன்னா... 16 GP USP 300 ரூபாய்க்கு விக்கிற இதே நேரம், 1 கிலோ துவரம் பருப்பு 170 ரூபாய்க்கு விக்குது மக்களே! # டிஜிட்டல் இந்தியா

twitter.com/shaan_64:  இப்ப எல்லாம் சமையல் செய்யும்போது கொஞ்சம் பயமா இருக்கு... 'திடீர்னு ஸ்டாலின் வந்து காய் நறுக்க ஆரம்பிச்சுருவாரோ’னு!

twitter.com/MrMarmaYogi: ஒரு முதலாளியை 'வேலையை விட்டுட்டுப் போயிடுவேன்!’னு மிரட்ற அளவுக்கு வேலை செய்யணும். அதான் திறமை!

twitter.com/Mukamooodi:  நானே செதுக்கிக்கொண்டதாயினும், உளி வேறு ஒருவனுடையதே! # வாழ்க்கை.

twitter.com/kolaveriboy:  'ரெண்டு பக்கமும் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க... ரெண்டு பக்கமும் ஓட் பண்ணியிருக்கோம்!’- சுஹாசினி # தென்னமரத்துல ஒரு குத்து... ஏணியில ஒரு குத்து!

வலைபாயுதே V 2.0

facebook.com/bala.rganesh.3: 'என் படம் வந்தா, ஏன் தியேட்டர்ல தேங்காய் உடைக்கிறீங்க; என் கட்-அவுட்டுக்கு ஏன் பாலாபிஷேகம் பண்றீங்க; ஏன் என்னை மாதிரி டிரெஸ் பண்றீங்க; ஏன் என்னை மாதிரி ஹேர்கட் பண்றீங்க? என் பிறந்த நாளுக்கு ஏன் ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டுறீங்க? என்னை ஏன் 'தலைவா’னும் 'கடவுளே’னும் கூப்புடுறீங்க? எனக்காக ஏன் ரத்தக் கையெழுத்து போடுறீங்க?’ எனக்  கண்டிக்கும் நாயகனுக்கு, 'என் படத்தை ஏன்டா  தேவை இல்லாம கிண்டல் பண்றே?’ எனக் கேட்கும் உரிமை உள்ளது!

facebook.com/uma.kathir: எனக்கு வகுப்புத் தோழிகளாக ராஜாத்தி, ராஜலட்சுமி, ராமாயி, தேன்மொழி என இருந்தனர். என் மகனுக்கு வகுப்புத் தோழிகளாக க்ருக்‌ஷிதா, ஷிவானி, ஹாசினி, அவநிதா என இருக்கின்றனர். ஒரு தலைமுறை இடை வெளியை இந்தப் பெயர்களின் மூலம் அளவிட்டுக்கொள்ளலாம்.

facebook.com/shanmugame: ஆசிரியர் தவறாக நடந்துகொண்டதால் தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறாள் 15 வயது பள்ளி மாணவி. இதில் மாணவி என்ன சாதி, ஆசிரியர் என்ன சாதி என்ற அரசியல் ஒரு பக்கம் நடக்கிறது. அந்த மாணவி தன்னுடைய தற்கொலை கடிதத்தில் 'இதைப் பற்றி வெளியில் சொன்னால் நம்ப மாட்டார்கள். தற்கொலை ஒன்றே அந்த ஆசிரியருக்கு தண்டனை வாங்கித் தரும். பிற மாணவிகளாவது காப்பாற்றப்படுவார்கள்’ எனக் குறிப்பிட்டு இருந்தார். வேறு வழியற்ற இந்த நிலைக்கு அந்த மாணவியைத் தள்ளியது எது? இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது பாலியல் கொடுமைகளுக்கும் சீண்டல்களுக்கும் ஆளாகும் பெண்கள், இதுகுறித்து புகார்செய்ய, என்ன மாதிரியான சேனல்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வேலைசெய்யும் இடங்களிலும் உருவாக்கி வைத்திருக் கிறோம் என்பதுதான். இதற்காக ஒரு பெண் பொறுப்பாளர், எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். புகார் ஒன்று வரும்போது புகார் செய்பவருக்கு அறிவுரை சொல்லித் திருப்பி அனுப்பாமல், கேள்விகள் இன்றி அதில் உள்ள உண்மைத் தன்மையை ரகசியமாக விசாரிக்க வேண்டும். உண்மை இருப்பது தெரிந்தால், காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் இதை ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, பணியிடங்களிலும் கடுமையான ஒரு சட்டம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இவை எல்லாம் நடக்காமல் வெறும் விசாரணை மட்டும் நடத்தி, சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைது செய்துவிட்டு, இந்த விஷயத்தை மறந்துவிட்டால் பிணங்களைப் பொறுக்குவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்!

facebook.com/rajarajan1969:  ஷேர் ஆட்டோவில் பயணம் என்பது, சுவாமி ஐயப்பனைப் போன்ற உடல்வாகு உள்ளவர்களுக்கு வேண்டுமானால் அது பெட்டர்; என்னைப் போன்ற கடோத்கஜன்களுக்கு நரக அனுபவத்தைக் கொடுத்தது. ஒரே ஒரு மகிழ்ச்சி, அங்கு ஆண்-பெண் பாகுபாடு இல்லாமல் அருகருகே அமர்வது. ஒரு பெண் அமர்ந்திருக்க... தள்ளி அமர இடம் இருந்தால், ஓர் ஆண் முடிந்தவரை அந்தப் பெண் அருகில் அமரத் தயங்குகிறான். ஏனென்றால், அவன் அப்படித்தான் இங்கு வளர்க்கப்பட்டான். மாறாக, ஓர் ஆண் அமர்ந்து இருந்து, தள்ளி உட்கார இடம் இருந்தாலும் பெண்கள், தயங்காமல் அவன் அருகே சென்று அமர்கிறார்கள். இந்தத் துணிவு, எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது.

வலைபாயுதே V 2.0

இந்தப் பெண்கள், ஆண்களை நம்பி துணிந்து இதுபோல் அவனை மதித்து வர முயல்கையில், நிச்சயம் அவனால் அந்தப் பெண்ணுக்குத் தீங்கு இழைக்கவே முடியாது.

எனக்கு முன்னால் அமர்ந்து இருந்த ஒரு வாலிபன், அவன் அருகே அமர்ந்து இருந்த பெண்ணின் மேல் தன் உடல் பட்டுவிடாமல் இருக்க, கூனிக் குறுகி அமர்ந்து இருந்ததைப் பார்த்தபோது, மாநகரப் பேருந்திலும் இந்த உத்தியைப் பயன்படுத்தினால், பாலியல் சீண்டல்கள் குறையலாம் எனத் தோன்றுகிறது!