Published:Updated:

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

விகடன் டீம்படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஜெ.வேங்கடராஜ், எம்.விஜயகுமார், அ.குரூஸ்தனம்,

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

விகடன் டீம்படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஜெ.வேங்கடராஜ், எம்.விஜயகுமார், அ.குரூஸ்தனம்,

Published:Updated:

'அறம் செய விரும்பு’ திட்டம் நிகழ்த்தும் உதவிப் பணிகளின் அப்டேட்..!

ராயபுரம் மரம் நடு விழா!

'அறம் செய விரும்பு’ திட்ட நாயகன் ராகவா லாரன்ஸ் பிறந்து வளர்ந்த பகுதியில் நடந்த

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

கோலாகல திருவிழா இது. சென்னை ராய புரத்தில், கடற்கரையை ஒட்டிய குடிசைப் பகுதிதான் லாரன்ஸ் பிறந்து வளர்ந்த பகுதி. அந்தக் குடிசைகள் இப்போது கட்டடங் களாக மாறிவிட்டாலும், மக்கள் மனங்களில் அன்புக்குக் குறைவு இல்லை.

''லாரன்ஸ் சார் பேசறப்ப எல்லாம் அவர் வளர்ந்த நார்த் மெட்ராஸ் ஏரியா பற்றி சிலாகிப்பார். 'என்னால முடிஞ்ச அளவுக்கு அந்தப் பகுதிக்கு ஏதாவது செய்யணும். ஆனா, அது தனிப்பட்ட நபர்களுக் கானதா இல்லாம, ஏரியா விலேயே ஒரு வித்தியாசத்தை உருவாக்கணும்’னு சொல்லிட்டே இருப்பார். அங்கே நிறைய மரங்கள் நடலாமே... மொத்த ஏரியாவுக்கும் அது பசுமையைப் போத்துமேனு எனக்குத் தோணுச்சு. அவர்கிட்டயும் சொன்னேன். 'உங்க விருப்பம் செய்யுங்க’னார். இது தொடர்பா விசாரிச்சப்ப, 'சின்னச்சின்ன செடிகளை நடுறது பெரிய பலன் தராது. நர்சரிகள்ல பத்து அடி உயரத்துக்கு வளர்ந்த மரங்களைக் கொண்டுவந்து நட்டு சில மாதங்கள் கவனமாப் பார்த்துக்கிட்டா, பெரும்பாலான மரங்கள் தழைச்சு நல்ல பலன் கொடுக்கும்’னு சொன்னாங்க. அதை என்னோட புராஜெக்ட்டா செயல்படுத்திட்டேன்!'' என நெகிழ்கிறார் தன்னார்வலர் திவ்யதர்ஷினி (டிடி).

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

ராயபுரத்தில் உள்ள தேசிய நகர்தான் ஸ்பாட். சாதாரண மக்கள் வசிக்கும் பகுதி. இன்னும்கூட அங்கு ஆடு, மாடு, கோழி, வாத்து... எல்லாம் வளர்க்கிறார்கள். அங்கு பரவலாக மரம் நட, சென்னை மாநகராட்சியில் முறைப்படி அனுமதி பெறப்பட்டது. விறுவிறுவென வேலைகள் நடக்க, புங்கை, பூவரசு, பாதாம் மற்றும் நாகலிங்க வகைகளைச் சார்ந்த மரங்கள் நன்கு வளர்த்தெடுக்கப்பட்டு, தேசிய நகருக்கு கொண்டுவந்து இறக்கப்பட்டன. பத்து அடிக்கு மேல் வளர்ந்து இருந்த அந்த மரங்களுடன் நூற்றுக்கணக்கான தொட்டிச் செடிகளையும் வைக்க முடிவானது.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

மரம் நடும் நாள் அன்று லாரன்ஸ் வருகிறார் எனத் தகவல் தெரிந்ததும், தேசிய நகர் இளைஞர்கள் திடுதிப்பென ஒரு திறந்தவெளி மேடைக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். 'அறம் செய விரும்பு’ திட்டத்தின் கீழ் மரம் நடலாம் எனச் சொல்லி, அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி இருந்த இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களை, மரம் நடு விழாவுக்காக ராகவா லாரன்ஸ் அழைத்திருந்தார். ராகவா லாரன்ஸும் ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்புவும் வந்து இறங்க, ஏரியாவெங்கும் உற்சாகம், குதூகலம். பள்ளிக் குழந்தைகள் ரோஜாப் பூ கொடுத்து வரவேற்க... அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர் இருவரும். முதலில், இருவரும் நிழல் தரும் புங்கை மரங்களை நட்டனர். பிறகு, மற்ற சில மரங்களையும் நட்டுவிட்டு மேடை ஏறினார்கள்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

முதலில் பேசிய இறையன்பு, 'இந்தத் திட்டத்தில் முக்கியமாக மூன்று பிரிவுகளில் மக்களுக்கு உதவி செய்கிறார்கள். கல்வி, மருத்துவம், சூற்றுச்சூழல். இந்த மூன்றுமே அப்துல் கலாமுக்கு மிகவும் நெருக்கமானவை. 'நல்லது செய்யும்போது உலகமே உதவும்’ என்பார்கள். இன்று லாரன்ஸ் கொடுத்துள்ள 1 கோடி, நாளை 10 கோடி... 100 கோடி எனப் பெருகும். ஆயிரம், ஒரு லட்சம் என இளைஞர்கள் வருவார்கள்'' என்றார். 

ஆரவார விசில், கைத்தட்டல்களுக்கு இடையில் பேச வந்த லாரன்ஸ், 'இந்தத் திட்டம் எனக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு. நான் சுலபமா 1 கோடி ரூபாய்க்கு செக் போட்டு கொடுத்துட்டேன். ஆனா, 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, சரியான நபர்களுக்கு உதவி போய்ச் சேரணும்னு ரொம்ப அக்கறையா எல்லா வேலைகளையும் செய்றது 'ஆனந்த விகடன்’தான். நான் பிறந்து வளர்ந்த இந்தப் பகுதியிலேயே மரம் நடுறது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. இந்த ஏரியாவில்தான் சின்னப் பிள்ளையா ஓடியாடி விளையாடினேன். இங்கதான் ஃப்ரெண்ட்ஸ்கூட ஊர் சுத்தினேன். இங்கதான் படிச்சேன். என் எதிரே நிக்கிறவங்கள்ல பல பேர் சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, நண்பர்கள். உங்க எல்லாருக்கும் நன்றி. இந்த மரங்களுக்கு அப்பப்போ தண்ணி ஊத்திப் பார்த்துக்கங்க. அதுதான் நம்ம மண்ணுக்கு நாம செய்ற நன்றிக்கடன்!'' என்று சொல்ல, உற்சாக ஆரவாரம் மூலம் அதை ஆமோதித்தார்கள் ராயபுரம் மக்கள்.

அறம் தொடரும்!

'அறம் செய விரும்பு’ திட்டத்தின் ஒன்பதாவது குழு தன்னார்வலர்கள் இவர்கள்...

புதுகை செல்வா - ஆவணப்பட ஒளிப்பதிவாளர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

'அரசுப் பள்ளி பெற்றோர் இயக்கம்’ மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தாய்மொழிக் கல்வி பெறுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுபவர்; படித்த தன்னார்வ இளைஞர்களைக்கொண்டு 'மாலை நேர வகுப்புகளும்’ நடத்திவருகிறார். இப்படியான பணிகள் மூலம் குழந்தைகள் எதையும் ஆராய்ந்து கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பதை நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறார். ஆவணப்படங்களின் ஒளிப்பதிவுக்காக, சமூகத்தின் பல தளங்களில் இருக்கும் மக்களைச் சந்தித்து வருகிறார். ''நவீன தொழில் புரட்சியில் காணாமல்போன பழைய கறுப்பு-வெள்ளை புகைப்படக் கலைஞர்கள், சுவர் ஓவியக் கலைஞர்கள், இதர மண் சார்ந்த கலைஞர்கள் போன்றவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக உதவ விருப்பம்!''

ர.ர.செஞ்சி லட்சுமி  - சமூக ஆர்வலர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழக இளநிலை உயிரி தொழில்நுட்பவியல் மாணவி. இயற்கையின் மீது கொண்ட காதலாலும், சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தாலும் விவசாய ஆராய்ச்சியில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். ''சுட்டி விகடனால் 'சுட்டி ஸ்டார்’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே சமூகச் செயல்பாடுகள் மீது ஆர்வம் உண்டானது. '2020-ல் வல்லரசு இந்தியா’ எனும் மறைந்த கலாம் ஐயா அவர்களின் கனவை நனவாக்க, தீவிரமாகச் செயல்படுவேன். 'அனைத்துத் துறைகளிலும் பெண்கள் உச்சத்தை எட்ட வேண்டும், பெண் பிள்ளைகள் தடையில்லா கல்வி கற்க வேண்டும்’ என்பது எல்லாம் அதை நோக்கிய என் செயல்திட்டங்கள். 'அறம் செய விரும்பு’ திட்டம் மூலம் கணினிமயமாகிவிட்ட இன்றையச் சூழலில், பாரம்பர்ய விவசாயக் கல்வி பயிலும் வறுமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவ எண்ணம்!''

சத்யா - கல்வியாளர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அதிகாரி. 'சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமி’ என்ற பெயரில் இயங்கிவரும், போட்டித்தேர்வு பயிற்சி மையத்தின் கௌரவ இயக்குநர். மலைப்பிரதேச மற்றும் கிராமப்புற இளைஞர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற இந்தியக் குடிமைப் பணிகளுக்கு வரவேண்டும் என்பதற்காக ஆர்வத்துடன் செயல்படுபவர். ஆண்டுதோறும் 20 ஏழை மாணவர்களைத் தேர்வுசெய்து, இந்தியக் குடிமைப்பணி தேர்வுகளுக்காக இலவசப் பயிற்சி அளித்துவருகிறார். 'ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த அரசுப் பணிகளுக்கு வரக்கூடிய தகுதியும் திறமையும்  இருந்தாலும், வறுமை, வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட தடைகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் மூலம் உதவுவேன்!''

ஆளூர் ஷாநவாஸ் - அரசியல் செயற்பாட்டாளர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

தொலைக்காட்சி விவாதங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைப் பிரதிபலிப்பவர், ஆவணப்பட படைப்பாளர், கட்டுரைத் தொகுப்பாசிரியர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எனப் பன்முகங்கள். 'நம் நாட்டில் எந்தக் குற்றமும் செய்யாதவர்களைக்கூட விசாரணை என அழைத்துச் சென்று 10-15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் அவலம் இருக்கிறது. இவர்கள் குற்றமற்றவர்கள் என வெளியே வந்தாலும், சமூகம் இவர்களைப் பார்க்கும் பார்வை காரணமாக, இவர்களது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அப்படியான குழந்தைகளுக்கு முடிந்த அளவு உதவிகள் செய்ய விருப்பம்!'

பாமயன் - இயற்கை வேளாண்மை பயிற்றுநர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

மரபணு மாற்று விதை, பூச்சி மருந்துகள், செயற்கை உரம் எனப் பூதாகாரமாக மிரட்டும் பன்னாட்டுப் படையெடுப்புகளில் இருந்து பாரம்பர்ய விவசாயம் மற்றும் நவீன இயற்கை விவசாயத்தை மீட்கப் போராடிவருபவர். 'இயற்கை விவசாயம் மூலம் லாபம் ஈட்டலாம்’ என நம்பிக்கை விதை விதைப்பவர். பல ஏக்கர்களுக்கு வெற்றிகரமான இயற்கை வேளாண்மை செய்து அதன் நடைமுறை சாத்தியங்களையும் உணர்த்திக்கொண்டிருப்பவர். 'இயற்கை விவசாயம் தவிர, வேறு எதன் மீது என் நோக்கம் இருக்க முடியும்? இயற்கையை மீட்பதற்காக, அதிக அளவிலான இளைஞர்களுக்கு இயற்கை வேளாண் பயிற்சி அளிக்க இந்தத் திட்ட நிதியைப் பயன்படுத்திக்கொள்வேன்!''

கிரீஷ் - பாலியல் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கான ஆர்வலர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

பாலியல் மற்றும் சிறுபான்மையினர் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்திவருபவர். ''பெண்ணாக இருந்து ஆணாக மாறும் திருநம்பிகளுக்கு அடிப்படை வசதி உள்பட எந்த உதவிகளும் கிடைப்பது இல்லை. தன்னம்பிக்கை பற்றியப் புரிதல் இல்லாத மாற்றுப் பாலினத்தோருக்கு, வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான உதவிகள் செய்ய விருப்பம். அதை கல்வி, விழிப்புஉணர்வு எனப் பரந்த தளத்தில் கொண்டு செலுத்தும் பணிகளில் ஈடுபடுவேன்!''

சுகிதா - ஊடகவியலாளர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளை, தொலைக்காட்சி விவாதங்களில் பேசுபொருளாக்குபவர். ஒடுக்கப்பட்ட மக்களின், ஆதரவற்ற குழந்தைகளின் நலனில் அக்கறைகொண்டவர். 'சமூகத்தின் விளிம்புநிலையில் பரிதவிக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறை இங்கு இல்லை. அதுவும் சென்னையின் சேரிப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் கல்வியும் சென்று சேர்வது இல்லை. அப்படியான குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் உயர முடிந்தவரை பாடுபடுவேன்!'' 

விஜி ராம் - உணவுப் பழக்க ஆலோசகர்  

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கிய மற்றும் பாரம்பர்ய உணவுகளை அடையாளப்படுத்தும் 'உணவுப் பழக்க ஆலோசகர்’ மற்றும் யோகா ஆசிரியர். சிறுதானிய உணவுகள், சீக்ரெட் கிச்சன் உள்பட சமையல் கலை நூல்களை எழுதியுள்ள விஜியின் செயல்பாடுகள், சமையல் அறையையும் தாண்டியவை. ''இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறது. நம்மைச் சுற்றி நிகழும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு நாம்தான் தீர்வுகாண வேண்டும். கிராமம், நகரம், ஏழை, பணக்காரர் என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் விழிப்புஉணர்வு பரப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வேன்!''

ரத்தின புகழேந்தி - எழுத்தாளர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

கடந்த 25 ஆண்டுகளாக கலை, இலக்கிய வெளியில் இயங்கிவரும் அரசுப் பள்ளி ஆசிரியர். அறிவொளி இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சாரணர் இயக்கம் போன்ற தன்னார்வ இயக்கங்களில் களப்பணியாற்றுபவர். தென்னிந்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். ''சிறுவர்களிடையே நற்பண்புகளையும் சேவை மனப்பான்மையையும் பரப்புவதில் சாரணர் இயக்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அதற்காக சாரணர்களுக்கு பல நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வறுமையில் வாடும் சாரண மாணவர்களுக்கு முழுமையான சீருடைகளை வழங்கவும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் செயல்படுவேன்!''

கொ.மா.கோ.இளங்கோ - சிறார் இலக்கிய எழுத்தாளர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ள இவர், சிமென்ட் ஆலைக் கட்டுமானப் பணி ஆலோசகர். 13 சிறுவர் புத்தகங்கள் எழுதியிருப்பவர், சிறந்த சிறுவர் இலக்கியப் புத்தகத்துக்கான த.மு.எ.க.ச விருது வென்றிருக்கிறார். ''குழந்தைகளின் கற்பனை வளத்தை அதிகரிக்கும் கதைப் புத்தகங்கள்கொண்ட சிறார் நூலகங்களை கிராமப்புற மாணவர்களுக்கு அமைத்துத் தர, அரசு மற்றும் ஆதிதிராவிடப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு, மாற்றுத்திறனாளி ஏழை மாணவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் அணியினர் கண்டுபிடித்த நவீன செயற்கைக் கால் வழங்க... இப்படி பல விதங்களில் உதவிகளைப் பகிர்ந்தளிக்க முனைவேன்!''