Published:Updated:

‘இசை’வசமான குடும்பம்!

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: சு.குமரேசன்

டாக்டர் சௌந்தரராஜன் - சிறுநீரக சிகிச்சை சிறப்பு நிபுணர். டாக்டர் தமிழிசை - பெண்கள் நலம்

 ‘இசை’வசமான குடும்பம்!

மற்றும் ஸ்கேன் சிறப்பு நிபுணர். மூத்த மகன் டாக்டர் சுகந்தன் சமுதாய மருத்துவத்தில் எம்.டி. மகள் டாக்டர் பூவினி, எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு தற்போது ரேடியாலஜி பிரிவில் எம்.டி முதலாம் ஆண்டு மாணவி. ஆம்... குடும்பத்தில் நால்வருமே மருத்துவர்கள்! 

ம.பொ.சி., கருணாநிதி, எம்.ஜி.ஆர் முன்னிலையில் அரங்கேறிய சிறப்புக்குரிய நிகழ்வு சௌந்தரராஜன்-தமிழிசையின் திருமணம். அப்போது தமிழிசை இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி!

தமிழிசை தஞ்சாவூரில் மருத்துவராகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, வயிற்றிலேயே இறந்துவிட்ட சிசுவால் ஒரு கர்ப்பிணி தாயும் இறந்துவிட்டார். சிசுவின் நிலையை முன்னரே அறிய உதவும் அல்ட்ரா ஸ்கேன் மெஷின் இருந்தும் குளிர்சாதன வசதி இல்லாததால், அதை நிர்மாணிக்க முடியாமல் இருந்திருக்கிறார்கள். இந்தத் தகவலை தமிழிசை தன் தந்தை குமரி அனந்தனிடம் சோகமாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மறுநாள் சட்டமன்றத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் கவனத்துக்கு, குமரி அனந்தன் இந்த விஷயத்தைக் கொண்டுசெல்ல, 'யானை வாங்கியவர்கள், அங்குசம் வாங்கவில்லையோ?’ எனச் சொல்லி உடனடியாக அந்த ஸ்கேனிங் மெஷினைப் பொருத்த உத்தரவிட்டார். இரண்டே மணி நேரத்தில் மெஷின்  பொருத்தப்பட்டது. அந்தச் சம்பவம்தான், 'நல்லது செய்ய நினைத்தாலும், அதைச் செய்ய அரசியல் அதிகாரம் தேவை’ என தமிழிசைக்கு உணர்த்தியிருக்கிறது. கணவர் சௌந்தரராஜனிடம் விவாதித்து, அனுமதி வாங்கி அரசியலில் இறங்கியிருக்கிறார்!

 ‘இசை’வசமான குடும்பம்!

தன் அம்மாவை 'இசை’ என்றுதான் அழைக்கிறார் சுகந்தன். இணைய, சமூக வலைதள அப்டேட்களை அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பார் பூவினி. ஒருமுறை தேர்தலில் அ.தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீடு முடிந்த செய்தி ஃப்ளாஷ் ஆகியிருக்கிறது. ஆனால், வேட்பாளர் பெயர்கள் தெரியவில்லை. பூவினியிடம் தமிழிசை தொலைபேசியில் விசாரிக்க, இணையத்தில் துழாவி 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’ தளத்தில் இருந்து வேட்பாளர் பெயர்களை  அறிந்து, அதை 'பிரின்ட் அவுட்’ தகவலாக பா.ஜ.க-வின் கமலாலயம் அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கிறார். அப்போது பூவினி பள்ளி மாணவி!

 ‘இசை’வசமான குடும்பம்!

மருத்துவப் பிரிவுகளில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்காத பிரிவு சமுதாய மருத்துவம். காரணம், வருமானத்தைப் பற்றி நினைக்காமல் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். 'யாருமே இதை எடுத்துப் படிக்கலைன்னா, அப்புறம் யாருதான் ஏழைகளுக்கு உதவுவாங்க’ எனச் சொல்லி அந்தப் பிரிவிலேயே சேர்ந்து தேர்ச்சிபெற்றிருக்கிறார் சுகந்தன். இது மகன் குறித்து சௌந்தரராஜனும் தமிழிசையும் நினைத்து நினைத்துப் பூரிக்கும் பெருமை!

ஒருமுறை வெங்கைய்யா நாயுடு தலைமையில் ஒரு கூட்டம் நடந்தபோது சரியாக பகல் 12 மணிக்கு கூட்டத்தில் இருந்து தமிழிசை கிளம்பிவிட்டார். உடன் வெங்கைய்யா நாயுடு, 'மேடம் ஏன் கோச்சுட்டுப் போறாங்க?’ எனக் கேட்டிருக்கிறார். இல.கணேசன் சிரித்துக்கொண்டே, 'அவங்க பொண்ணுக்கு 12 மணிக்கு ஸ்கூல் முடிஞ்சிரும். அவங்களைக் கூப்பிடப் போறாங்க’ எனச் சொல்லி யிருக்கிறார். அந்த அளவுக்கு அரசியலுக்கும் குடும்பத் துக்கும் சரிசம முக்கியத்துவம் கொடுப்பார் தமிழிசை. இப்போதும் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராவின் பதிவுகள் தமிழிசை மொபைலிலும் ஒளிபரப்பாகும். கல்லூரி முடிந்து மகளின் கார் வரத் தாமதமானால், உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு விசாரித்துக்கொள்வார்!  

 ‘இசை’வசமான குடும்பம்!

குடும்பத்தின் தீபாவளி விசேஷம் என்ன?

சுகந்தனுக்குப் பெண் பார்க்கும் படலம் தொடங்கியிருக்கிறது. கூடிய சீக்கிரம் 'வீட்ல விசேஷம்’ என வரவேற்பார்கள் சௌந்தரராஜன் தம்பதி!

'குடும்பத்தின் அன்பும் ஆதரவும்தான் அரசியலில் வெற்றிகரமாக என்னைச் செலுத்துகிறது’ என்பது தமிழிசையின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்!