Published:Updated:

டீன் டிக்‌ஷ்! - UPDATED

ம.மாரிமுத்து, தா.நந்திதா, அ.நிவேதா, லோ.சியாம் சுந்தர், ச.ஆனந்தப்பிரியா, பி.நிர்மல்ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

ண்ட்ராய்டு மட்டும்தான் அப்டேட் ஆகுமா? 'டீன் டிக்ஷனரி’யும்தான் அடிக்கடி அப்டேட் ஆகும். கல்லூரி கேம்பஸ்களில் இப்போ எந்த ஸ்லாங் டிரெண்டிங்ல இருக்கு..? 

அவதார் - தன்னை ஹீரோனு நெனச்சுட்டு வேற்றுக்கிரகவாசி மாதிரி உலாத்துறவன்.

வாலு - க்ளாஸுக்கு எப்ப வருவான்னே தெரியாது.

லிங்கேசா - கையில எப்பவும் ரெண்டு சாம்பார் வாளியைத் தூக்குற மாதிரியே நடக்கிற ஜிம் பாய்ஸ். 'சிக்ஸ்பேக் கம்மிங் சூன்’கிற கனவுல முறுக்கித் திரியிறவங்களை லிங்கேசன் லிஸ்ட்ல சேர்த்துடலாம்.

ஜானி - எங்க வந்திருக்கோம்... எதுக்கு வந்திருக்கோம்னு தெரியாமலேயே க்ளாஸ்ல சுத்துறவன்.

மிக்ஸர் - 'நாட்டாமை’ படத்துல கவுண்டமணிக்குப் பொண்ணு பார்க்கிற சீன்ல ஒருத்தர் மிக்ஸர் சாப்பிடுவாரே... ஞாபகம் இருக்கா? அவரை மாதிரி தன் காதலிகிட்ட அடிமையா இருக்கிறவன்.

ஜிங்குணமணி - எனதருமை விஜய் ரசிகப் பெருமக்களே!

டீன் டிக்‌ஷ்! - UPDATED

தலப்பாகட்டு - எனதருமை அஜித் ரசிகப் பெருமக்களே!

சாம்பார் வாளி - எங்கே போனாலும் முதல் ஆளா சோறு சோறுனு அலையுற பார்ட்டி.

நம்பூதிரி - எப்போ பார்த்தாலும், 'இதுக்குத்தான் நான் அப்போவே சொன்னேன். யாராவது கேட்டீங்களா?’னு சீன் போடுறவன்.

'நாரதர்’ நல்லதம்பி - அவனேதான்... போட்டுக்குடுக்கிறதையே ஃபுல்டைம் ஜாப்பா வெச்சுட்டு இருக்கிறவன்.

மண்டகஜாயம் - எந்த காலேஜ்ல சிம்போசியம் நடந்தாலும் ஒண்ணும்புரியாத டாபிக்ல பேசி ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிட்டு வந்து கடுப்பேத்துற அம்பி.

பவர் ரேஞ்சர்ஸ் - காலேஜ் எலெக்ஷன்ல ஆரம்பிச்சு மெஸ் கவுன்ட்டர் வரைக்கும் எல்லா பிரச்னைகள்லயும் மூக்கை நுழைச்சு வெட்டிப்பஞ்சாயத்து பண்ற கேங்.

டோரா  புஜ்ஷி - எங்கேயும் எப்போதும் ஜோடியாவே சுத்திட்டு, 'லவ்லாம் இல்ல. நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ்’னு அறிக்கை வாசிக்கிற அடாசு ஜோடி.

சொப்பன சுந்தரி - எல்லாருமே பசங்களா இருக்கிற மெக்கானிக்கல் க்ளாஸ்ல படிக்கிற ஒரே பொண்ணு.

ஆண்டவன் - எவ்வளவு கலாய்ச்சாலும் அதைத் தாங்கிட்டு 'ரொம்ம்ம்ம்ப நல்லவனா’வே இருக்கும் கேரக்டர்!

கொக்கி குமாரு - யார், எப்போ கேன்டீன் போனாலும் கொக்கி போட்டுத் தொத்திக்கிறவன்.

ஆதார் அழகி - துளி மேக்கப் இல்லேனாலும் கண்ணுக்கு லட்சணமா டாலடிக்கும் காலேஜின் அழகு குட்டிச் செல்லம்.

கட்டப்பா - கூடவே இருந்து நமக்கே தெரியாம நம்ம மொபைல் டேட்டாவை, வைஃபையில காலி பண்ற துரோகிகிகிகிகி!

பிரேமம் கைஸ் - படிக்கிறதுக்காக ஸ்டேட்விட்டு ஸ்டேட் வந்த பொண்ணுகிட்ட காதல் சொல்லி, காதலியோட தாய்மொழியை மனப்பாடம் பண்ணி, கலாசாரப் பாலம் போட நினைக்கும் ஃபீலர்ஸ்.

காட்டுப் பூச்சி - பார்க்கக் காட்டுத்தனமாவும் குரல் பூச்சி மாதிரியும் இருக்கும் உள்ளத்தில் நல்ல உள்ளங்கள்.

ஃபேக் ஐ.டி - 'எப்பமா நீ உண்மையப் பேசுவ?’னு கேட்க வைக்கிற பொய்க்கோழி தோழிகள்!

டீன் டிக்‌ஷ்! - UPDATED

இடிமுட்டி - காலேஜ் பஸ்ல டிரைவர் பிரேக்ல கால் வைக்கும்போதே பொண்ணுங்க மேலே வந்து மோதுற பேட் பாய்ஸ்.

பொன்னர் சங்கர் - எப்போ பார்த்தாலும் பசங்ககிட்ட கேள்வி கேட்டுட்டு... ஆனா, கேர்ள்ஸுக்கே மாங்குனு மாங்குனு சொல்லிக்கொடுத்து டௌட் க்ளியர் பண்ற பொன்னான பேராசிரியர்கள்.

ஜிப்ரீஸ் மாஸ்டர்ஸ் - 'ரீஸன் தேவை இல்லை. காரணத்தைச் சொல்லு’ என அவர் பேசுவது அவருக்கும் புரியாமல், நமக்கும் புரியாமல் கடுகடு டெம்போவிலேயே பாடம் நடத்தும் பேராசிரியர்கள்.

பெருசு - நம்ம வகுப்பா இருந்தாலும் வயசுல மூத்தவங்களா, முத்தினவங்களா சிலர் இருப்பாங்களே... அவங்களுக்கான முதல் மரியாதை!

மச்சி - இதுக்குலாம் விளக்கம் தேவையா மச்சி?

மாப்ள - மதுரைக்கு இங்கிட்டு 'மச்சி’னா அங்கிட்டு 'மாப்ள!’

ப்ரோ - அம்மாவைத் தவிர எல்லோரையும் 'ப்ரோ’ ஆக்கிட்டோம். ஆனா, பொண்ணுங்க 'ப்ரோ’னு கூப்பிட்டா, 'போச்சே... போச்சே’னு பசங்க ஃபீல் பண்ணாதீங்க. ஏன்னா, 'ப்ரோ’வுக்கு பிரதர் தவிர எல்லா அர்த்தமும் இருக்கு ப்ரோ!

யூத் ஸ்லாங்

ஷெய் டங்காமாரி பவ  - 'வெற்றி யோட திரும்பி வா மகனே!’ அப்படிங்கிறதை பெப் ஏத்திச் சொல்றது. கேம்பஸ் இன்டர்வியூ சமயம் இதன் பயன்பாடு அதிகரிக்கும்.

நெட்வொர்க் எரர்  - எவ்வளவு ரூட் விட்டாலும் ஒரு பொண்ணுகூடத் திரும்பி பார்க்காத அவல நிலை.

ஸின்க்ரோனஸ் மோட்டார்ஸ்  - லவ்வர்ஸ் (எப்பவும் சேர்ந்தே சுத்துறதுனால).

கம்பு சுத்துறது  - நாட்டுல எது நடந்தாலும் (த்ரிஷா நாய்க்குட்டி வாங்கினாகூட) அம்பி மாதிரி பொங்கி எழுந்து கருத்து சொல்ற கந்தசாமிகள்.

லோல்  - 'கொல்’லுனு சிரிக்கிறதைத்தான் lol - னு (laughing out loud ) ஆக்கிப்புட்டாய்ங்க. அதான் இப்போலாம் பெருசா சிரிக்கிறப்ப 'லோல் லோல்’னு குலைச்சுக்கிறோம்.

பாண்டவர் அணி  - ஹாஸ்டல் மெஸ் ஃபீஸ் கட்டிட்டு, 'வீக் எண்டு’ல லெக் பீஸ் போடாம மழுப்புறவங்களைப் பார்த்துக் கொந்தளிக்கிற வைபரஷன் மோடு பாய்ஸ் குரூப்!