Published:Updated:

கலெக்சன் ஏஜென்ட் டூ மேனேஜிங் டைரக்டர் - இளம் தொழிலதிபரின் சக்சஸ் ஸ்டோரி  (Sponsored Content)

கலெக்சன் ஏஜென்ட் டூ மேனேஜிங் டைரக்டர் - இளம் தொழிலதிபரின் சக்சஸ் ஸ்டோரி  (Sponsored Content)
கலெக்சன் ஏஜென்ட் டூ மேனேஜிங் டைரக்டர் - இளம் தொழிலதிபரின் சக்சஸ் ஸ்டோரி  (Sponsored Content)

கலெக்சன் ஏஜென்ட் டூ மேனேஜிங் டைரக்டர் - இளம் தொழிலதிபரின் சக்சஸ் ஸ்டோரி  (Sponsored Content)

கலெக்சன் ஏஜென்ட் டூ மேனேஜிங் டைரக்டர் - இளம் தொழிலதிபரின் சக்சஸ் ஸ்டோரி  (Sponsored Content)

நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சென்னை, கோவை, விஜயவாடா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட அவுட்லெட்கள், UAE, சிங்கப்பூர், மலேசியாவில் 2018 ல் புதிய கிளைகள் துவங்க இருக்கும் சேண்ட்விச் ஸ்கொயர் “Sandwich Square” கடையின் நிறுவனர், முகமது தன்வீர் இக்பால் அவர்கள் தன் வெற்றிப் பயணத்தைத் துவங்கியது ஒரு கலெக்சன் ஏஜென்ட்டாகத்தான். ஆம், இந்த வெற்றிக்கு அவர் காரணமாக சொல்வது, முதலில் இறைவனின் அருள். பிறகு, பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் வொர்க், தேவையான இடங்களில் கடின உழைப்பு மற்றும் நல்ல நண்பர்களின் ஆதரவு ஆகியவற்றைத்தான். 

இன்று பல கல்லூரி மாணவர்களையும் தொழில் முனைவோராக மாற்றி வரும் தன்வீர், கல்லூரியில் படிக்கும்போது மற்ற மாணவர்களைப் போல படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், பகுதி நேர ஊழியராக பணி செய்வது என்ற முடிவை எடுத்து, தந்தையின் நண்பர் மூலமாகக் கிடைத்த கிரெடிட் கார்ட் விற்பனை மற்றும் கலெக்சன் ஏஜென்ட் வேலையை ஏற்றுக்கொண்டார். மக்கள் கிரெடிட் கார்டுகளை அதிகம் அறிந்திருக்காத அன்று, அண்ணாசாலையில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஏறி இறங்கி விற்பனை செய்தது வெறும் அனுபவத்தை மட்டுமே அவருக்குக் கொடுத்தது. 

கலெக்சன் ஏஜென்ட் டூ மேனேஜிங் டைரக்டர் - இளம் தொழிலதிபரின் சக்சஸ் ஸ்டோரி  (Sponsored Content)

ஓன்றிரண்டு மாதங்களில் அந்த வேலையிலிருந்து வெளியேறி, நெஸ்லே நிறுவனத்தின் புட்வேர்ல்ட்டில் ப்ரோமோட்டராக சேர்ந்தார். பணிவு மற்றும் இன்முகத்துடனான இவருடைய பேச்சு, கஸ்டமர்களிடையே இவருக்கு நன்மதிப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. விரைவில் 7 பேர் கொண்ட புரோமோட்டார் குழுவுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிட்டியது. பிறகு, தெஹல்கா நாளிதழில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள் 20-30 கடைகளுக்குச் சென்றபோது, இவர் சுமார் பத்து கடைகளுக்கு மட்டும் செல்வார். ஆனால் அந்தக் கடைகளில் பேசி 10-15 போஸ்டர்கள் மக்கள் கண்ணில் படுமாறு வைத்துவிட்டு வருவார். இது நாளிதழ் விற்பனைக்கு அதிகம் உதவியது.

இதன் பின்னர் ஒரு இந்தி நாளிதழில் ஜெனரல் மேனேஜராக சேர்ந்து டெல்லி, ராஜஸ்தான், உபி, பீகார் மற்றும் ஹரியானா பகுதிகளின் விற்பனையை தனியொரு ஆளாக திட்டமிட்டு தன் குழுவுடன் சேர்ந்து உயர்த்தியபோது,  தன்னுள்ளே வைத்திருந்த பிசினஸ் ஆர்வம் தலைதூக்கியது. இத்தனை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தையும், கஸ்டமர்களிடம் தனக்கிருந்த நன்மதிப்பையும் பயன்படுத்திக்கொள்ள பிசினஸ்தான் சரியான வழி என்று முடிவெடுத்தார்

கலெக்சன் ஏஜென்ட் டூ மேனேஜிங் டைரக்டர் - இளம் தொழிலதிபரின் சக்சஸ் ஸ்டோரி  (Sponsored Content)

வெற்றிக்கனி உடனே கிடைத்துவிடுமா என்ன? முதலில் துவங்கிய DTH டிஸ்ட்ரிப்யூஷன் தொழிலில், அரசு மற்றும் SCV கேபிள்களுடன் போட்டியிட முடியாமல் பெருத்த நஷ்டம் உண்டானது. மற்றவர்கள் பொருள்களை நம்பி களம் இறங்காமல் சொந்தத் தொழில் செய்வதே பலனளிக்கும் என்ற பாடம் கற்றார். தோல்வியின் சூட்டில் துவண்டு போகாமல் அடுத்த நகர்வைப் பற்றி சிந்தித்தபடியே நண்பரின் மச்சான் ஒருவரின் சேண்ட்விச் கடைக்குச் சென்றபோது அங்கே சேண்ட்விச்கள் மிகவும் சுவையாக இருப்பதைக் கண்டார். முறையாக பிராண்டிங்கோ, பேக்கிங்கோ இல்லாமல் செய்து வந்ததையும் பார்த்தார். 

அவரிடம் ஒரு அக்ரிமென்ட் போட்டு, அவர் ரெசிபியை கற்றுக்கொண்டு, ஸ்பென்சர் பிளாசாவில் நண்பர்களுடன் சேர்ந்து இந்த சேண்ட்விச் ஸ்கொயர் கடையைத் துவங்கினார். 2014 ல் துவங்கிய முதல் கடையை பல்வேறு சிரமங்களுக்கு பிறகு, 2015 ல் 15 கடைகளாக விரிவடைந்தது. மெனுவில்  இந்திய பீட்சா, 250க்கும் மேற்பட்ட சேண்ட்விச் வகைகள்  என்று பல்வேறு சுவையான ஐட்டங்களுடன் இன்று, மேலே சொன்ன 42 கிளைகளுடன் விரிந்து இருக்கிறது சேண்ட்விச் ஸ்கொயர். விடாமுயற்சியும், புத்திசாலித்தனமான அணுகுமுறையும் இருந்தால் எந்தத் தொழிலும் வெற்றி பெறலாம் என்கிறார் தன்வீர். 

அடுத்த கட்டுரைக்கு