Published:Updated:

ஜூலி டு மன்னை சாதிக்... நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பிரபலமானவர்கள்! #2017Rewind

ஜூலி டு மன்னை சாதிக்... நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பிரபலமானவர்கள்! #2017Rewind
ஜூலி டு மன்னை சாதிக்... நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பிரபலமானவர்கள்! #2017Rewind

ஜூலி டு மன்னை சாதிக்... நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பிரபலமானவர்கள்! #2017Rewind

பிரபலம் ஆவதற்கு தனித்திறமை வேண்டும். அதிலும், நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலமாகப் பிரபலமாவதற்கு தனித்திறமை வேண்டும். இதற்கு உதாரணம், பவர்ஸ்டார் சீனிவாசன். 2017-ல் இப்படி பிரபலமான சிலர்...#2017Rewind

ஜூலி என்கிற ஜூலியானா... சென்னையில் செவிலியராகப் பணியாற்றி வந்தவர். ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடந்த போராட்டத்தில்... ‘கலா கலா சசிகலா’ என்று ஆரம்பித்து கோஷங்கள் எழுப்பியதன் மூலம் பிரபலமானார். இதைத் தொடர்ந்து இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்தன. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மேலும் பிரபலமானார். அங்கே, பலரும் இவரை செமையாகக் கலாய்க்க, மேலும் பிரபலமானார். தற்போது, கலைஞர் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். பிக்பாஸ் முடிந்து மாதங்கள் கடந்துவிட்டாலும், நெட்டிசன்கள் இவரை விடுவதாக இல்லை. சமீபத்தில் இவர் நடித்த அப்பள விளம்பரம் வெளியானது. மறக்க நினைத்த நெட்டிசன்களுக்கு இவரே கூப்பிட்டு கான்செப்ட் கொடுத்தது போலாகிவிட்டது. இந்த விளம்பரத்தில் இவர் பேசும், ‘எனக்கே அஞ்சு செகண்டா...’ வசனம் இவருக்கும்,  அப்பளத்துக்கும் மீம்ஸ்கள் வழியாக ஏகப்பட்ட புரொமோஷனைக் கொடுத்துவிட்டது.


 

மன்னை சாதிக்... இந்த ஆண்டு நெகட்டிவ் பப்ளிசிட்டியில் முதலிடம் இவருக்குத்தான். இந்தப் பொண்ணுங்க லவ் டார்ச்சர் தாங்கமுடியல என்கிற வீடியோ மூலம் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியவர். முதலில் நகைச்சுவையாகக் கருதி பலர் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். பின்னாளில் இவர் வெளியிட்ட வீடியோக்கள், பலரைக் கடுப்பேற்றியது. இவரை வைத்து வந்த மீம்ஸ்கள் பல. தனியார் தொலைக்காட்சி நடத்தும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இவர், தனக்கு பெண்கள் லவ் டார்ச்சர் கொடுப்பதாகக் கூறிய வீடியோவும் வைரல் ஆனது. ட்விட்டரை, டவிட்டர் என்றும்; ஃபேஸ்புக்கை பாஸுபுக்கு என்றும்; மீம்ஸை மாமி என்றும் மொழிபெயர்த்த பெருமை இவரையே சாரும். தன்னை அறிமுகப்படுத்தும்போது ‘லெஜெண்ட், செலிபிரிட்டி, சாக்லேட் பாய், காதல் மன்னன் மன்னை சாதிக்’ என்று சொல்லும் இவர், வெறும் காமெடியன் மட்டுமல்ல, சமூக சேவகரும்கூட என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கு எரிச்சல் வந்தாலும் சிலருக்கு சிரிப்பும் வருகிறது இவருடைய செயல்பாடுகளால்!


 

ஸ்மூல் ரங்கசாமி ஜெயக்கிருஷ்ணன்... மெக்கானிக்கல் இன்ஜினீயர். தற்போது, கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்துவருகிறார். இஸ்ரோ, நேவி என பல இடங்களில் வேலை பார்த்துள்ளார். ஸ்மூல் என்னும் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாடுவதுதான் இவருடைய ஸ்பெஷல்.  இவரின் பல வீடியோக்கள் செம வைரல். பலரையும் பயமுறுத்தும் வகையில் இருந்தபோதும், அதுவே இவரை பிரபலப்படுத்திவிட்டது. ‘ஆளப்போறான் தமிழன்’ தொடங்கி, ‘தும் ஹி ஹோ’, ‘ஷேப் ஆஃப் யூ’ வரை இவர் எந்தப் பாடலையும் விட்டு வைக்கவில்லை. என்னதான் எல்லோரும் இவரைக் கலாய்த்தாலும், யாரையும் கண்டுகொள்ளாமல் தனக்குப் பிடித்ததை செய்வது பாராட்டுக்குரியது.


புளூ சட்டை மாறன்... ‘தமிழ் டாக்கீஸ்’ என்கிற பெயரில் யூடியூப் சேனலில் திரை விமர்சனம் செய்பவர். ப்ளூ சட்டை மட்டுமே அணிந்து திரையில் தோன்றுவதால், அந்தப் பெயரில் கலாய்க்கப்படுகிறார். இவருடைய விமர்சனம் 100 சதவிகிதம் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், நேரடியாகவே தாக்கிp பேசுவதால் பிரபல நடிகர்களின் ரசிகர்களிடம் இவர் பெயர் படாதபாடு படுகிறது. இவருக்கு எதிரான மீம்ஸ்கள் மட்டுமல்ல, வீடியோக்களும் ஏகபிரபலம். தொடர்ந்து விமர்சனம் செய்துவருபவர்தான் என்றாலும், இந்த ஆண்டு விஜய்,அஜீத் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களை விமர்சித்து, ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு