டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மாநிலமெங்கும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அரசு நிர்வாகமோ டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருவதை ஒப்புக்கொள்ளக்கூட மறுக்கிறது. 'சென்னையில் மர்மக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டோர் 93 பேர்’ என்கிறது சென்னை மாநகராட்சி. ஆனால் அதன் பிறகு வெளியான தகவல்களோ, சென்னையின் நான்கு தனியார் மருத்துவமனைகளில் மட்டும் 294 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன. நான்கு மருத்துவமனைகளில் மட்டுமே இத்தனை பேர் என்றால், சென்னையில் இருக்கும் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளிலும் சேர்த்துக் கணக்கிட்டால், தமிழக அளவில் நீட்டித்தால், இந்த எண்ணிக்கை இன்னும் எத்தனை மடங்கு அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக மக்களைப் பாதிக்கும் ஒரு நோய் குறித்து, இந்த அரசு கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

முதலில் 'மர்மக் காய்ச்சல்’ என்று திரும்பத் திரும்பச் சொல்வதே ஒரு திசைதிருப்பல். டெங்கு காய்ச்சலுக்கு 'மர்மக் காய்ச்சல்’ என்ற புனைப்பெயர் எதுவும் இல்லை. 'பிரச்னையை மறைப்பதன் மூலம் தீர்வு கிடைக்காது. நாம் மக்களின் நல்வாழ்வு மீது கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக டெங்குவால் உயிரிழக்கும் குழந்தைகள் மீது பரிவு காட்ட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் சில மாதங்களுக்கு முன்பு சொல்லியிருந்தாலும், அரசு தொடர்ந்து இந்தப் பிரச்னையை மறைத்தேவருகிறது. இப்படி பெயர் மாறாட்டம் செய்வதன் மூலம் டெங்கு பரவுவதை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. டெங்கு குறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரம், நிலவேம்புக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது என்றாலும், அதைப் பெயரளவுக்குச் செய்யாமல் முழுமையாகச் செய்வதற்கு, உண்மை நிலவரத்தை ஒப்புக்கொள்வது முதலில் அவசியம்.

அதிவேகமாக டெங்கு பரவுகிறது என்றால், சுகாதார வசதிகள் அவ்வளவு மோசமாக இருக்கின்றன என்று பொருள். 'உங்கள் வீடுகளில் தேங்காய் மட்டை, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் டப்பாக்களில் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன’ என்று பொதுமக்களை நோக்கி பிரசாரம் செய்கிறது அரசு. ஆனால், இந்த மழைக்காலத்தில் சாலைகளிலும் தெருக்களிலும் வழிந்தோட வழியில்லாமல் பல நாட்களாக தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தி ஆகாதா? இவற்றைச் சரிசெய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இல்லையா?

டெங்கு மட்டுமா... சிக்குன்குன்யா, மலேரியா என பொது சுகாதாரக் கேட்டினால் உருவாகும் எந்த நோயையும் அரசு ஒப்புக்கொள்வதே இல்லை. காவல் துறை பொய் வழக்குப் பதிவு செய்வதைப்போல, வெவ்வேறு நோய்களின் பெயரில் பதிவுசெய்து முடித்துக்கொள்கின்றனர். டெங்கு பரவுகிறது என்ற உண்மையைச் சொல்லும்போதுதான், மக்கள் உஷாராக முடியும். மாறாக உண்மையை மறைக்கும்போது, நோயின் தீவிரத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். குறிப்பாக குழந்தைகளை டெங்கு தாக்குவதால் அவர்கள் மரணத்தின் விளிம்புக்குச் சென்று மீண்டுவருகின்றனர். பல குழந்தைகள் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

அரசு, முதலில் டெங்கு காய்ச்சல் குறித்த உண்மை நிலவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இத்தகைய வெளிப்படையான நடவடிக்கைகள்தான் மக்கள் நல அரசுக்கு அழகு.

செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?