பொருள்களை வாங்குவதற்குமுன் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங் களை விவரிக்கும் `ஷாப்பிங் போக லாமா..?’ பகுதியில் இந்த முறை... கிச்சனின் ஹீரோவான காஸ் ஸ்டவ். மார்க்கெட்டில் கிடைக்கும் காஸ் ஸ்டவ் வகைகள் மற்றும் அதனைப் பராமரிக்கும் முறைகள் பற்றிச் சொல்கிறார், ‘சத்யா ஏஜென்ஸி’யின் மேனேஜிங் டைரக்டர் ஜான்சன்...

தேவைக்கு ஏற்ப தேர்வு!

காஸ் ஸ்டவ் டெக்னாலஜி முதன் முதலாக 1820-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 1836-ம் ஆண்டு மார்க்கெட்டுக்கு வந்தது. இன்று கிராமத்து அடுப்படிகள் வரை ஊடுருவியிருக்கும் காஸ் ஸ்டவ், இன்னொரு பக்கம் கண்ணாடித் தகட்டில் அடுப்பு எனுமளவுக்கு நவீன பயன்பாட்டுக்கு ஏற்ற வடிவ மாற்றத்தையும் அடைந்திருக்கிறது. காஸ் ஸ்டவ் வாங்கும்போது, உங்கள் வீட்டின் சமையல் ஸ்டைல், சமைக்கும் நேரம், சமையல் அறையில் மேடையின் நீள, அகலம் என்று பல கூறுகளையும் நினைவுகூர்ந்து, அதற்குப் பொருத்தமான ஸ்டவ் ஆக தேர்ந்தெடுக்கவும்.

மாடல்கள் ஆறு!

காஸ் ஸ்டவ்வில் இப்போது மார்க்கெட்டில் இருக்கும் ஆறு வகை மாடல்கள் பற்றிய அறிமுகம்

இங்கே...

1. பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல். இதில் பர்னர் பிராஸ் மெட்டீரியலில் இருக்கும்.

2. பராமரிப்பை எளிதாக்கவென்றே அறிமுகப்படுத்தப்பட்ட கிளாஸ் டாப் மாடல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல் போலவே இருக்கும் இதில், மேலே ஒரு லேயர் மட்டும் கிளாஸ் கொடுத்திருப்பார்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நாள்பட்ட கறைகள், எண்ணெய்க் கறை போன்றவைகளை நீக்குவது சிரமம்; இதில் எளிது.

3. ஹாப்ஸ் மாடல்... இது ஹோட்டல் பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்டது.

4. குக்கிங் ரேன்ஜ்... கிளாஸ் டாப் மற்றும் `அவன்’ சேர்ந்தேயிருக்கும் இந்த மாடலும், ஹோட்டல்களில் பயன்படுத்தக்கூடியது.

5. பர்னர் அலாய் மெட்டீரியலால் ஆன கிளாஸ் டாப் மாடல், இன்னொரு வகை.

6. அடுத்ததாக ஏர் மற்றும் ஏர் ப்ளஸ் ஸ்டவ் மாடல். இதில் கிளாஸ் பிளேட் மட்டும் இருக்கும். அதில் இரண்டு பர்னர்கள், அதனைக் கட்டுப்படுத்த ரெகுலேட்டர் கிளாஸ் மேலேயே கொடுக்கப்பட்டிருக்கும். கீழே நான்கு முனைகளிலும் இருக்கும் ஸ்டாண்டு, சுத்தம் செய்யும் மற்றும் பராமரிக்கும் வேலையை எளிதாக்கும். இது வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடியது.

இந்த மாடல்களில், இரண்டு, மூன்று, நான்கு பர்னர்கள் வரைக் கிடைக்கும். தேவையைப் பொறுத்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதேபோல ரெகுலேட்டர் ஆட்டோ இக்னிஷன் எனும் லைட்டர் இல்லாமல் ஸ்டவ்வை ஆன் செய்யும் மாடல் மற்றும் லைட்டர் உதவியுடன் அடுப்பைப் பற்றவைக்கும் மேனுவல் மாடல் என்ற வகைகளிலும், தேவையானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

எந்த வகை அடுப்பை வாங்கினாலும், சிறப்பம்சங் களைவிட அதன் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். அதனை எப்படி, எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிந்துகொள்வதும் அவசியம். பிராண்டட் அடுப்புகள் 1,700 ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் வரை கிடைக்கின்றன.

உங்கள் சூப்பர் கிச்சனுக்கான ஸ்மார்ட் ஸ்டவ் மாடலைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா?!

ந.ஆஷிகா படங்கள்:எம்.உசேன், சி.தினேஷ்குமார்

ஸ்டவ்... டிப்ஸ்!

1. அடுப்பு சற்றே உயரமான இடத்தில், சுவரை ஒட்டி இருக்க வேண்டும்.

2. அடுப்பு மீது நீரை நேரடியாக ஊற்றக்கூடாது.

3. சிலிண்டரைப் படுக்க வைக்கக் கூடாது.

4. கிளாஸ் பிளேட் பொருந்திய அடுப்புகளில் பர்னர் பக்கத்தில் உள்ள இடத்தில் சூடான பாத்திரத்தை வைக்கக் கூடாது.

5. காஸ் டியூப்பை பிராண்டடாக வாங்குவதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும்.

6. சுத்தம் செய்யும்போது பர்னரில் கூர்மையான பொருட்களைக்கொண்டு குத்தக் கூடாது.

7. பொதுவாக, பர்னர் கனமாக இருக்கும் ஸ்டவ் மாடலாகப் பார்த்து வாங்கவும்!