பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் 'பேரன்ட் சர்க்கிள்'!

பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான ‘பேரன்ட் சர்க்கிள்’ என்ற அமைப்பை ஆரம்பித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த நளினா.

‘‘யு.எஸ்-ஸில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு முடித்துவிட்டு அங்கேயே வேலை. திருமணத்துக்குப் பின் இரண்டு குழந்தைகள் பிறந்தபோது, அம்மா என்ற பெரும் பொறுப்பு குழந்தை வளர்ப்பில் நிறைய கேள்விகளைத் தந்தது. பொதுவாக, குழந்தைகளின் ஆரோக்கியமும், சந்தோஷமுமே நமக்குப் பிரதானமாகத் தெரியும். ஆனால், இன்றைய `டெக்கி' உலகம், அவர்களுக்கு தேவையில்லாத பல விஷயங்களை அறிமுகப்படுத்துகிறது. அது பெற்றோரின் பார்வைக்கு வரும் முன்பாகவே, குழந்தைகள் அதில் தீவிரமடைந்து எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறார்கள். எதையும் எளிதில் கிரகித்துக்கொள்வது குழந்தைகளின் இயல்பு. ஆனால், அதை முறைப்படுத்த பெற்றோர்களுக்கு நேரமில்லை. இந்தப் பரந்து விரிந்த உலகிடமிருந்து பிரித்து, அப்பார்ட்மென்ட்டுக்குள் பூட்டி வைக்கப்படும் குழந்தைகள் பலர். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு, பாட்டு, நடனம், கணினி, ஓவியம் என்று குழந்தைகளை ரகம் ரகமாக வகுப்புகளுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் பலர். ஓவர் செல்லம், இன்னொரு பிரச்னை.

இப்படி குழந்தை வளர்ப்பில் எதிர்கொள்ளும் சவால்களை எல்லாம் களையும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான், ‘பேரன்ட் சர்க்கிள்’. குழந்தையை உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியத்துடன் வளர்க்க உதவுவதே இதன் நோக்கம். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், பெற்றோர்கள் என்று பலரும் தங்களுடைய அனுபவங்களை, அறிவுரைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். எமோஷனல் அண்ட் மென்டல் ஹெல்த், இன்டலக்சுவல் டெவலப்மென்ட் என்று குழந்தை வளர்ப்பை பல தளங்களிலும் பிரித்து அணுகுகிறோம். பத்திரிகை, வலைதளம், மொபைல் ஆப் என்று எல்லா வழிகளிலும் பெற்றோர்களைச் சென்று அடைகிறோம். இப்போது சென்னையில் உள்ள பள்ளிகளை மட்டும் ஃபோகஸ் செய்கிறோம்’’ எனும் நளினா,

‘‘குழந்தைகளுக்கு ஓவர் செல்லம் கொடுப்பதன் விளைவுகள் என்ன?

பதின் பருவக் குழந்தைகளை எப்படிக் கையாள்வது?

இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் தடம் மாறும் விஷயங்கள் என்ன?

தடம் மாறும் விஷயங்கள் பற்றி பெற்றோர் அறிவது எப்படி?

விவாகரத்து, துணை இழப்பு போன்ற காரணங்களால் ‘சிங்கிள் பேரன்ட்’டாக குழந்தைகளை வளர்ப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?’’

- இதுபோன்ற பல விஷயங்களுக்கு பேரன்டிங் ஆலோசனைகளை ‘கலங்காதிரு மனமே’ குரல் வழியில் வழங்கவிருக்கிறார். நவம்பர் 24 முதல் 30 வரை 044 - 66802912* என்ற எண்ணில் அழையுங்கள்! * சாதாரண கட்டணம்

ந.ஆஷிகா