Published:Updated:

உதயகீர்த்திகா... நிறைவேறும் விண்வெளிக் கனவு!

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன், மீ.நிவேதன்

உதயகீர்த்திகா... நிறைவேறும் விண்வெளிக் கனவு!

1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: கே.ராஜசேகரன், மீ.நிவேதன்

Published:Updated:

தயகீர்த்திகாவுக்கு சிறு வயதில் இருந்தே வானம்தான் விளையாட்டு மைதானம். தேனி,

உதயகீர்த்திகா... நிறைவேறும் விண்வெளிக் கனவு!

அல்லிநகரத்தைச் சேர்ந்த இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விண்வெளி தொடர்பான நூல்கள் படிப்பதும் விவாதிப்பதும், விண்வெளி ஆய்வு தொடர்பான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைக் குவிப்பதுமாக இருப்பார். இவர் பள்ளியில் செய்த விண்வெளி ஆய்வு தொடர்பான கட்டுரைகளை உக்ரைன் நாட்டின் 'கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ்’க்கு அனுப்பிவைக்க, 'ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்’ துறையில் படிக்க ஸீட் தர முன்வந்தார்கள்.

ஆனால், நான்கு ஆண்டு ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிக்க, சுமார் 12 லட்சம் ரூபாய் செலவு ஆகும். இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு போவது? தவித்த உதயகீர்த்திகாவுக்கு வங்கியில் கல்விக் கடன் கொஞ்சம் கிடைத்தது. வேறு சில நல்ல உள்ளங்களும் உதவிக் கரம் நீட்டினர். மீதம் உள்ள தொகைக்கு என்ன செய்வது என அவர் தவித்து நின்ற வேளையில் தான், நடிகர் ராகவா லாரன்ஸும் ஆனந்த விகடனும் இணைந்து செயல்படுத்தும் 'அறம் செய விரும்பு’ திட்டத்தில் விண்ணப்பித்தார்.

தன்னார்வலர்கள் சங்கர், இயல் இசை வல்லபி, அ.உமர் பாரூக் ஆகிய மூவரும் தங்கள் நிதியில் இருந்து உதவி செய்ய முன்வந்தனர். விறுவிறுவென வேலைகள் நடைபெற்று 1.80 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உதயகீர்த்திகாவிடம் ராகவா லாரன்ஸ் வழங்க ஏற்பாடானது.  ''அப்துல் கலாம் போல நீங்களும் நாட்டுக்கு நல்லது பண்ற பெரிய விஞ்ஞானியாக வரணும்'' என வாழ்த்தி நெகிழ்ந்தார் ராகவா லாரன்ஸ்.

உதயகீர்த்திகா... நிறைவேறும் விண்வெளிக் கனவு!

உதயகீர்த்திகா, உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். '' 'சின்ன வயசுல நிலாவுக்குக் கூட்டிட்டுப் போனாத்தான் சாப்பிடுவேன்’னு வீட்ல அடம்பிடிப்பேனாம். அப்போ, 'விண்வெளித் துறை சார்ந்த படிப்பு படிச்சா நிச்சயம் நீ அந்த நிலாவுக்கும் நட்சத்திரங்கள் சூழ்ந்த விண்வெளிக்கும் போகலாம். இப்போ சாப்பிடு’னு சொல்லி விண்வெளி ஆர்வத்தையும் எனக்குள் சேர்த்து ஊட்டினார் என் அப்பா தாமோதரன். நிலா, வானம், அண்டம், விண்வெளி, விண்வெளி வீரர் தொடர்பான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பேன். நோட்ஸ் எடுத்துவெச்சுப்பேன். அதுதான் பல விண்வெளி ஆய்வுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்க உதவியது. ப்ளஸ் டூ-வில் நல்ல மார்க் எடுத்தேன். 'விண்வெளித் துறை சார்ந்த படிப்புதான் படிக்கணும்’னு உறுதியான கனவோடு இருந்தேன். இப்போ அந்தக் கனவு நனவாகியிருக்கு' என்கிறார் உதயகீர்த்திகா.

'மாணவர்களுக்கு விண்வெளி தொடர்பா எங்கே, எந்தப் போட்டி நடந்தாலும் உடனே என் பேரைக் கொடுத்துடுவேன். இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கோம். இன்டர்நெட் வசதி கிடையாது; அப்பா தனியார் நிறுவனத்துல குறைஞ்ச சம்பளத்துல வேலைபார்க்கிறார். அப்பாவிடம், ஆய்வுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கித் தரச் சொல்வேன். எல்லாமே அதிக விலையா இருக்கும். சில சமயம் சாப்பிடாமக்கூட பணம் சேர்த்துவெச்சு ஆய்வுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார். அப்படிப்பட்ட அப்பாவுக்கு விண்வெளி ஆய்வில் வெற்றிபெறுவதுதான் நான் செய்யும் கைமாறு.

2011-ம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடைபெற்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் என் ஆய்வைச் சமர்ப்பித்து,‘Inspire Award’ வாங்கினேன். 2012-ம் ஆண்டு மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பாக மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட 'சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியிலும், 2014-ம் ஆண்டு அதே விண்வெளி ஆய்வு மையம் நடத்திய 'வழி நடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியிலும் மாநில அளவில் முதல் பரிசு பெற்றேன். அது மூலமா, பெங்களூரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளையும் பி.எஸ்.எல்.வி., மங்கள்யான் ராக்கெட்டுகளை உருவாக்கிய விஞ்ஞானி களையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைச்சது.

உதயகீர்த்திகா... நிறைவேறும் விண்வெளிக் கனவு!

இது எல்லாத்தையும் என் வாழ்வின் முதல் படியாகவே நினைக்கிறேன். நான் தமிழ் மீடியத்தில்தான் படிச்சேன். சில பேர், இங்கிலீஷ் தெரிந்தால்தான் இதுபோன்ற படிப்புகளைப் படிக்க முடியும் என நினைக்கிறார்கள். அது தவறு. ஆங்கிலம் ஒரு மொழி, அவ்வளவுதான். இனிமேல் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்வேன். ஓர் ஏழை மாணவியாலும் விண்வெளித் துறையில் சாதிக்க முடியும் என்பதை என் படிப்பின் மூலமும், என் வாழ்க்கையின் மூலமும் நிரூபித்துக்காட்டுவேன்' என்கிறார் உறுதியாக.

தற்போது உதயகீர்த்திகா உக்ரைன் கார்க்கிவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிட்டார்.

'என் விண்வெளிக் கனவின் முதல் இலக்கை அடைஞ்சுட்டேன். நல்லா படிப்பேன். நாட்டுக்கும் பெருமை சேர்ப்பேன்’ என வாட்ஸ்அப்பில் மெசேஜ் தட்டியிருக்கிறார்.

நல்ல கனவுகள் நனவாகட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism