
'தியேட்டர்களை விலைக்கு வாங்காமல், ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகை மட்டுமே எடுத்ததாகக் கூறும் ஒரு நிறுவனம், திரையரங்குகளில் உள்ள தளவாடங்களைக் காட்டி, தேசிய வங்கியில் கடன்பெற முடியுமா? 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்!’ என்பர். இவர்களின் புளுகு மூட்டையை, எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முடியும்?'
- மு.கருணாநிதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''3 மாத காலமாக பெய்யவேண்டிய வடகிழக்குப் பருவ மழை ஒரு வார காலத்தில் பெய்திருப்பதால் இந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், மழைநீர் தேங்குவது, சாலைகள் பாதிக்கப்படுவது போன்ற பாதிப்புகளை தடுத்திருக்க முடியாது!''
- ஜெயலலிதா

'டாஸ்மாக் விற்பனைக்கு, தொலைநோக்குப் பார்வையுடன் இலக்கு நிர்ணயித்து முன்னேற்பாடுகள் செய்து, அந்தத் 'தண்ணீரு’க்கு இலக்குவைத்த அரசு, மழைத் தண்ணீர்ப் பிரச்னைக்கான தீர்வை முன்னரே கணிக்க மறந்தது, வேதனை அளிக்கக்கூடியது!'
- தமிழிசை சௌந்தரராஜன்

3,500 வகையான கொசு இனங்கள் உலகில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளன!

8.25 கோடி வழக்குகளுக்கு, 'லோக் அதாலத்’ மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது!
1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன கடலூர் மாவட்டத்தில்,
கனமழை மற்றும் வெள்ளத்தால்!