யர்லாந்தில் இருக்கும் ஒரு வித்தியாசமான சுற்றுலாத் தலம்  ஜெயண்ட் கவுஸ்வே (Giant’s Causeway). பேருக்கு ஏத்தமாதிரியே  பயமுறுத்தும் இந்த இடம்  50 மில்லியன் வருஷத்துக்கு முன்பு தான் தோன்றியிருக்கு.  கடற்கரை பகுதியான இதன்  மற்றொரு ஸ்பெஷல்   இங்கே இருக்கும் பாறைகள்தான். இவை அனைத்தும் எரிமலைக் குழம்பின் வெடிப்பிலிருந்து உருவானவை. எந்த ஒரு கொத்தனாரும் மேஸ்திரியும் இல்லாமல்  தங்களைத் தாங்களே கட்டிக்கொண்டது போல ஒரே அளவில் இவை இருப்பதுதான் ஆச்சரியம். அதனால்தான்  பார்ப்பவர்களை இது  பரவசப்படுத்துகிறது.

திறந்திடு சீசே!

சரி, அதுக்கு இப்போ  என்னான்னு கேக்குறீங்களா? மேட்டர் இருக்கு பாஸ்! சமீபத்தில் இந்த இடத்திற்கு வந்த ஒருவர் இங்கிருக்கும் பாறைகளை  வீடியோ எடுத்திருக்கிறார். அப்போது அவர் கேமராவை ஒரு பக்கம் திருப்ப அந்தப் பாறையில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் நம்ம வீட்டு பாத்ரூம் கதவு மாதிரி ரொம்ப அசால்ட்டா திறந்து மூட அதை வீடியோ எடுத்து நெட்டில் போட்டிருக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் இப்போது வைரலாகியிருக்கிறது. இதனால் டிவி சேனல்களும் அங்கே படையெடுத்து மேலும் பரபரப்பாக்கிவிட்டன.

திறந்திடு சீசே!
திறந்திடு சீசே!

இந்தத் திடீர் பப்ளிசிட்டியால் பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என கூட்டம் கூட்டமாக மொய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த இடத்தின் பெயரிலேயே  பூதம் இருப்பதால் பூதம்தான் அந்தக் கதவை மூடியிருக்க வேண்டும் என சிலர் முடிவே பண்ணிவிட்டார்கள்.  பாறையின் அருகில் போய், ‘ஹல்லோ மீட் பண்ணலாமா?’ என்று வேதாளம் ஸ்டைலில் பாறையைத் தட்டித் தட்டி சோதனை செய்தும் பார்க்கிறார்கள்.  ஒருத்தர்  இன்னும் ஒரு படி மேலே போய் ‘இந்தப் பாறைக்கு உள்ளே  பூதம் தூங்குகிறது’ என்று வெளியே போர்டே வைத்து விட்டார். ஆகமொத்தத்தில் அந்த  இடம்  இப்போ முழுநேர செல்ஃபி எடுக்கும் இடமாக மாறிடுச்சு பாஸ்!

திறந்திடு சீசே!

அந்த வீடியோ உண்மையா பொய்யா என ஒருபக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்க சைலண்டா Giant’s Causeway  மட்டும் கன்னா பின்னான்னு  பேமஸ் ஆகிடுச்சு. வெறும் 10 செகண்ட் வீடியோ... இப்படி பட்டையக் கெளப்பிடுச்சு பாஸ்! 

-ஜுல்ஃபி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு