Published:Updated:

இதுக்கெல்லாமா டூர் போவாய்ங்க?

Vikatan Correspondent

ம்ம நாட்டுலதான் நாம் இருவர் நமக்கு இருவர்னு ஆரம்பிச்சு, தற்போதைய நிலைமையில் நமக்கு ஏன் மற்றொருவர் என்கிற ரேஞ்சுக்கு மக்கள்தொகை முன்னேறிக்கொண்டே இருக்கிறது.

இதுக்கெல்லாமா டூர் போவாய்ங்க?

ஆனால் டென்மார்க்கில் தலைகீழ். கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டென்மார்க்கின் பிறப்பு சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம். டென்மார்க்கில் இருக்கும் தம்பதிகளில் ஐந்தில் ஒருவருக்கு குழந்தையில்லை என்கிறது மற்றொரு ஆய்வு. 1960-களில் 2.5 ஆக இருந்த பிறப்பு சதவிகிதம் 2012-ல் 1.7 ஆகக் குறைந்து இருக்கிறது.

இதுக்கெல்லாமா டூர் போவாய்ங்க?

இதற்காக ஸ்பைஸ் ரெஜ்ஸர் என்னும் டென்மார்க்கின் தனியார் ட்ராவல் ஏஜென்ஸி நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு புதுவிதமான விளம்பர அறிவிப்பை வெளியிட்டது. ‘டூ இட் ஃபார் டென்மார்க்’ ‘டென்மார்க்கிற்காக செய்யுங்கள்’ எனப் பெயரிடப்பட்ட அந்த விளம்பரம் டென்மார்க்கில் பயங்கர ஹிட். அவர்களது ட்ராவல் ஏஜென்ஸியில் தம்பதியினராகக் கிளம்பி ஒரு டூருக்கு செல்ல வேண்டும். என்ன செய்வார்களோ தெரியாது, (என்னய்யா செய்யப்போறாங்க) டூர் முடிந்து வந்ததும் மனைவி கர்ப்பமாகிவிட்டாரா என்று சோதனை செய்வார்கள். ரிசல்ட் ஓகே என்றால் பிறக்கும் குழந்தைக்கு மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான பொருட்களும் சுற்றுலாவும் இலவசம் என அதிரடியாய் அறிவித்தார்கள்.

குழந்தை பிறந்த பிறகும் எதுக்குய்யா சுற்றுலா?

- கார்த்தி