Published:Updated:

சினிமா விடுகதை!

Vikatan Correspondent

ந்தவாரம் தல-தளபதி ஸ்பெஷல்! ஆமாம். தல படம் தளபதி பட டைட்டில்ஸ்தான் மாத்தி மாத்தி பதில்களில் ஒளிஞ்சு கிடக்கு. ஜூட்!

சினிமா விடுகதை!

1. வாரா வாரம் சீரியல்ல கட்டாயம் இந்த டைட்டிலைப் போடுவாங்க இப்ப. சீரியலுக்கு வந்து பாப்புலரான ஹீரோயின் தான் படத்துல தலக்கு  ஜோடி அப்ப !  இது என்ன படம்?

2. நல்லா இருந்தா எல்லோரும் இதைக் கேட்பாங்க. ‘இன்னொருவாட்டி’ அந்த மிகப்பெரிய நடிகரோட  தளபதி  நடிக்கலையே. ஸ்லிம்மான ஹீரோயின்தான் ஜோடி. படத்தை எடுத்ததோ தளபதியோட டாடி. இன்னொருவாட்டி டைட்டிலைச் சொல்லுங்க!

3. வட்டி என்றால் கூட வருமே! ஹேர் ஸ்டைலில் தல தெறிக்கவிட்ட படமே!  எக்கச்சக்க எதிர்பார்ப்போட ரிலீஸ் ஆகி இல்லாமல் போனது  தடமே! அந்த சுமாரான படம் என்ன சொல்லு என் தங்கமே!

4. ரிட்டயர்ட் ஆனாலும் பேசுதே ஊரு! தளபதி நடிச்ச ரொமான்டிக் படத்துல இது தாறுமாறு! டைட்டில்,  காமெடியன்,  ஹீரோயின் என மூன்றுமே நாலெழுத்து! பதில் சொல்லுங்க பார்ப்போம்!

5. மூன்று முகத்தில் தல தரிசனம் கிட்டிய படம். லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டாய் வந்த படம். ஃபினிஷிங் குமார் பேர் சொல்ல ஒரு படம்! அது என்ன?

6. விஷ்ணுவை இப்படியும் அழைக்கலாம்! இங்கே ஆரம்பிச்ச  ஹிட் ஆக்‌ஷன் அட்டகாசம்தான் தளபதிக்கு இப்ப வரை எனர்ஜி டானிக். படம் பேரு சொல்லுங்க பார்ப்போம்.

7. அடுக்குத் தொடருக்கு அர்த்தம் தெரிஞ்சா டைட்டிலைப் புடிச்சிடலாம். இந்தப் படத்துல தலயை ரொம்ப ஹேண்ட்ஸம்மா பார்த்தோம். ஸோலோ ஹீரோ இல்லைனாலும் சொல்லி அடிச்சாரே நம்ம தல! படம் பேரு என்னன்னு கண்டுபிடிங்கப்பா!

8. சந்தோஷத்தை இப்படியும் சொல்லலாம். தமிழ்ல ஹிட்டடிச்சு நாலுஞ்சு மொழியில ரீமேக் பண்ண வெச்ச சினிமா! அந்த டைரக்டருக்கே இப்படி ஒரு ஹிட் இனி வருமா? இனிஷியல் டைரக்டருக்கு இண்டஸ்ட்ரில நல்லப் பேரு இருக்கு... ஆனா இல்லை! அந்தப் படம் என்னப்பா?

விடைகள்:

சினிமா விடுகதை!

1. தொடரும், 2. ஒன்ஸ்மோர், 3. அசல், 4. சச்சின், 5. வரலாறு,6. திருமலை, 7. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், 8. குஷி

-சரண்