‘கரினா லிமொஸ்’னு ஒரு பொண்ணு உலகத்தையே திரும்பி பார்க்க வெச்சுருக்கு, அதுவும் பெருமையா தலை குனிஞ்சு பார்க்க வெச்சுருக்கு. பிரேசில் நாட்டை சேர்ந்த கரினா ஒரு ட்வார்ஃப் ( DWARF). அதாவது உடல் வளர்ச்சி குறைந்து காணப்படும் குள்ளப் பெண். உயரம் வெறும் 4 அடி 3 இன்ச் மட்டுமே. ஆனால், இனையத்தில் இப்போது உச்சத்தில் இருக்கிறார். எல்லோத்துக்கும் காரணம் நெட்டிசன்கள் இவரை “உலகின் மிகவும் கவர்ச்சியான குள்ளப் பெண்” என ஏகத்துக்கும் புகழ்ந்து வருவதுதான்.

ஷார்ட், பட் ஸ்வீட்!
ஷார்ட், பட் ஸ்வீட்!

குட்டி நீச்சல் தொட்டியில் ‘கங்ணம்் ஸ்டைல்’ டான்ஸ் ஆடி ஆட்டத்தை ஆரம்பித்த கரினாவை இன்ஸ்டாகிராமில் 40,000த்திற்கும் மேற்பட்டோர், ட்விட்டரில் 45,000த்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்து வருகின்றனர். இணையத்தில்  போடும் ஒவ்வொரு போட்டோவுக்கும் லைக்ஸ்லாம் சும்மா பிச்சுகிட்டு போகுது. இதை பற்றிக் கேட்டால் கரினாவோ, “ எனக்கு உயரம்தான் குறைவு. ஆனால், தன்னம்பிக்கை அதிகம். என் உடலை, என் உயரத்தை நான் மிகவும் விரும்புகிறேன். அதனாலேயே, கவர்ச்சியான என் உடலை மெயின்டெய்ன் செய்ய கடுமையாக உழைக்கிறேன். எனக்கு முன்பே தெரியும் மக்கள் என்னை விரும்புவார்கள் என்று, ஏனென்றால் இதற்கு முன்பே பலர் என்னை விரும்புவதாக கூறியுள்ளனர்” என சிரிக்கிறார்.

ஷார்ட், பட் ஸ்வீட்!

உயரமான பொண்ணு, குள்ளமான பொண்ணு, குண்டு பொண்னுனு பொண்ணுங்க மட்டும் எப்பிடியிருந்தாலும் ஃபேமஸ் ஆகிடுறாங்களே... என்னமோ போடா மாதவா!

-ப.சூரியராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு