தட் ‘பஞ்சாங்கமே சொல்லுச்சு’ மொமென்ட்

நாட்டில் மழை பெய்தாலும் பெய்தது. தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு ஆளாளுக்கு ரமணன்கள் உருவாகி விட்டார்கள். உண்மையோ, பொய்யோ ‘தேவாவே சொன்னார்’ பாணியில் ‘நாசாவே சொல்லியாச்சு. சென்னையில் புயல் அட்டாக் கன்ஃபார்ம்’ என்று பீதியைக் கிளப்பினார்கள். நாசாவாவது பரவாயில்லை, ஒரு விஞ்ஞான நிறுவனம். ஆனால் ‘பஞ்சாங்கத்திலேயே போட்டிருக்கு. புயல் பலமாக சென்னையை உலுக்கும்’னு வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ உலா வந்துச்சு. அதிலும் அந்தப் பஞ்சாங்கத்தில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும்னு எல்லாம் போட்டிருந்தது. நல்லவேளை பாஸ், ‘மழை அதிகமாகப் பெய்து துரைசாமி சப்வேயில் தண்ணீர் நிரம்பும்; 23சி பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும்’னு எல்லாம் பஞ்சாங்கத்தில் இருக்குனு யாரும் அடிச்சுவிடலை. அப்படியே கொஞ்சம் மேலே போனா, ‘வெளிநாடு பணம் இந்தியாவில் குவியும்’னு அந்நியச் செலாவணி ரிப்போர்ட் எல்லாம் சொல்லுது பாஸ். போற போக்கைப் பார்த்தா, ‘இன்று ஃபேஸ்புக்கில் விஜயகாந்த் மீம்ஸ் ஹிட் ஆகும்’, ‘விஜய் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவிப்பார்’, ‘சிம்புவுக்குப் புதிய காதல் வரும்’ என்றெல்லாம் வருமா? ஆமா பாஸ், அடுத்த பஞ்சாங்கத்தில என்னைக்கு மோடி எந்த நாட்டுல இருப்பார்னு கண்டிப்பா போடுங்க!

தட் ‘நல்லா சொல்றீங்கய்யா மீனிங்கு’ மொமென்ட்

நாட்டில் சிக்கிச் சீரழிஞ்சு சின்னாபின்னம் ஆகிற வார்த்தைகளில் உள்கட்சி ஜனநாயகமும் ஒண்ணு. பொதுவா காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி சண்டை, வேஷ்டி கிழிப்புகள் நடந்தா, ‘எங்க கட்சியிலதான் உலகத்திலேயே உள்கட்சி ஜனநாயகம் இருக்கு. அதனாலதான் ஜனநாயக ரீதியா சட்டையைக் கிழிச்சுட்டோம்’னு பேட்டி தட்டி, கொலவெறியைக் கிளப்புவாங்க. இப்போ பீகார் தேர்தல் தோல்வியை அடுத்து அத்வானி அண்ட் கோ மோடிக்கு எதிரா அறிக்கை விட்டிருந்தாங்க. அதைப்பத்தி டி.வி-யில் விவாதம் நடந்தப்போ பா.ஜ.க.காரர் ஒருத்தர் இதையேதான் சொன்னார். ‘எங்க கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இருக்கு. அதனாலதான் கருத்து சொல்றாங்க’னு. ஆக மொத்தம் கோஷ்டி மோதலுக்கு இன்னொரு பெயர் ‘உள்கட்சி ஜனநாயகம்’. என்ன டிசைனோ?

தட் ‘அடுத்த தடவையாவது விவரமாப் பேசுங்க’ மொமண்ட் :

சமீபத்தில் நடிகர் சங்கத் தேர்தலில் நாட்டாமையை வீழ்த்தி ஜெயிச்ச நாசர் & விஷால் டீம் ஜெயலலிதாவைச் சந்திச்சிருக்காங்க. சந்திக்கட்டும். ஆனா, அதுக்கு அவங்க சொன்ன காரணம் இருக்கே, ‘நடிகர் சங்கத் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடக்க உதவியதற்காக’ ஜெயலலிதாவைச் சந்திச்சாங்களாம். தேர்தல் நடத்தணும்னு கோர்ட் உத்தரவிட்டது. நடந்தது. தேர்தல்னா எப்படியும் ஜனநாயகப்படி நடக்கும்தானே? இதில் என்ன ஜெயலலிதா உதவுறது?

தட் ‘இப்படித்தான் இருக்காய்ங்க’ மொமென்ட்

வாட்ஸ் அப்பில் வந்த ஒரு காமெடி:

ஏர்டெல் கஸ்டமர் சர்வீஸுக்கு போன் செய்தார் ஒரு பெண்.
‘என் பையன் சிம் கார்டை முழுங்கிட்டான். அதிலே 99 ரூபாய் பேலன்ஸ் இருக்கு’
‘உடனடியா டாக்டருக்கு போன் பண்ணுங்க. இங்கே ஏன் பண்ணினீங்க?’
‘இல்லை, அவன் பேசினா போன் பேலன்ஸ் குறையுமா?’

தட் ‘கெட்ட நூடுல்ஸே கெடும்‘ மொமென்ட்

‘பட்ட காலிலேயே படும்’கிறது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ நம்ம யோகா பாபா ராம்தேவுக்குப் பொருந்தும். ஏற்கெனவே மேகி நூடுல்ஸுக்குத் தடை போட்டு, அப்புறம் அதை விலக்கி, இடியாப்பச் சிக்கல் நூடுல்ஸ் சிக்கலா இருந்தது. அதையடுத்து ‘நானும் வருவேன். நூடுல்ஸ் தருவேன்’னு கிளம்பி வந்தார் ராம்தேவ். அவரோட பதஞ்சலி நிறுவனம் தயாரிச்ச நூடுல்ஸுக்கு அனுமதியே வாங்கலைனு உணவுப் பாதுகாப்பு மற்றும் இந்தியத் தர ஆணையம் சொல்லியிருக்கு. ஏற்கெனவே பாபா ராம்தேவோட இதே பதஞ்சலி நிறுவனம் உருவாக்கின மருந்துகள் பற்றி சர்ச்சை சலங்கை கட்டி ஆடுச்சு. இப்போ நூடுல்ஸ். அதுசரி சாமியார்னாலே சர்ச்சைதானே!