‘செல்போன் பேசிக் கொண்டு வண்டி ஓட்டியவர் பலி’, ’சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போன் பேசியதால்  வெடித்து சிதறியது’ - இந்த மாதிரி டெர்ரரான செய்திதானே இதுவரைக் கேள்விப்பட்டிருப்பீங்க. முதல் முதலா ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய செல்போன். என்ன மேட்டர் புதுசா இருக்கேன்னு பார்க்கிறீங்களா பாஸ்?

தலை தப்பியது!

கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏழு இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 160-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.

தலை தப்பியது!

இந்த தாக்குதல் நடந்தபோது சில்வஸ்டர் என்பவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்திருக்கிறார். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியையும் வெடிகுண்டையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். சில்வஸ்டர் அருகில் நின்ற தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய அதிலிருந்து ஒரு பகுதி சில்வஸ்டரை நோக்கிப் பாய்ந்திருக்கிறது. அப்போது அவர் யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவருடைய தலையை நோக்கி வந்த அந்த குண்டு எதிர்பாராதவிதமாக செல்போனில்பட செல்போன் உடைந்து இவர் தலை தப்பியது. உயிர் பிழைத்த சந்தோஷத்தில் இருந்த அவர் பார்ப்பவர்களிடம் எல்லாம் இதுதான் என்னுடைய உயிரைக் காப்பாற்றிய செல்போன் என காட்டிக்கொண்டிருக்கிறார்.

தலைக்கு வந்தது டிஸ்ப்ளேயோடு போச்சு!

-ஜுல்ஃபி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு