அடையார் ‘விதை இயற்கை அங்காடி’யில் வியாபாரியாகக் களமிறங்கினார் காமெடி நடிகர் காளி வெங்கட். ‘‘ஹோட்டல்ல கூப்பிட்டிருந்தா, பிரச்னை இல்லாம சமாளிச்சிருப்பேன். ஏன்னா, சினிமாவுல நடிக்கிறதுக்கு முன்னாடி மளிகைக்கடை, ஹோட்டல்ல வேலை பார்த்த அனுபவம் இருக்கு. இதை எப்படி சமாளிக்கப் போறேனோ?’’ எனத் தலையைச் சொறிந்துகொண்டு கடைக்குள் நுழைந்ததுமே, கையில் தடி ஒன்றைக் கொடுத்து கடைக்கு வெளியே அட்ராசிட்டி பண்ணிக்கொண்டிருந்த குரங்குகளை விரட்டிவிட்டு வரச்சொன்னார் கடைக்காரர். ‘‘ரைட்டு... ஆரம்பமே அமர்க்களம்!’’ என்று குரங்கு விரட்டினார் காளிவெங்கட்!

‘‘அரிசி, கோதுமைனு கேட்டா கொடுத்துடலாம். இயற்கை அங்காடினா குதிரைவாலி, எருமைவாலினெல்லாம் பேர் இருக்குமே... எதுக்கும் கொஞ்சம் எக்ஸ்ப்ளையின் பண்ணிடுங்க’’ என்றவர், கடையை ரவுண்ட் அடித்து, ஒவ்வொரு பொருட்களின் பெயர்களையும் குறித்துக்கொண்டு அமர்ந்தார். ‘‘அட! உப்புலகூடவா ‘ஆர்கானிக்’ இருக்கு. அப்போ நார்மல் உப்புல என்ன கலக்குறாங்க?’’ என உப்பு பாக்கெட்டைத் தடவிப்பார்த்தவருக்கு, ‘‘கடல் தண்ணியில தயாராகிற உப்புல சில கெமிக்கல்ஸ் கலப்பாங்க. ஆனா, இது மழைத்தண்ணியில இருந்து தயாரான உப்பு’’ என ஆச்சரிய விளக்கம் கொடுக்க, ‘‘அப்போ, மழை நல்லதுனு சொல்றீங்க!’’ என க்ளைமேட் பன்ச் அடித்தார் காளி.

வினோதமாக என்ட்ரி ஆனார் ஒரு முதியவர். மேலும் கீழும் பார்த்து ‘‘என்ன ஐயா வேணும்?’ எனக் கேட்ட காளிக்கு, ‘‘முதல்ல என்ன என்ன இருக்குனு பார்த்தாதானே சொல்ல முடியும்?’’ என முறைத்துவிட்டு, கடையைச் சுற்ற ஆரம்பித்தார் முதியவர். ‘இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ?’ என காலரைத் தடவிக்கொண்ட காளிக்கு, அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்தார் முதியவர். சின்ன சாம்பிள் இதோ. ‘‘இந்த நல்லெண்ணெய் எங்கே இருந்து வருது?’’ என்ற முதியவரின் கேள்விக்கு, ‘‘ம்ம்ம்ம்... மரச்செக்குல இருந்து சார்!’’ எனத் தயங்கிபடி பதில் சொன்னார் காளி. ‘‘அது எங்களுக்குத் தெரியாதா? எந்த ஊர்ல இருந்து வருது. யாருகிட்ட இருந்து வாங்குறீங்க?’’ என விறைப்பாகக் கேட்க, ‘‘ஆக்சுவலி, நான் கடைக்குப் புதுசு சார். வந்து ஒரு வாரம்தான் ஆகுது’’ என ஜகா வாங்கினார் காளி. அவரை அனுப்புவதற்குள் அடுத்த முதியவர் ஆஜர்!

காளி வெங்கட்டிடம் ‘‘தம்பிக்கு எந்த ஊரு?’’ என ஆரம்பித்தவர்தான் பசுமை இயக்கத்தில் இருந்த கதை, மனுஷன் எப்படியெல்லாம் மாறிட்டான், வேலையெல்லாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு, ஊர்ல விவசாயம் எப்படி? என பெரும் பேட்டியே எடுக்க ஆரம்பித்தார் அந்த முதியவர். பொறுமையிழந்த காளி ‘‘நான் ஒரு நடிகர் சார். ஒரு வீடியோ பேட்டிக்காக இந்தக் கடைக்கு வந்திருக்கேன்’’ எனத் தப்பிக்கப் பார்க்க, வந்தவரோ ‘‘ஓ நடிகரா...’’ என இன்னும் குஷியாகி பேச ஆரம்பிக்க காளி வெங்கட் கிளீன் போல்ட்! தவிர, காளி வெங்கட்டோடு போட்டோ எடுத்தே தீருவது எனத் தெருவரை இழுத்துக்கொண்டு நகர்ந்தார் அந்த முதியவர். காளி வெங்கட் உண்மையிலேயே பாவம்!

‘‘டயாபடிக் பேஷன்டுக்கு ஏத்த மாதிரி ஃபுட்ஸ் இருக்கா?’’ என விசாரித்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம், ‘‘டயாபடீஸ் இல்லாம, ஆரோக்கியமா வாழுறதுக்குத்தான் இதெல்லாம். டயாபடீஸ் எல்லாம் ஒரு வியாதியே கிடையாது. அவங்களுக்கு ஏத்த எல்லா ஃபுட்ஸும் இங்கே இருக்கு!’’ என டாக்டர் ரேஞ்சில் ஃபீல் பண்ணிப்பேச, ஏற இறங்க காளியை நோக்கிவிட்டு, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரிஜினல் கடைக்காரரிடம் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பித்தார். ‘‘விடுங்க பாஸ். நான் ஃபேமஸான நடிகர்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கும்!’’ என சமாளித்தபடி அடுத்த கஸ்டமரை எட்டிப்பார்க்க, இந்த முறை காளிக்கு அள்ளியது அப்ளாஸ்.

காளிதான் கடைக்காரர் என நினைத்து உள்ளே நுழைந்தவர், ‘‘பெயரெல்லாம் அழகான தமிழ்லேயே எழுதிருக்கு. உங்களுக்கு எப்படி இதுல ஆர்வம்?’’ எனக் கேட்க, ‘‘தமிழனா இருந்துட்டு தமிழ் மேல ஆர்வம் இல்லைனா எப்படி சார். மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைச்சேன். பண்ணிக்கிட்டு இருக்கேன்!’’ என நெஞ்சில் கைவைத்து காளி சிலாகித்துக்கொண்டிருக்க, ‘‘எல்லாம் சரி. ‘கட்பி’னு எழுதி வெச்சிருக்கீங்க. தமிழ் இலக்கணப்படி ‘ட்’டுக்குப் பக்கத்துல ‘பி’ வராதே?’ என ஆராய்ந்து கேட்ட கேள்விக்கு காளி பதில் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறீங்க? ம்ஹூம்!

‘‘ உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமான அனுபவம். இதுக்கு முன்னாடி ரெண்டு, மூணு தடவை ஆர்கானிக் ஸ்டோருக்குப் போயிருக்கேன். தமிழ் சினிமாவுல நிறைய நடிகர்கள் ஆர்கானிக் உணவுகளைத்தான் சாப்பிடுறாங்க. அதனாலதான் ‘கான்செஃப்ட்’ சொன்னதும் வண்டியைக் கெளப்பிட்டேன். நமக்கும் ஒரு ஜெனரல் நாலேஜா இருக்கும்ல? ஆனா, இந்த மாதிரி கடைக்கு வர்றவங்க எல்லாம் ரொம்ப அறிவாளிகளா இருக்காங்க. சினிமாவுக்குனு சில ‘இன்டலெக்சுவல் ரசிகர்கள்’ இருப்பாங்க. கேஷுவலா ஃபிரேம்ல தெரிஞ்ச விஷயத்தையும் குறியீடுனு நினைச்சுக்கிட்டு, ‘இந்தக் குறியீடு எதுக்காக வெச்சீங்க?’னு கேட்பாங்க. நாம ‘அப்படியா’னு முழிப்போம். அது மாதிரிதான், இந்தக் கடையில இருந்ததும். ஒருமாசம் இந்த மாதிரிக் கடையில இருந்தா, பெரிய லெவலுக்கு வந்துடலாம்னு நினைக்கிறேன்!’’ என்று இயற்கை அங்காடியில் வேலை பார்த்த அனுபவம் சொன்னவர், வீட்டுக்காக ரெண்டு கிலோ கருப்பட்டியுடன் காரில் ஏறினார்.

- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : பா.கார்த்திக்