சினிமா
Published:Updated:

ஃபேஷன்ங்கிறது கிளாமர் கிடையாது!

நெல்லையில் சங்கீதா

##~##

ட, நெல்லையிலும் ஃபேஷன் ஃபீவர் பத்திக்கிச்சுல!

 என்.சி.எஃப்.டி ஹைட்ஸ் நிறுவனம் தென் இந்திய ஆடை வடிவமைப்புப் போட்டியை, திருநெல்வேலி பார்வதி சேஷ மஹாலில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர், நடிகை சங்கீதா. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது 'ஜோடி நம்பர் ஒன்’ புகழ் பாவனா.    

என்னவோ ஓர் எதிர்பார்ப்பில் 'வம்பு’ புகழ் சங்கீதாவின் வருகைக்கு ஆர்வமாகக் காத்து இருந்தார்கள் நெல்லை இளைஞர் கள். ஆனால், கத்திரிப் பூ கலரில் கல் ஜரிகைவைத்த சுடிதார் போட்டு பாந்தமாக  வந்து அமர்ந்தார் சங்கீதா. உடனே 'சங்கீதா... சங்கீதா...’ என்று அரங்கத்தில் சவுண்ட் பறக்க,  சிரித்தபடி மேடை ஏறினார் சங்கீதா.

ஃபேஷன்ங்கிறது கிளாமர் கிடையாது!

''இந்த மாதிரி ஃபேஷன் ஷோ எல்லாம் நெல்லைக்குப் புதுசு, ரொம்பக் கூச்சப்படுவீங்கனு நினைச்சேன். ஆனா, பட்டையைக் கிளப்புறீங்களே!'' என்றவர், ஃபேஷன் பற்றி கொஞ்சம் டிப்ஸ் கொடுத் தார்.

ஃபேஷன்ங்கிறது கிளாமர் கிடையாது!

''ஃபேஷன்ங்கிறது கிளாமர் கிடையாது. நம்ம உடம்புக்கு எந்த டிரெஸ் செட் ஆகுதோ, அதுதான் ஃபேஷன். நாம தேர்ந்து எடுத்த ஆடை  நல்லா இருக் குனு நம்பிக்கை இருந்தாலே அது நம்மளை இன்னும் அழகாக்கும். 'தப்புப் பண்ணினாலும் கான்ஃபிடன்டா பண்ணு’னு என் அம்மா சொல்வாங்க. எதையும் முழு நம்பிக்கையோட செய்தா, வெற்றி நமக்குதான். மும்பை, சென்னை மாதிரி சில வருஷத்தில் நெல்லை யும் ஃபேஷன் டிசைனில் இடம்பிடிக்கும்!'' என்று அவர் பேசி முடிக்க, நல்ல பிள்ளைகளாகக் கேட்டுக்கொண்டார்கள்.

போட்டியில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து ஃபேஷன்  மாணவிகள் வந்து இருந்தார்கள். பிக் ஹனி, ப்ரில்லி பெட்டல், பீகாக் ஃபெதர், சாக்கோ கேர்ள்ஸ், பார்ட்டி வேர், ரெட் ரோஸ், ஆரிஹமி, ஸ்பார்க்கில்ஸ் என விதம் விதமான டிசைன்களில் ஆடைகள் அணிந்துவந்து, கேட்வாக்கினார்கள். முழுக்க முழுக்க மயில் தோகையில் ஆடை செய்து இருந்த கோவை அவிநாசிலிங்கம் இன்ஸ்டிட்டியூட் மாணவிகள் அபிநயா மற்றும் மஞ்சுவுக்கு, முதல் பரிசு! ''இந்த நிகழ்ச்சியை திருநெல்வேலியில் நடத்த என்ன காரணம்?'' என்ற கேள்விக்கு, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப் பாளர்கள் அளித்த பதில் இது... ''ஃபேஷன் டிசைனிங் பற்றி அடிப்படை ஆர்வமும் மேலதிக விழிப்பு உணர்வும் கொண்டுவர்றதுக்காக, இங்கே நிகழ்ச்சி நடத்தினோம். ஃபேஷன் டிசைனிங் படிப்பை டென்த், ப்ளஸ் டூ, டிகிரி படிச்ச யாரும் படிக்கலாம். கொஞ்சம் கிரியேட்டிவிட்டி இருக் கணும். இந்தக் கோர்ஸுக்கு சாஃப்ட்வேர் படிப்பு களுக்கு இணையான சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு இருக்கு. அதனால், நெல்லைச் சீமையில் இருந்து எதிர்காலத்தில் நிறைய ஃபேஷன் டிசைனர்களை உருவாக்க எங்களால் முடிஞ்ச கோடு போட்டு இருக்கோம்!''

ஃபேஷன்ங்கிறது கிளாமர் கிடையாது!

ரோடு போடுங்க பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்!

- ஆ.கோமதிநாயகம், படங்கள்:எல்.ராஜேந்திரன்