Published:Updated:

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

‘அறம் செய விரும்பு’ திட்டம் நிகழ்த்தும் உதவிப் பணிகளின் அப்டேட்..! விகடன் டீம், படங்கள்: ரமேஷ் கந்தசாமி, எம்.நிவேதன்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

‘அறம் செய விரும்பு’ திட்டம் நிகழ்த்தும் உதவிப் பணிகளின் அப்டேட்..! விகடன் டீம், படங்கள்: ரமேஷ் கந்தசாமி, எம்.நிவேதன்

Published:Updated:

ரசு பள்ளிகள் மீது நம்பிக்கை இழந்து, மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி படை யெடுக்கத் தொடங்கிய 90-களின் இறுதியில் தொடங்கப்பட்டவைதான் தாய்த் தமிழ்ப் பள்ளிகள். இதில் கோபிச் செட்டிப்பாளையத்தில் இயங்கும் தாய்த் தமிழ்ப் பள்ளியும் ஒன்று.

``சுமார் 400 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில், தமிழ் வழியில் அடிப்படை அறிவியல் மற்றும் அடிப் படைக் கணிதத்தைக் கற்பிக்கும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்துத் தந்தால், மாணவர்கள் பயன் பெறு வார்கள்'' என கோரிக்கை வைத்தார் `அறம் செய விரும்பு' திட்டத்தின் தன்னார்வலர்களில் ஒருவரான பூங்குழலி.

உரிய விசாரணைகளுக்குப் பிறகு, தமிழ் வழியில் அடிப்படை அறிவியல் மற்றும் கணிதத்தை கற்றுத்தரும் 52 மணி நேரம் ஓடக்கூடிய சி.டி-க்களுடன் புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள்,  லேப்டாப், புரொஜெக்டர், ஸ்கிரீன், ஸ்பீக்கர், யு.பி.எஸ் உள்ளிட்ட தேவையான அத்தனை உபகரணங்களும் பள்ளிக்கு வழங்கப்பட்டன. 
 
“கற்றலிலும், கற்பித்தலிலும் எளிமை யையும் நவீனத்தையும் கொண்டுவரும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மாணவர்களுக்குப் மிகுந்த பயனுள்ள தாக இருக்கும். உதவிய அத்தனை பேருக்கும் எங்கள் மாணவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்'' என்கிறார், கோபி தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் குமணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

**  சென்னை, சிந்தாதிரிப்பேட்டை அருகே கூவம் கரையோரத்தில் நூற்றுக்கணக்கான குடிசைப் பகுதிகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழைவெள்ளத்தில் இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான குடிசைகள் கூவத்துக்குள் மூழ்கின. மக்கள் அனைவரும் சாலையோரங்களில் வாழ வேண்டிய நிலைமை. வெள்ளம் வடிந்து மறுபடியும் வீட்டுக்குள் வந்து சுத்தம் செய்து வாழத் தொடங்கி விட்டாலும் அடிப்படை வசதிகள்கூட அவர்களுக்கு இல்லை.

``இந்த மழைக்காலத்தில் குளிரிலும் கொசுவிலும் மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு போர்வை கொடுத்தால் பயன் உள்ளதாக இருக்கும்'' என்றார் நமது தன்னார்வலர்களில் ஒருவரான கவின் ஆண்டனி. உடனடியாக 200 போர்வைகள் வரவழைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன.

**மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட, இப்போது வரை அரசின் மீட்பு நடவடிக்கையோ, நிவாரணப் பணிகளோ சென்றடையாத பகுதி களில் ஒன்று சென்னை, நெற்குன்றம்.  தன்னார்வலர்கள் கவாஸ்கர் மற்றும் மருத்துவர் ஏ.ஆர்.சாந்தி ஆகிய இருவரும், `` `அறம் செய விரும்பு' திட்டத்தில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்க நினைக்கிறோம்'' என்று சொல்ல... அவற்றை நெற்குன்றம் பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இந்தப் பகுதியில் சுமார் 2,000 குடும் பங்கள் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

``விருகம்பாக்கம் ஏரிக்குப் போற தண்ணி முழுக்க இந்த வழியாத்தான் போகுது. அபிராமி நகர், மீனாட்சியம்மன் நகர், பாலவிநாயகா நகர், லட்சுமி நகர், சி.டி.என். நகர் முழுக்கவே மழைத் தண்ணியால நிரம்பிடுச்சு. மாநகராட்சி எல்லைக் குள்ள இந்தப் பகுதி வந்தாலும், 5 வருஷமா கால்வாய் தூர் வாராததாலதான் இவ்வளவு பிரச்னையும். தேங்கியிருக்குற மழைத் தண்ணி யால கொசு அதிகமாகிருச்சு. எங்க ஜனங்களுக்கு போர்வை கொடுத்தீங்கன்னா கொசுக்கடியில இருந்து கொஞ்சம் தப்பிச்சுக்குவோம்’’ என கோரிக்கை வைத்தார் வெள்ளைச்சாமி என்பவர். 

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

`அறம் செய விரும்பு’ நிதியில் இருந்து 1,82,925 ரூபாய்க்கு, 1,000 போர்வைகளை வாங்கித் தந்தோம். இந்தப் பணியில் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ பீமாராவ் (சி.பி.எம்) முழுமையாக ஈடுபட்டார். 
போர்வை வாங்கிய விஜயராணி நம்மிடம்,  ``நான் கட்டட வேலைக்குப் போறேன். எனக்கு ரெண்டு பொம்பளைக் குழந்தைங்க, ஒரு பையன். மூணு பிள்ளைங்களை வெச்சுக்கிட்டு இந்த மழையில லோலுபடுறேன்.  தண்ணி வடியாததால  சமைக்க முடியலை. ஓட்டல்ல வாங்கிச் சாப்பிடுற அளவுக்கு காசும் இல்லை. நைட் கொசு கடிச்சுக் கொல்லுது. இந்த போர்வைங்க எங்களுக்கு உதவியா இருக்கும்'' என்றார் நன்றியுடன். 

அனைத்து மக்களுக்கும் போர்வை வழங்கும் பணியை கடைசி வரை நின்று ஒருங்கிணைத்து செயல்பட்ட பீமாராவ் எம்.எல்.ஏ., ``தேங்கியுள்ள மழைநீரால் பலருக்கு வயிற்றுப்போக்கு வர ஆரம்பித்துவிட்டது. இந்த அரசாங்கத்தில் எல்லா வற்றையும் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. போராடாமல் கிடைத்த ஒரே நிவாரணப் பொருள், இந்தப் போர்வைகள்தான். ராகவா லாரன்ஸுக்கும் ஆனந்த விகடனுக்கும் மிக்க நன்றி'' என்றார் நெகிழ்ச்சியோடு.

- அறம் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism