“எனக்கு மூன்று வயது இருக்கும்போதே பெரும் குடிப் பழக்கத்தால் என் அப்பா இறந்துவிட்டார். என் அம்மா கூலி வேலை செய்துதான் என்னைப் படிக்க வைத்தார். அதனால் ஒவ்வொரு பைசாவின் மதிப்பையும் மிகத் துல்லியமாக சின்ன வயதிலிருந்தே உணர்ந்திருக்கிறேன்” என உருக்கமாக பேசத் தொடங்கினார் நாமக்கல் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஆனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். அவரே மேலும் தொடர்ந்தார்.

‘‘பி.எஸ்சி மைக்ரோ பயாலஜி படித்து முடித்ததுமே 2007-ல் இருந்தே சின்ன சின்ன கம்பெனிகளில் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். 2011-லிருந்து தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். இப்போது எனக்கு வயது 30. எனக்கு 2011-ல் திருமணம் ஆனது.
மனைவி ரூபினி இப்போது எம்.எஸ்சி இறுதியாண்டு படிக்கிறார். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் அரசுப் பணியில் சேர்வதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்கிவிட்டார்.

என் குழந்தை க்ருஷ்ணிக்கு மூன்று வயது ஆகிறது. அடுத்த வருடம் எல்கேஜி சேர்க்க வேண்டும். எனக்கு பிடித்தம் போக 34,000 ரூபாய் சம்பளம். பி.எஃப் ரூ.1,500 பிடிக்கிறார்கள். கம்பெனியில் என் குடும்பத்தினருக்கும் சேர்த்து ரூ.1 லட்சத்துக்கு மெடிக்ளெய்ம் உள்ளது. மொத்த மாதாந்திரச் செலவாக ரூ.22,500 ஆகிறது. ரூ.11,500 வரை மிச்சப்படுத்த முடிகிறது. ஆனால், இந்தத் தொகைக்கு இதுவரை எந்த பிளானும் செய்யவில்லை.

பர்சனல் லோன் ஒன்று வாங்கியுளேன். அதற்கு மாதம் ரூ.5,600 கட்டி வருகிறேன். ஜூன் 2016-ல் இது முடியும். நகை அடமானக் கடன் மாதம் ரூ.2,000 கட்டி வருகிறேன். இது 2017 ஜனவரி வரை கட்ட வேண்டியிருக்கும். நான்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுத்து வைத்திருக்கிறேன். அரசு ஓய்வூதியத் திட்டத்தில் மாதம் ரூ.500 ரூபாய் செலுத்தி வருகிறேன். நான் இப்போது நாமக்கல்லில் வாடகை வீட்டில் இருக்கிறேன். ஆனங்கூர் கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. இப்போதைய மதிப்பு ரூ.10 லட்சம். 1 ஏக்கர் 40 சென்ட் ஆற்றுப் பாசனத்தில் விவசாய நிலம் உள்ளது. அதன் மதிப்பு 30 லட்சம் ரூபாய். விவசாயம் மூலம் வரும் வருமானத்தை விவசாயத்துக்கே செலவு செய்கிறேன். அம்மாவின் செலவுகளுக்காகவும் கொஞ்சம் கொடுத்துவிடுகிறேன்.

இப்போது ரூ.1 லட்சம் எஃப்டி போட்டுள்ளேன். இந்த பணத்தை வருடத்துக்கு ஒருமுறை எடுத்து மீண்டும் எஃப்.டி.-யிலேயே போட முடிவு செய்துள்ளேன். மகளுக்கு பொன்மகள் திட்டம் மூலம் மாதம் 1,000 ரூபாய் செலுத்த திட்டமிட்டுள்ளேன். கடந்த மாதம் முதல் ரூ.25 லட்சத்துக்கு டேர்ம் பாலிசி எடுத்துள்ளேன்.

எனக்கு இயற்கையோடு இணைந்து வாழவேண்டும் என்பதே ஆசை. பணம் மட்டுமே அல்லாமல் மனதிருப்தியும் முக்கியம் என நினைக்கிறேன். என் மனைவி வேலைக்கு சேர்ந்தவுடன் நான் வேலையை விட்டுவிட்டு முழு நேரம் விவசாயத்திலும், பண்ணையிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன். நான் எப்போதும் பட்ஜெட் போடாமல் இருந்ததே இல்லை; பட்ஜெட் போடுவதால்தான் என்னால் சேமிக்க முடிந்தது. என் இலக்குகள் குறிப்பிட்ட சில மட்டுமே...

* குழந்தையின் மேற்படிப்புக்கு அடுத்த 14 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.20 லட்சம். * குழந்தையின் திருமணத்துக்கு அடுத்த 22 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.35 லட்சம்.

* எனது ஓய்வுக்காலத்துக்கு இன்னும் 28 வருடங்கள் இருக்கின்றன. பி.எஃப் ரூ.1500 மற்றும் அரசு திட்டத்தில் ரூ.500 தவிர வேறு எந்த திட்டமும் செய்யவில்லை. அப்போதைய சூழலில் பணவீக்கத்தையும் சேர்த்தால் மாதம் ரூ.40,000 தேவைப்படலாம். இதற்கு எதில், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

சொந்த வீடு குறித்து இப்போதைக்கு என் திட்டத்தில் இல்லை. ஆனங்கூரில் இருக்கும் வீட்டைப் பராமரிப்பு செய்தாலே போதும் என நினைக்கிறேன். பர்சனல் லோன் முடிந்ததும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுளேன். எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்று பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தார் செல்வராஜ். அவர்கள் கேட்ட கேள்விகளை நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதியிடம் கொண்டு சென்றோம். அவர் அளித்த நிதித் திட்டமிடல் இனி...

‘‘வெரி வெரி குட் செல்வா... மூன்று வயதில் அப்பாவை இழந்திருந்தும் இந்த 30 வயதில் பக்காவாக செட்டிலாகி நிற்கிறீர்களே... அதற்கு மறுபடியும் உங்களுக்கு ஒரு குட். அம்மாவின் வலியை முழுதாக நீங்கள் சின்ன வயதிலேயே உள்வாங்கியதாலேதான் பணத்தின் அருமையை உணர்ந்து சிக்கனமாக இருந்து சேமிக்கப் பழகியிருக்கிறீர்கள். குடும்பத்தின் பாதுகாப்புக்காக நீங்களாகவே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பது சிறப்பு. எதையும் முன்யோசனையுடன் அணுகும் திறன் உங்களிடம் இருப்பதை உணர முடிகிறது.

நீங்கள் விவசாயம் மற்றும் ஆட்டுப் பண்ணையை பெரிதாக வளர்த்தெடுக்க ஆசை என்கிறீர்கள். ஆக உங்களுக்குள் இருக்கும் அம்பானியை அசால்ட்டாக எட்டிப் பார்க்க வைக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. ஆனால், இப்படி பிசினஸ் செய்ய விரும்புபவர்கள், தங்கள் கனவை நினைவாக்க மிகக் கடுமையாக உழைத்தும் சில சமயங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களாலோ அல்லது தொழில் பிரச்னையாலோ தங்களிடம் இருக்கும் பணத்தை இழந்துவிட்டால் அவர்கள் கனவை மீண்டும் சுமந்து எழுவது மிகக் கடினமாகிறது.

ஆகவே முதலில் நீங்கள் செய்ய இருக்கும் விவசாயம் மற்றும் ஆட்டுப் பண்ணைகளில் உள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்களை ஒரு பேப்பரில் நீங்களே முழுமையாக எழுதுங்கள். பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்களை பார்த்தபின்னும் வேலையை விட்டுவிட்டு விவசாயம் மற்றும் பண்ணை பிசினஸை செய்யத் தீர்மானித்தீர்கள் என்றால் குடும்பத்துக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான செலவுகளை ஒதுக்கிவிட்டு, பிசினஸை தொடங்குங்கள். இப்படி குடும்ப செலவுகளை நீங்கள் முன்கூட்டியே தந்துவிடுவதால் தைரியமாக உங்கள் பிசினஸை குடும்ப டென்ஷன் இல்லாமல் மேற்கொள்ளலாம்.

குழந்தையின் கல்வி: குழந்தைக்கு மிகச் சிறிய வயது என்பதால், மேற்படிப்பு இலக்கையும் செலவுகளையும் இப்போதே தீர்மானிக்க முடியாது. ஆனாலும், 14 வருடத்தில் மாதம் ரூ.4,650 முதலீடு செய்தால், உங்கள் இலக்கு தொகையான ரூ.20 லட்சம் கிடைத்துவிடும். ஒருவேளை சந்தையின் போக்கு நன்றாக இருந்து நீங்கள் செய்த முதலீடுகளும் நன்றாக வளர்ந்துவிட்டால், உங்கள் இலக்கு தொகையான ரூ.20 லட்சம் முன்கூட்டியே கிடைக்கலாம். அப்படி கிடைக்கும்பட்சத்தில், அதிலிருந்து 80 - 90 சதவிகித தொகையை பாதுகாப்பாக எஃப்டிக்கு மாற்றிவிட்டீர்கள் எனில் முதலீட்டுக்கான பலனை பெற்றுவிடலாம். பின்வரும் நாட்களில் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் கவரேஜ் தொகையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

திருமணம்: திருமணத்துக்கு தேவையான ரூ.35 லட்சம் மாதம் ரூ.2,730-யை சுமார் 12% லாபம் தரக்கூடிய முதலீடுகளில் முதலீடு செய்தால் 22 வருடத்தில் கிடைக்கும். நீங்கள் 12 சதவிகித வருமானத்தை பெற உங்கள் முதலீட்டில் 60 சதவிகிதத்தை ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளிலும், 30 சதவிகித தொகையை கடன் மற்றும் கடன் சார்ந்த முதலீடுகளிலும், மீதமுள்ள 10 சதவிகித தொகையை தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்யவும். ஈக்விட்டி 15 சதவிகிதமும், கடன் 8 சதவிகிதமும், தங்கம் 7 சதவிகிதமும் வருமானம் கொடுத்தால் மொத்தமாக 12% வருமானம் கிடைக்கும்.

ஓய்வு காலம்: கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள்கூட நல்ல வாழ்க்கை தரத்துடன் வாழ விரும்புகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பட்ஜெட்டை பார்க்கும்போது, வரவுக்கும் செலவுக்கும் மிகச் சரியாக இருப்பதாகத் தெரிகிறது. வரும் காலங்களில், இந்த மாதாந்திர செலவுகள் இன்னும் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே, இன்றைய தேதிக்கு, சுமாராக உங்களுக்கு மாதம் 10,000 ரூபாய் தேவைப்படுகிறது எனில் கொண்டால், ஆண்டுக்கு 7% பணவீக்கம் என்று கணக்கிட்டால் 30 வருடங்கள் கழித்து ரூ.76,000 தேவைப்படும். மாதம் ரூ.76,000 வேண்டும் என்றால் உங்களிடம் ரூ.1.65 கோடி இருக்க வேண்டும். இந்த ரூ.1.65 கோடியிலிருந்து பணவீக்கத்தைவிட குறைந்தபட்சம் 1 சதவிகிதமாவது கூடுதலாக வருமானத்தை ஈட்டினால்தான் நீங்கள் 80 வயது வரை எந்த பிரச்னையுமின்றி நிம்மதியாக வாழலாம்.

இதோடு பீமா கோல்டு பாலிசி கவரேஜ் தொகையை அதிகரித்துக் கொள்வது நல்லது. ரூ.1.65 கோடி இலக்குக்கு மாதம் ரூ.4,720-யை முதலீடு செய்யவேண்டும். பி.எஃப், என்பிஎஸ் உள்ளிட்டவைகளையும் சேர்த்தே சொல்கிறேன்.

ஹெல்த் கவர்: உங்களுக்கு அலுவலகத்தில் வழங்கிய ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ரூ.1 லட்சம் போதாது; எனவே, நீங்கள் தனியாக ரூ.3 லட்சத்துக்கு ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளுங்கள்.

மனைவியின் வேலை, உங்களது விவசாயக் கனவு, இரண்டாவது குழந்தைக்கான வாய்ப்பு என அதிகப்படியான மாற்றங்களுக்கு வித்திடக்கூடிய வகையில் உங்களுக்கு நிறைய விஷயங்கள் நடக்கலாம். அப்படி நடக்கும்போது இப்போது சொல்லப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

* லார்ஜ் கேப்: *ஐடிபிஐ டாப் 100
பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி
* மிட் அண்ட் ஸ்மால் கேப்: யூடிஐ மிட் கேப், பிஎன்பி பரிபாஸ் மிட்கேப்
* பேலன்ஸ்டு: எஸ்பிஐ மேக்னம் பேலன்ஸ்டு
* கோல்டு ஃபண்ட்: ஹெச்டிஎஃப்சி கோல்டு ஃபண்ட்”

படங்கள்: பா.காளிமுத்து

உங்களுக்கும் நிதி ஆலோசனை வேண்டுமா?
finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களை குறிப்பிட்டு அனுப்புங்கள்.

உங்கள் செல்போன் நம்பரை தவறாமல் குறிப்பிடவும்.
தொடர்புக்கு: 9940415222