Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

"முயற்சியை மூலதனமாக மாற்றுங்கள்!'

‘‘தினசரி வாழ்வில் நாம் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். அதில் சிலருடைய வாழ்வு இன்ட்ரஸ்டிங்காக இருக்கும்; சிலருடைய வாழ்வு நமக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும். ஒவ்வொருவருடைய வாழ்வில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்! அதிர்ஷ்டத்தினால் வெற்றி பெறுபவர்கள் மிகக் குறைவு. வெற்றியாளர்கள் ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெரிய போராட்டம் இருக்கும்!’’

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- கவனிக்க வைக்கும் விதமாகப் பேசுகிறார், பட்டிமன்றப் பேச்சாளர் மற்றும் தன்னம்பிக்கை எழுத்தாளரான, விருதுநகரைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் க.ராமச்சந்திரன்.

“நாம் அனைவரும் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். அதில் சிறு தடை ஏற்பட்டதும், எதிர்காலமே தொலைந்துவிட்டது என மூலையில் முடங்கிவிடுகிறோம். ஆனால், ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு பாடம் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வதுதான் வெற்றிக்கான வழி. எல்லாவற்றுக்கும் மேலாக திட்டமிட்டுச் செயல்படுவது மிக முக்கியம்.

மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து, நானும் அவரைப் போல் செய்தால் வெற்றி பெறுவேன் என்று நம்பினால், அது தோல்விக்கே வழி வகுக்கும். முதலில், எந்தத் துறையில் நீங்கள் திறமையானவர் என்பதை முடிவு செய்து, அதற்கேற்ப உங்களது பாதையை அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் திறமையின் மீது தீராத நம்பிக்கை கொண்டு, யாருக்காகவும் உங்களது குறிக்கோளை மாற்றிக்கொள்ளாமல் போராடினாலே வெற்றி சாத்தியமாகும். தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றவர்களின் வாழ்வை பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்ச நாள் போராட்ட வாழ்வு, ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமான சந்தோஷத்தை பலனாகக் கொடுக்கும் என்பதை நினைவில் வையுங்கள்!’’ என எனர்ஜெட்டிக்காகப் பேசும் ராமச்சந்திரன்...

•  வறுமையையும் மீறி உயரலாம் வாழ்வில்!

•  தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் ஜெயிப்பது எப்படி?

•  வெற்றிக்கு ஊனம் ஒரு தடையல்ல!

•  முயற்சியை மூலதனமாக மாற்றுங்கள்!

•  படிக்கற்கள் ஆகும் தடைக்கற்கள்!

•  வலிகளைத் தாண்டினால் வாகை சூடலாம்!

•  வெற்றியை வாழ்வின் வெளிச்சமாய் மாற்றிக்கொள்வது எப்படி?

- இப்படி உங்கள் தன்னம்பிக்கை பயிருக்கு தண்ணீர் ஊற்றும் பல விஷயங்களை ‘கலங்காதிரு மனமே’ குரல் வழியில் டிசம்பர் 22 முதல் 28 வரை பகிர்கிறார். 044 - 66802912* என்ற எண்ணில் அழையுங்கள்... மனம் பிரகாசம் பெறும்! * சாதாரண கட்டணம்

சு.சூர்யா கோமதி, படம்:ஆர்.எம்.முத்துராஜ்