பிரீமியம் ஸ்டோரி

``ண்ணி வண்டிக்காகக் காத்து நின்ன சென்னை, இப்ப தண்ணிய வழிச்சு எடுக்கிற வண்டிக்காகக் காத்திட்டிருக்கு.”

``தண்ணி கழுத்து வரைக்கும் வந்தப்பவும் தலையை உயர்த்தி நாங்க `அதுக்கும் மேல’னு சொன்ன சென்னை... சான்ஸே இல்ல!''

மழைவெள்ளத்தில் சிக்கித் திமிறி எழுந்திருக்கும் சென்னைக்கு, இப்படி தம்ஸ்அப் சொன்னது  தமிழ் மீடியா இல்லை. ஒரு மலையாள எஃப்.எம் எனர்ஜி குரலில், அழகு மலையாளத்தில் சென்னையின் தோள் மீது கை போட்டு உரிமையும் அன்புமாக அந்த ஆர்.ஜே பேசும் ஆடியோ, கடந்த வாரம் முழுக்க வாட்ஸ்அப் வைரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், ஷான்.  கோல்டு 101.3 எஃப்.எம்-மின் கலகல ஆர்.ஜே.

சென்னை அதுக்கும் மேல!


 
``சென்னை மழை பற்றி நீங்க பேசினது செம ஹிட்... எப்படி இப்படி ஒரு ஃபீல்?’’

``என் நிகழ்ச்சியோட ஆரம்பத்துல பேசின லிங்க் அது. இவ்ளோ பெரிய ஹிட் ஆகும்னு நினைக்கல. அது என் மனசுல இருந்து பேசின வார்த்தைகள். இந்தியா முழுவதும் சகிப்புத்தன்மை இல்லைனு அடிச்சிக்கிட்டு இருக்கும்போது, சென்னை இந்தப் பேரிடர் காலத்துல ஒண்ணா எழுந்து நின்னதைப் பார்த்து, அவ்வளவு சந்தோஷப்பட்டேன். என் கொச்சின் நண்பர்கள் நிறையப் பேர், சென்னைக்காக நிவாரண வேலைகள் செஞ்சதைக் கேள்விப்பட்டேன். என்கிட்ட இருந்தது என் குரல், வார்த்தைகள், மைக் மற்றும் ரேடியோ. நான் உணர்ந்ததை அதுல உண்மையாச் சொன்னேன். அது எல்லோருக்கும் போய்ச் சேர்ந்ததில் ரொம்பச் சந்தோஷம். சென்னையை `கலாசாரத் தலைநகரம்'னு சொன்னேன். அது உண்மைனு சென்னை நிருபிச்சிருக்கு.''

``உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க?''

``18 வயசுல இருந்தே ஆர்.ஜே-வா இருக்கேன். சில மாசம் முன்னவரைக்கும் கொச்சின்வாசி; இப்போ துபாய்வாசி. இங்க கோல்டு 101.3 எஃப்.எம்-ல வேலைசெய்றேன். பாலக்காடு பக்கத்துலதான் எங்க ஊரு. அதனால தமிழ் நல்லா புரியும். `36 வயதினிலே’ டைரக்டர் ரோஷன் ஆண்ட்ரூஸ்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். குறும்படங்கள் எடுத்திருக்கேன்.''

``சென்னை வந்திருக்கீங்களா?''

 ``கொச்சின் தாண்டி நான் பார்த்த முதல் நகரம் சென்னைதான். ரெண்டு மூணு நாட்கள்தான் இருந்தேன். ஆனா ரொம்பப் பிடிச்சது. `வாயை மூடி பேசவும்’ படத்துல ஆர்.ஜே பாலாஜி பண்ண ரோலில், மலையாளத்துல நான்தான் நடிச்சேன். அப்புறம் `உன்னைப்போல் ஒருவன்’ படம் ஷூட்டிங்ல கமல் சாரைப் பேட்டி எடுக்க வந்தேன். சென்னையை எனக்குப் பிடிக்கும். இந்த வெள்ளத்துக்குப் பிறகு, ரொம்பப்  பிடிக்குது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு