Published:Updated:

‘அயன்’ படத்தை மிஞ்சிட்டாய்ங்க!

‘அயன்’ படத்தை மிஞ்சிட்டாய்ங்க!

‘அடங்கொக்கமக்கா... இதெல்லாமா கடத்துவாய்ங்க? இப்படில்லாமா கடத்துவாய்ங்கே’ என உலகம் பூரா கஸ்டம்ஸில் மாட்டிய நூதனத் கடத்தல் பொருட்கள் இவை...

‘அயன்’ படத்தை மிஞ்சிட்டாய்ங்க!

•  பங்களாதேஷில் இருந்து பாங்காக்குக் கொண்டு செல்லப்பட்ட லக்கேஜில் இந்த தக்கனூண்டு முதலைக்குஞ்சு மாட்டிக்கிச்சு. வாயில் செல்லோ டேப் வைத்துக் கடிக்காமல் சூதனமாக எடுத்துச் சென்றிருக்கிறார் ஒரு கடத்தல் பார்ட்டி. முதலைப் பாவம் சும்மா விடாது பாஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•  துபாய் ஏர்போர்ட்டில் குண்டு பார்ட்டி மீது சந்தேகம் வந்து கழட்டிப் பார்த்தபோது டவுசருக்குள் இரண்டு புறாக்குஞ்சுகளைக் காவந்து பண்ணி எடுத்து வந்திருக்கிறார் அவர். மயக்க ஊசி வேறு போட்டு குற்றுயிரும் குலை உயிருமாய் கிடந்த அவை இரண்டும் மீட்கப்பட்டன. அடேய்!

•  சீன ஆசாமி ஹாங்காங் ஏர்போர்ட்டில் செக் பண்ணப்பட்டபோது 94 ஐ-போன்களை உடல் முழுக்க ஒட்டி வைத்து மேலே ஆடை அணிந்து வந்திருக்கிறார். சங்கி மங்கி..!

•  கையில் பர்கரை வைத்துக்கொண்டே கம்பீரமாக பேக்கை செக் செய்து கொடுத்தவர் மீது லண்டன் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு மெல்லிசான டவுட்டு. பர்கரை பிதுக்கி செக் செய்தால் பர்கருக்குள் யூரோ டாலர் நோட்டு! தின்னிருந்தா பேதிதான்டியோய்!

‘அயன்’ படத்தை மிஞ்சிட்டாய்ங்க!

•  சிங்கமுத்து அண்ட் கோ ஒரு படத்தில் பஸ்ஸில் எடுத்து வருவதைப்போல் அம்மாவும் பொண்ணும் சேர்ந்து பெர்லினில் இருந்து மான்செஸ்டர் வரை தங்கள் செத்துப்போன தாத்தாவை அலேக்காக தூக்கி வந்திருக்கிறார்கள். நடுவானில் டெட்பாடியோடு சிக்கி இருக்கிறார்கள். என்னம்மா இப்படி பண்றீங்களேமா?

•  200 விஷச் சிலந்தியை ஏன் கடத்தினார் அந்த ஆசாமி என இரண்டு வருடங்களாக மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள். ஒருவேளை ஸ்பைடர் மேனாக ஆசைப்பட்டாரோ?

•  சிலி நாட்டைச் சேர்ந்த ஒரு கடத்தல் ஆசாமியின் மாவுக்கட்டு பேண்டேஜுக்குள் கோக்கெய்ன் எனப்படும் போதை வஸ்து பக்காவாய் மாவோடு மாவாகக் கலக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. நல்லவேளையாக நக்கிப் பார்த்து கண்டுபிடிச்சாங்க!

•  இந்த 21-ம் நூற்றாண்டிலும் புத்தகத்துக்குள் பேப்பர்களை சதுர வடிவில் கட் பண்ணி போதை மாத்திரைகளை பேக் பண்ணி மாட்டிக்கொண்டார் அமெரிக்க ஃபிலடெல்பியா ஆசாமி! நம்ம ஊர்ல லவ் லெட்டர்தான் கொடுப்போம்!

‘அயன்’ படத்தை மிஞ்சிட்டாய்ங்க!

•  ஸ்பெயின் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பார்சிலோனாவில் வைத்து மார்பகம் பெருத்த ஒரு பெண்ணை ஸ்கேனிங் செய்து பார்த்தபோது அந்தப் பெண் கோக்கெய்ன் போதை வஸ்துவை பாலித்தீன் பாக்கெட்டுக்குள் போட்டு அதை சிலிக்கன் மார்போடு சேர்த்து பக்காவாய் ஆபரேஷன் செய்து தைத்து வந்திருக்கிறார்.

•  எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் விமான நிலையத்தில் 420 பவுண்டுகள் உள்ள மாடுகளின் மூளையை ஒருவர் கொண்டு வந்து ஷாக் கொடுத்திருக்கிறார். உலகின் தென்கோடி மூலையில் உள்ள ஒரு தீவில் அது செம காஸ்ட்லி உணவாம். செம ரேட்டாம்!

எப்படில்லாம் கிளம்புறாய்ங்கப்பா!

- சரண்ஜி