Published:Updated:

FOREIGN சரக்கு!

FOREIGN சரக்கு!

மெரிக்க நடிகையும், நடிகர் ஜானி டெப்பின் மனைவியுமான ஆம்பர் ஹெர்டிற்குப் போதாத காலம் போல. அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு நாய்களைக் கொண்டு வரும்போது, நோய் பரவாமல் இருக்க நாய்களை 10 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். ஜானி டெப் படத்தின் ஷூட்டிங்கின்போது தனி விமானம் மூலம் இந்த நாய்களை அனுமதி இல்லாமல் கொண்டுவந்துவிட்டாராம் ஆம்பர். நீதிமன்றம் வரை பிரச்னை போய்த் தீர்ப்புக்காக காத்து இருக்கும் ஆம்பர் இனி ஆஸ்திரேலியாவிற்கு வர முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள். சோதனை மேல் சோதனை!

FOREIGN சரக்கு!
FOREIGN சரக்கு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

46 வயதான அமெரிக்கப் பாடகி கெவ்ன் ஸ்டெஃபானி, தன் புது பாய் ஃப்ரெண்டாக 39 வயது பாடகர் பிளேக் ஷெல்டனைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார். இருவரும் பயங்கர ரொமான்ஸாக போஸ் தர, கடும் புகைச்சலில் இருக்கிறார் பிளேக்கின் முன்னாள் மனைவி  மிரண்டா லாம்பெர்ட்.  ‘அவங்களைப் பார்த்தா பாவமா இருக்கு. ரொம்ப ஓவராப் போறாங்க. பப்ளிசிட்டி ஸ்டன்ட் பண்றாங்க’ என்கிறார் மிரண்டா. மிரண்டுட்டாங்க போல!

FOREIGN சரக்கு!

துக்கெல்லாமா காப்புரிமை வாங்கி வைக்கிறது என்கிற ரீதியில் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் சில வார்த்தைகளுக்கு காப்புரிமை வாங்கி இருக்கிறார். அதிலும் அவரது அடுத்த ஆல்பத்தின் பெயரான 1989 என்கிற எண்ணையும் காப்புரிமை பெற்று இருக்கிறார். இந்த எண்ணை இனி யாரும் அவரது ஆல்பத்தில் இருக்கும் ஸ்டைலில் எழுதக் கூடாதாம். என்ன கொடுமை மேடம்!

FOREIGN சரக்கு!

மெரிக்கப் பாடகி செலினா கோம்ஸ் மீண்டும் ஒருமுறை  டேட்டிங் செய்யும் நபரை மாற்றி இருக்கிறார். அவரது காதலரான ஜஸ்டின் பெய்பரும் வாரம் ஒருமுறை டேட்டுபவர்களை மாற்றும் பழக்கம்கொண்டவர் தான். இப்போது 22 வயதான நியல் ஹோரனை டேட்டுதாம் பொண்ணு. மாத்தி யோசி!