Published:Updated:

பொம்மாயி!

பொம்மாயி!

ன்னதான் நமக்கு பொம்மை பிடிக்கும் என்றாலும், அந்த பொம்மை மாதிரியே மாறுவதற்கெல்லாம் தனியா துணிச்சல் வேணும் பாஸ். உலகம் முழுக்க பார்பி பொம்மைகளைப் போல் மாறி இருக்கும்  நபர்களின் ஜாலி டேட்டாபேஸ்...

ஏஞ்சலிகா கெனோவா

பொம்மாயி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரஷ்யாவில் இருக்கும் 26 வயதான ஏஞ்சலிகா பிறந்ததில் இருந்தே பார்பி போல்தான் உடை அணிகிறாராம். பாலே டான்சரும், மாடலுமான ஏஞ்சலிகா வாரத்துக்கு பல மணி நேரம் பயிற்சி செய்து பார்பி உடலை மெயின்டெயின் செய்கிறாராம். தன் உடைகளில் மிகுந்த கவனம் செலுத்திவரும் ஏஞ்சலிகாவின் தாய், தான் செல்லும் டேட்டிங்களுக்குக்கூட வந்து அமர்ந்துவிடுவாராம். எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட்கூட இல்லையென சோகமாய் சொல்கிறார் ஏஞ்சலிகா. கவலைப்படாதே கண்ணு!

அலினா கொவலெஸ்கயா

பொம்மாயி!

ஏதோவொரு பொம்மையைப் போல் காட்சியளிக்க முடிவு செய்து, பின் பார்பி பொம்மையைப் போல் உடல்வாகு வந்துவிட்டதாம் உக்ரைனின் அலினா கொவலெஸ்கயாவிற்கு. சிறுவயதில் அலினாவிற்கு பார்பி பொம்மைகள் எல்லாம் பிடிக்காதாம், சிறுவர்களோடு ஜாலியாய் விளையாடிக்கொண்டு இருப்பாராம். ரஷ்யாவின் சமூக வலைதளம் ஒன்றில் 20,000 ஃபாலோயர்களை வைத்து இருக்கும் அலினாவிற்கு ஆயிரக்கணக்கான காதல் கடிதங்கள் வருகின்றனவாம். இருந்தும் ஒரு நல்ல காதலருக்காக இன்னமும் காத்திருக்கிறாராம் அலினா. சொல்லுங்க, நான் என்ன பண்ணணும்?

ஆஷ்டன் கிளார்க்

பொம்மாயி!

அமெரிக்காவின் டென்னெஸி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் 22 வயதான ஆஷ்டன் கிளார்க்.உடன் இருப்பவர்கள் நக்கல் செய்வார்கள் என்பதால் பார்பி போல் காட்சியளிக்கத் தயங்கினாராம் ஆஷ்டன். முடி நிறத்தை மாற்றுவது, லென்ஸ், என சுமார் ஆயிரம் டாலர்களை பார்பியாக மாறுவதற்கு செலவிடுகிறாராம் ஆஷ்டன். என்னதான் பயங்கர படிப்பாளி என்றாலும், பார்பி போல் இருப்பதால் தன்னை அறிவில்லாதவள் எனப் பலர் நினைப்பதாகச் சொல்கிறார் ஆஷ்டன்.

லோலிட்டா ரிட்சி

பொம்மாயி!

உக்ரைனைச் சேர்ந்த பதினேழு வயதான லோலிட்டா பார்பி  லென்ஸ், பார்பி தலைமுடி விக் போன்றவற்றை அணிகிறார். 20 இன்ச் இடை கொண்ட லோலிட்டா இந்த உடலுக்காக எந்த விதமான டயட்டும் இருப்பதில்லையாம். இணையத்தில் அவரது புகைப்படங்களை எடுத்து, பதிவேற்றுவது அவரது அம்மாவாம். இவரும் பாய் ஃப்ரெண்டிற்காகத்தான் வெயிட்டிங்காம் பாஸ்.

ஆக, பார்பி மாதிரி பொண்ணுக இருந்தா பாய் ஃப்ரெண்ட் கிடைக்கிறது கஷ்டம் போல. பசங்க ஏன் பொம்மை மாதிரி மாறக் கூடாது?

- கார்த்தி