Published:Updated:

இவர் சீனா கோஸ்ட் கோபால் வர்மா!

இவர் சீனா கோஸ்ட் கோபால் வர்மா!

ஷிஃபு மாஸ்டர் கோக். சீனாவைச் சேர்ந்த இவருக்கு ‘பாட்ஷா’ ரஜினி மாதிரி இன்னொரு பெயரும் இருக்கு. கோல்டன் ட்ராகன். ஏன்னா இவர் ஒரு முழு நேரப் பேயோட்டி. பேய்களுடன் நைஸாகப் பேசி அவை கேட்கிற ஐட்டங்களை வாங்கிக் கொடுத்து துரத்தியடிப்பார். அதையும் மீறி போக மாட்டேன் என அடம் பிடிக்கும் பேய்களுக்காகவே சில புதிய முறைகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார். அந்த வித்தைகளைப் பேய்களின் மீது இறக்கிவிட்டால் போதுமாம். அவை தெறித்து ஓடுமாம். ஆனா அந்தப் பேய்கள் ஓடுறது நம்ம கண்ணுக்குத் தெரியாதாம். ஷிஃபு மாஸ்டர் கண்ணுக்கு மட்டும்தான் தெரியுமாம். ‘யின் யாங் ஃபெங் சூயி தெரபி’னு இதுக்கு மெடிக்கல் டெர்ம்லேயும் ஹைடெக்கா பேரும் வெச்சுருக்கார்.  (பேயை விட இந்தப் பேர் பயமுறுத்துதேய்யா!)

இவர் சீனா கோஸ்ட் கோபால் வர்மா!
இவர் சீனா கோஸ்ட் கோபால் வர்மா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பேய் ஓட்டுவதில் இவர் கொஞ்சம் காஸ்ட்லி. இவர் வந்தா நிறைய செலவு பண்ண வேண்டி இருக்கும். அதையும் மீறி மக்கள் கூட்டம் வந்துட்டுதான் இருக்கு. ஒரு பெண்ணுக்கு சின்னக்குழந்தையின் பேய் பிடிக்க அந்தப் பொண்ணு குழந்தை வாய்ஸ்ல பேச, அந்தப் பேயுடன் மாஸ்டர் மணிக்கணக்கா போராடிப் பார்த்தார். ஒன்ணும் வேலைக்கு ஆகலை. திடீர்னு ஒரு யோசனை. 10 ரூபாய் ஃப்ரூட்டி ஜூஸ்

இவர் சீனா கோஸ்ட் கோபால் வர்மா!

பாட்டிலை எடுத்து நீட்டினார். அதை வாங்கிக் குடிச்சிட்டு பேய் கிளம்பிடுச்சு. இன்னொரு பெண்ணுக்குப் பேய் பிடிக்க, அந்தப் பெண் வயிற்றில் இரண்டு விரலை வைத்துக் குத்திக் குத்தியே பேயை வெளியே எடுத்தார். சில பேய் சவுண்டுக்குப் பயப்படுமாம்.  அதனால தெளசண்ட் வாலா பட்டாசையும் கொளுத்திவிடறார். எல்லாத்துக்கும் மேலே பேய் பிடித்த ஒருவரை வாழைத்தோப்புக்கு அழைத்துப்போய் தரையில் படுக்க வைக்கிறார். அங்கே இருக்கும் வாழை  மரத்தின் வாழைத்தாரில் ஒரு நூலின் முனையைக் கட்டுகிறார். இன்னொரு முனையை அந்தப் பேய் பிடித்தவரின் காலில் கட்டுகிறார். இப்படி மரத்துக்கும் மனுசனுக்கும் வொயர் கனெக்‌ஷன் கொடுத்தா, அந்தப் பேய் அவரிடம் இருந்து வாழை மரத்துக்குத் தாவிவிடுமாம். 

இவர் சீனா கோஸ்ட் கோபால் வர்மா!

இவர் அடிக்கடி பொதுமக்களையும் மீடியாகாரங்களையும் கூட்டிக்கொண்டு பேய் காட்டுறேன்னு பழைய பங்களா மாதிரி இடங்களுக்குப் போவார். அங்கே போய் நின்னுக்கிட்டு சுவற்றைப் பார்த்துத் தனியா பேசிக்கிட்டு இருப்பார். ‘எங்கண்ணே பேயைக் காட்றோம்னு சொன்னீங்களே’ன்னா கேட்டா ‘அங்கே பாருடா கடவுள் தெரியறார்’னு வடிவேலு பாணியில் பேய் தெரியுதுடான்னு சொல்லித் தப்பிச்சுடுவார். ஆனாலும் இவர் இப்போ பயங்கர பிஸி!

-ஜுல்ஃபி