Published:Updated:

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

ந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள் பழைய கருப்பு வெள்ளைப் படங்களின் டைட்டில்கள்தான்! ரெடி ஸ்டார்ட்!

சினிமா விடுகதை!

1. மலையேறித் திருடும் இந்தத் திலகத்தை ‘ரத்த’த் திலகமாக மாற்றினார்கள் பின்னாளில். மூன்று மணி நேரம் தாண்டி ஓடும் இந்தப் படம்தான் தேசிய விருதினைப் பெற்ற முதல் சிறந்த மாநில மொழி சினிமா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2. குட்டிப்பயலின் நடிப்பு இப்போ வரை தமிழ் சினிமாவை ஆளுதே! ஊர்ப் பெயரோடு பாரதியின் காதலி சேர்ந்தால் படம் பேரு விளங்குதே! நிஜத்தில் காதல் வளர்த்த ஜோடியால் காலம் கடந்தும் படம் நிற்குதே! என்ன பெயர் என்று சொல்லுங்க பார்ப்போம்?

3. ‘கைவீசம்மா கைவீசு’ என நடிகர் திலகம் உடற்பயிற்சி செய்த படம். அண்ணன் தங்கை பாசமென்றால் ஞாபகத்துக்கு வரும் படம்! இரண்டு திலகங்கள் நடித்த படத்தில் மன்னனுக்கும் கேரக்டர் ரோல் உண்டு. அந்தப் படம் என்ன படம்?

4. ‘சபாஷ் சரியான போட்டி!’ என்றால் ஞாபகத்துக்கு வரும் சினிமா! காதல் மன்னனையே ஆக்‌ஷன் பண்ண வைத்த சினிமா. பெண்களை வஞ்சித்த அந்த வாலிபன் யாருப்பா?

5. மூன்று தீபாவளி கண்ட சாதனைப்படம். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் நடித்த படம். அப்போதே ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய ஸ்டாரு ஒரு வருஷத்துக்குள் போனாரே ஜெயிலு. பதில் தெரியாம மாட்டிக்கிட்டீங்களா?

6. பட்டிக்காட்டானுக்கு பட்டணத்துப் பொண்ணைக் கட்டிக் கொடுத்தா என்னாகும்? குடுமி வெச்ச நடிகர் திலகத்தை ஆட்டி வைப்பாரே அம்மா. தலைப்பே பட்டிமன்ற டைட்டில்தான்னா சொல்லிடலாமே சும்மா...

7. புரட்சித்தலைவரின் முதல் சோஷியல் சினிமா. அதனாலே போட்டாரே மாடர்ன் ட்ரெஸ்ஸுமா. திருடனாய் நடிச்ச படத்தில் திருடக் கூடாது என மெஸேஜ் சொன்னதுதான் டாப்புமா! படம் பேரு நீ சொல்லுமா?

8. சிம்மக்குரலோனின் சிரிப்பு சினிமா. ‘மாமா... மாப்ளே!’ என நடிகவேளோடு நடிகர் திலகம் பாட்டாலேயே மல்லுக்கட்டிய சினிமா. தெக்கத்தி மன்னனைப் பாராட்டினால் வரும் சினிமா டைட்டில்! அது என்ன?

- சரவ்

சினிமா விடுகதை!

விடைகள்:

1. மலைக் கள்ளன், 2. களத்தூர் கண்ணம்மா, 3. பாசமலர், 4. வஞ்சிக்கோட்டை வாலிபன், 5. ஹரிதாஸ்,6. பட்டிக்காடா பட்டணமா, 7. திருடாதே, 8. பலே பாண்டியா