Published:Updated:

என்னா ஒரு கொலவெறி!

என்னா ஒரு கொலவெறி!

ரு மொபைல் வாங்க வேண்டுமெனில் என்னென்ன விஷயங்கள் சோதனை செய்வீங்க? சார்ஜ் எவ்வளவு நேரம் நிற்குது, கேமரா எப்படி, மொபைல் ஸ்டோரேஜ் எவ்வளவு? இந்த மாதிரி ஏதாவது சோதனை செய்யலாம். வலைதளங்களிலும் இதுக்கு ஏத்த மாதிரிதான் விமர்சனங்கள் இருக்கும். ஒரு மொபைலின் தரம் பற்றி அறிய இப்போது யூடியூபில் பல வீடியோக்கள் வந்து இருக்கின்றன.

என்னா ஒரு கொலவெறி!

ஆனால் அந்த வீடியோக்களை எல்லாம் பார்க்காத மனிதர்கள்கூட அட்ரியனி சென் போடும் வீடியோக்களைப் பார்த்துவிடுவார்கள். அட்ரியனி ஒரு மொபைலின் சாதக பாதகங்களைச் சொல்லும் விமர்சகர்தான். ஆனால், அதற்குப்பின் இவர் செய்வதெல்லம் கும்பி பாகம் வகையறா. ஒரு மொபைலை எப்படியெல்லாம் சித்ரவதை செய்யலாம் என்பதில் டாக்டர் பட்டம் வாங்கி இருப்பார் போல. மொபைலை சுத்தியலை வெச்சு உடைக்கிறது, கோகோ கோலா, பீர், தண்ணீர் எனப் பலவற்றில் முக்குவது, மொபைலை உறைய வைப்பது, கொதிக்க வைப்பது என ‘அந்நியன்’ பட விக்ரம் ரேஞ்சுக்கு தண்டனைகள் கொடுப்பார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என்னா ஒரு கொலவெறி!

இப்படி ஒவ்வொரு டெஸ்டுக்கும் அண்ணன் பயன்படுத்துவது புது மொபைல் மட்டுமே. நோக்கியாவின் செங்கல் செட் 1100-ல் இருந்து லேட்டஸ்ட் ஐபோன் 6 எஸ் வரை மனிதர் கை வைக்காத மொபைல்களே இல்லை. குறைந்தது ஐந்து புது மொபைல்களாவது வாங்குவார் போல.

என்னா ஒரு கொலவெறி!

வீடீயோவைப் பார்ப் பவர்கள் பின்னூட்டங்களில் கழுவி ஊற்றுகிறார்கள். டிஸ்லைக்குகளை ஆயிரக் கணக்கில் அள்ளுகிறார் அட்ரியன். எல்லாம் இருந்தும் ஒவ்வொரு வீடீயோவும் சராசரியாக 10 லட்சம் ஹிட்ஸ்களைப் பெறுகிறது. அட்ரியனி சென்னின் யூடியூப் தளத்தை சுமார் மூன்று கோடி பேர் பார்த்து இருக்கிறார்கள்!

- கார்த்தி