Published:Updated:

ட்ரெண்ட் பெட்டி!

ட்ரெண்ட் பெட்டி!

சிட்டி வெர்ஷன் 2.0

ட்ரெண்ட் பெட்டி!

மிக மிக பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டு வசூல் செய்த சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வாரம் தொடங்கியது. ‘எந்திரன்’ வில்லன் கேரக்டருக்கு அர்னால்ட், விக்ரம், கமல் என பல பெயர்கள் அடிபட, எந்தவித விளம்பரமும் இல்லாமல ட்விட்டரில் ’எந்திரன் 2’ படம் தொடங்கப்பட்டு விட்டதாக அறிவித்து இருக்கிறார் ஷங்கர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கிறார் என்பது கூடுதல் செய்தி. #upgradedchitti2, #vasigaran, #chitti, #boomboomroboda என தேசிய அளவில் ட்ரெண்ட் ஆக்கினார்கள் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் #ரோபோடா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டெல்லி சண்டை!

ட்ரெண்ட் பெட்டி!

ஏற்கனவே டெல்லி காவல்துறை கூட அங்கு இருக்கும் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியை மதிப்பதில்லை என அர்விந்த் கெஜ்ரிவால் கடும் கோபத்தில் இருந்தார். இப்போது, டெல்லியில் நடந்த சி.பி.ஐ. சோதனை அர்விந்த் கெஜ்ரிவாலை அதிரவைத்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். கெஜ்ரிவால் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘மோடி ஒரு சைக்கோ, கோழை’ என ட்விட்ட அதிர்ந்தது இணையம். #kejriwalvsmodi ,#cowardkejriwal,#psychopath,#cbiraid,#kejriwalinsultspm என கெஜ்ரிக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டுகளைப் பதிவிட்டனர் நெட்டிசன்ஸ். #மைண்ட்வாய்ஸுனு நினைச்சு சத்தமாப் பேசிட்டீங்களே கெஜ்ரி!

ஒரு மந்தையில் இருந்துபிரிந்த ஆடுகள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் சூதாட்டப் புகார் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. அந்த அணியின் வீரர்களை புதிதாக களம் இறங்கப்போகும் ராஜ்கோட், புனே அணிகள் வாங்கலாம் என அறிவிப்பு வெளியாகவே சென்னை, ராஜஸ்தான் அணி வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐ.பி.எல்லில் முதல் முறையாக வெவ்வேறு அணிகளுக்காக விளையாட இருக்கிறார்கள் சென்னை அணி தூண்களான  தோனியும், ரெய்னாவும். #csk  என்ற டேக்கில் ஆறுதல் ட்விட்டுகளைப் பதிவிட்டனர் சென்னை ரசிகர்கள்  #விசில்போச்சு

பீப் பீப்!

ட்ரெண்ட் பெட்டி!

சென்னை வெள்ள நிவாரண விஷயங்களை மூழ்கடித்து ட்ரெண்ட் ஆனது சிம்புவின் பீப் பாடல். தமிழகம் எங்கும் பெரும் பிரச்சனையைக் கிளப்பிய இந்த விஷயத்தை, ட்விட்டர் மக்கள் ஜாலிவாலா டாபிக் ஆக்கிவிட்டனர். படத்தின் பெயரில் இருக்கும் ஒரு வார்த்தைக்குப் பதில் பீப் என மாற்றி #replacemovienameswithbeep என்ற டேக்கில் ட்விட்டத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வடக்கத்திய மக்களும் இந்த டேக்கில் இந்தி படப் பெயர்களை வெளியிட தேசிய ட்ரெண்ட் அடித்தது இந்த டேக். #இதெல்லாம் ஒரு விளையாட்டு!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாய் வாங்க!

ட்ரெண்ட் பெட்டி!

வெள்ள நிவாரணப் பணிகளில் ஆரம்பம் முதலே ஈடுபட்ட நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். அவர் தயாரித்து நடித்த படமான ‘ஜில் ஜங் ஜக்’ இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளிவருவதாக இருந்தது. ‘முதலில் எல்லோரும் இயல்பு நிலைக்கு வருவோம். அடுத்த ஆண்டு படத்தை ரிலீஸ் செய்கிறேன்’ என தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் சித்து. #JilJungJuk என்ற டேக்கில் அவருக்கு ஆதரவாய் ட்விட்டுகள் இட்டனர் நெட்டிசன்ஸ். #வீ ஆர் வெயிட்டிங்

தேனீர் தினம்

ட்ரெண்ட் பெட்டி!

என்னதான் நாம தினமும் டீ குடித்தாலும், டீக்கெல்லாம் ஒரு சர்வதேச தினம் இருக்குனு சொன்னா ஷாக் ஆக மாட்டோமா? டிசம்பர் 15-ஆம் தேதி சர்வதேசத் தேனீர் தினமாம்.உலகம் முழுக்க இருக்கும் மக்கள் தேயிலை பற்றி ட்விட்ட, உலக ட்ரெண்டில் இடம் பிடித்தது #InternationalTeaDay என்ற டேக் . #டாஸ்மாக் தினம் என்னைக்கு பாஸ்?

கூகுளும் டிரெண்டில்!

ட்ரெண்ட் பெட்டி!

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை புதுடெல்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

‘இந்த நாடு கூகுளுக்கும், எனக்கும் எவ்வளவோ செய்து இருக்கிறது, அதை நான் திருப்பிச் செய்ய விரும்புகிறேன்’ என்று சொல்லி, பல திட்டங்களை இந்தியாவிற்கு அறிவித்தார் சுந்தர். இன்னும் மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் இருக்கும் சுமார் 3 லட்சம் கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு ஆன்லைன் வசதி செய்து தர இருப்பதாக அறிவித்தார் சுந்தர். நாடு முழுவதும் இதுபற்றிப் பேச #GoogleForIndia என்ற டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. #கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்தில!

- ட்ரெண்ட் பாண்டி