Published:Updated:

“என்கிட்டே மந்திரக்கோல் இருக்கு!”

“என்கிட்டே மந்திரக்கோல் இருக்கு!”

‘மந்திரக்கோல் சமூக சேவை விழிப்பு உணர்வு அமைப்பு’ என்ற அட்ராசக்கை வாசகத்தை ஆட்டோ ஒன்றில் பார்த்தேன். அரசின் நலத்திட்டங்களுக்கு உதவும் அமைப்பாம். ‘யாருய்யா இவரு? எனக்கே பார்க்கணும் போல இருக்கே’ எனப் பொறிதட்ட, அதில் இருந்த எண்ணுக்கு போனைப் போட்டேன். ‘‘நீங்க எல்லாம் தேவ தூதர்கள் மாதிரி சார்... நீங்களே எனக்கு போன் பண்ணி விசாரிக்கிறீங்க பார்த்தீங்களா... இது போதும் எனக்கு! இன்னும் சந்தோஷமா பல விஷயங்களைப் பண்ணுவேன்!’’ என உருகுகிறார் எம்.ரஹீம்கான். ‘மந்திரக்கோல்’ அமைப்பின் ஆல்-இன்-ஆல் அழகுராஜா இவர்தான்!

 “என்கிட்டே மந்திரக்கோல் இருக்கு!”

‘‘சென்னைதான் பாஸ் எனக்கு சொந்த ஊரு. ஸ்கூல் படிக்கும்போது, நாட்டுக்கு நல்லது பண்ணணும்னு எங்க வாத்தியார் ஸ்ட்ரிக்ட்டா சொல்வார். அந்த வாத்தியார் சொன்ன ‘நாட்டுக்கு நல்லது பண்ணணும்’ வார்த்தை வளர்ந்த பிறகும் ஒட்டிக்கிட்டே வந்துடுச்சு. சொந்தமா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன். கல்யாணம் ஆகி, ரெண்டு குழந்தைகள். சம்பாதிக்கிறதுல பாதியை நல்லதுக்கு செலவு பண்ணிடுவேனு மனைவிகிட்ட சொல்லிட்டேன். அவங்க ஸ்கூல் டீச்சர். நான், ஆட்டோ ஓட்டிக்கிட்டே ஒவியமும் வரைஞ்சு, சமூக சேவைகள் பண்ணிக்கிட்டு இருக்கேன்!’’ என்று அறிமுகம் கொடுத்துத் தொடர்ந்தார் ரஹீம்கான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘யாருக்காவது உதவி பண்ணலைனா எனக்குத் தூக்கம் வராது பாஸ். அதனால, சில அமைப்புகள்ல சேர்ந்து இயங்கினேன். ஆனா, அவங்கெல்லாம் சுயநலம் கொண்டவங்களா இருந்தாங்க. ‘அமைப்பு’னா கூட்டு சேர்ந்து இருக்கணுமா என்ன? ‘நம்ம இஷ்டம், நம்ம கஷ்டம்’னு கெத்தோட உதவி பண்ணலாமேனுதான் தனி ஆளாவே ‘மந்திரக்கோல்’ அமைப்பை ஆரம்பிச்சிருக்கேன். ஆட்டோ ஓட்டுறது நமக்கு சைடு வேலைதான் பாஸ். ஓவியம் வரையறதுதான் உயிர்! ஆனா, அதையெல்லாம் யார்கிட்டவும் காட்ட மாட்டேன். ஏன்னா, ஒவ்வொரு ஓவியத்துக்கும் ஏரளமான குறியீடுகள் வெச்சு வரைஞ்சிருக்கேன். ஓவியத்துல ஆர்வம் இருக்கிறவங்களால மட்டும்தான் இதைப் புரிஞ்சுக்க முடியும். இப்பவே இதையெல்லாம் வெளியிட்டோம்னா தப்பு. ஐந்தாயிரமோ பத்தாயிரமோதான் விலை போகும். ஸோ... எதிர்காலத்துல பெரிய பிளான் வெச்சிருக்கிறதனால, நூற்றுக்கணக்கான ஓவியங்களைப் பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன். அதுக்கெல்லாம் எதிர்காலத்துல லட்சக்கணக்கில விலை கிடைக்கும். அப்போ ஜாம் ஜாம்னு உதவலாம். அதுவரை, மக்களுக்கு உதவ இந்த ‘மந்திரக்கோல்’ அமைப்புதான்!’’ என்று குழப்பியவரிடம், அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் குறித்துக் கேட்டேன்.

‘‘ஓவியம் வரையற என்னுடைய பிரஷ் இருக்குல... அதுதான் என்னுடைய கற்பனைகளை வெளியே கொண்டுவந்து அழகான ஓவியமாக்குது. அதுதான் என்னுடைய மந்திரக்கோல். அதனால, அரசாங்கத்துக்கு உதவி செய்ற என்னுடைய அமைப்புக்கும் ‘மந்திரக்கோல்’னு பெயர் வெச்சுட்டேன். இந்த அமைப்பு என்ன பண்ணும்னா, மக்களுக்கு நல்லது பண்ற மாதிரியான அரசாங்கத் திட்டங்களை மக்கள்கிட்ட எடுத்துச்சொல்லும். தமிழக அரசின் ‘தாய்ப்பால் கொடுக்கும் அறை’ திட்டம், மோடியின் ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ இதெல்லாம் மக்களுக்கு, குறிப்பா பெண்களுக்கு ரொம்ப உதவியா இருக்கிற திட்டங்கள். ஆனா, இது மாதிரி திட்டங்கள் மக்களுக்குத் தெரியறதே இல்லை. அதை நோட்டீஸ் அடிச்சுத் தெரியப்படுத்துவோம். ஆட்டோவுக்குப் பின்னாடி கடமைக்கு வாசகத்தை எழுதாம, முக்கியமான திட்டங்களையும் அதோட பயன்களையும் எழுதி வைப்பேன். அதே சமயம், மக்களுக்கு எதிரான திட்டங்களையெல்லாம் நோட்டீஸ் அடிச்சு விநியோகிக்க மாட்டேன். ஏன்னா, அரசாங்கத்தை தனி மனுஷனா எதிர்த்தா தப்பாயிடும். அதனால, ஓவியங்களாக இருக்கிற என்னுடைய கற்பனைகளை விற்பனையாக்கி அது மூலமா பதிலடி கொடுப்பேன்!’’ என்கிறார்ரஹீம்கான்.

- கே.ஜி.மணிகண்டன், படம் : தி.குமரகுருபரன்