அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

க்வில்லிங் கிளாஸ்..!

குயிக் லாபம் தரும் தொடர்!

க்வில்லிங் பீட்ஸ் பெண்டன்ட்... குவியும்... ஆர்டர், வருமானம்!

‘‘கிராப்ட்னா ரொம்பப் பிடிக்கும். கல்லூரியில் படிக்கும்போது நிறைய கிராஃப்ட் வகுப்புகளுக்குப்

க்வில்லிங் கிளாஸ்..!

போனாலும், படிப்பை முடிச்சதும் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துட்டேன். திருமணம், குழந்தைனு ஆன பிறகு, வீடு, ஆபீஸ்னு ஸ்ட்ரெஸ் ஆயிருச்சு. அப்போதான், வீட்டில் இருந்தே பார்க்கும்படியா கிராஃப்ட் தொழிலைக் கையில் எடுத்தேன். என் கணவர் ஆன்லைன் பிசினஸ் ஐடியாவும் கொடுக்க, இப்போ ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருக்கு. இதில் மாசம் 15,000 ரூபாய்க்கு மேல சம்பாதிக்கிறேன்.... ஸ்ட்ரெஸ் இல்லாம!’’

க்வில்லிங் கிளாஸ்..!

- அடிக்கோடிட்டுச் சொன்ன சென்னையைச் சேர்ந்த சௌமியா, க்வில் லிங் பீட்ஸ் பெண்டன்ட் செய்யக் கற்றுத் தருகிறார்...

தேவையானவை:

க்வில்லிங் கிளாஸ்..!

பச்சை நிற 5 mm க்வில்லிங் பேப்பர் - 7, பச்சை நிற ஏ4 பேப்பர் - 2, க்வில்லிங் ஊசி, கியர் வயர் -  தேவையான அளவு, 3 mm கோல்டன் பால் செயின்  - ஒரு மீட்டர், கோல்டன் கலர் ஜிமிக்கி கேப் - 32, கோல்டன் பால்கள் - தேவைக்கேற்ப, பேக் செயின் - 2, வளையம் - 2, கியர்லாக் - 4, ஸ்டோன் செயின்  - 1 மீட்டர், கலர் ஸ்டோன் - 1, ஃபெவிக்கால், வார்னிஷ், பிரஷ், கட்டர்.

செய்முறை:

படம் 1: நடுவில் இருக்கும் பெரிய பெண்டன்ட் செய்ய 7 க்வில்லிங் பேப்பர்களை எடுக்கவும்.

படம் 2: அவற்றை ஒன்றின் முனையில் மற்றொன்றை ஒட்டி நீளத்தை அதிகரித்து, ஒரு பெரிய டைட் காயில் செய்யவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 3: அடிப்படை உருவத்தில் கற்றுக்கொண்டதுபோல, பச்சை நிற ஏ4 பேப்பரை கட் செய்து, க்வில்லிங் ஊசியில் காயில் போன்று சுற்றி, ஃபெவிக்கால் தடவி ஒட்டி, 18 பீட்ஸ் செய்து, அவற்றை சிறிது நேரம் காயவிடவும்.

படம் 4: ஒரு க்வில்லிங் பேப்பரைச் சுருட்டி ஒரு ஜாயின்ட்டர் செய்து ஃபெவிக்கால் தடவி காயவிடவும்.

படம் 5: பெரிய பெண்டன்டுக்கான காயிலும், ஜாயின்ட்டரும் காய்ந்தபிறகு, காயிலின் ஒருபுறத்தில் ஃபெவிக்கால் தடவி படத்தில் உள்ளதுபோல் ஜாயின்ட்டரை காயிலுடன் ஒட்டிக் காயவிடவும்.

படம் 6: காய்ந்த பெண்டன்டுக்கான காயிலில் கோல்டன் பால் செயின், ஸ்டோன் செயின், கலர் ஸ்டோனை விருப்பம்போல ஒட்டி அலங்கரிக்கவும்.

படம் 7: இப்போது அழகான பெண்டன்ட் தயார்.

படம் 8: கியர் வயரை தேவைப்படும் நீளத்துக்கு எடுத்து, அதில் செய்து வைத்துள்ள பெரிய பெண்டன்டை முதலில் கோக்கவும்.

படம் 9: பெண்டன்டின் இடதுபுறத்தில், கியர் வயரில், இரண்டு கோல்டன் பால்கள், ஒரு ஜிமிக்கி கேப், செய்து வைத்துள்ள சிறிய பீட், மீண்டும் கோல்டன் பால்கள் என படத்தில் காட்டியுள்ளபடி ஒன்றன் பின் ஒன்றாக 9 பீட்ஸ்களையும் கோத்து முடிக்கவும். பின்னர் வேண்டும் நீளத்துக்கு கோல்டன் பால்களை வரிசையாகக் கோக்கவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 10: இதேபோன்று பெண்டன்டின் மற்றொரு புறத்திலும் கோத்து முடிக்கவும்.

படம் 11: கோத்து வைத்தவை உருவிவிடாமல் இருக்க இருபுறமும் கியர்லாக்கை கோத்து கட்டரால் அழுத்தி கியர் வயரை வளைத்துவிடவும்.

படம் 12: கியர் வயரை வளைத்துவிட்ட இடத்தில் இருபுறமும் வளையத்தைச் சேர்க்கவும். வளையத்தில் பேக் செயினைக் கோத்து டைட் செய்யவும்.

படம் 13: அழகான க்வில்லிங் பீட்ஸ் பெண்டன்ட் நெக் பீஸ் ரெடி! நீண்டநாள் பயன்பாட்டுக்கு இதில் வார்னிஷ் அடித்தும் பயன்படுத்தலாம்.

``பெண்டன்ட், பீட்ஸ் செய்ய அடிப்படை இதுதான். கற்பனையைத் தட்டிவிட்டு விதவிதமான டிசைன்கள் உருவாக்கி ஆன்லைனில் அப்லோடு செய்தால், ‘ஹவ் மச்?!’ என்று குவியும் விசாரணைகளும் ஆர்டர்களும். நெக் பீஸ் என்றால், ஒரு பீஸுக்கு குறைந்தது 300 ரூபாய் லாபம் எடுக்கலாம். க்வில்லிங்கைப் பொறுத்தவரை

க்வில்லிங் கிளாஸ்..!

எல்லோராலும் எளிதாகச் செய்ய முடியும் என்பதால், கற்பனைத்திறனுக்கும், நேர்த்தியான ஃபினிஷிங்க்கும் தான் மதிப்பு என்பது நினைவில் இருக்கட்டும்!’’

- வலியுறுத்திச் சொல்லி முடித்தார், சௌமியா.

- க்வில்லிங் கிளாஸ் தொடரும்....

சு.சூர்யா கோமதி,படங்கள்:மீ.நிவேதன்

அடிப்படை உருவங்கள் செய்துகொள்வோம்...

பெண்டன்ட் பேஸ்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: க்வில்லிங் ஊசி துளையில் க்வில் லிங் பேப்பரை நுழைத்து சற்றுத் தளர்வாக காயில் போன்று சுற்றவும்.

படம் 2: சுற்றிய பேப் பர் உருவிவிடாதவாறு காயிலின் மையத்தில் பிடித்துக்கொண்டு, ஊசியில் இருந்து மெது வாகக் கழற்றவும்.

படம் 3: ஊசியில் இருந்து எடுத்த காயிலின் இறுதி முனையில் ஃபெவிக்கால் தடவி காயிலுடன் ஒட்டிக் காய விடவும்.

பீட்ஸ்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: பச்சை நிற ஏ4 பேப் பரை படத்தில் காட்டியுள்ளபடி முக்கோணமாக கட் செய்யவும்.

படம் 2: அதன் அகல மான பகுதியில் ஃபெவிக்கால் தடவி படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டவும்.

படம் 3: அதனை க்வில் லிங் ஊசியில் நுழைத்து காயில் போன்று சுற்றி ஊசி யில் இருந்து எடுக்கவும்.

படம் 4: பீட்ஸ் ரெடி.

ஜாயின்ட்டர்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: க்வில்லிங் ஊசியில் இருக்கும் துளையில் க்வில்லிங் பேப்பரை நுழைத்து படத்தில் உள்ளது போல சற்று இடைவெளி விட்டு பக்கவாட்டில் சுற்றவும்.

படம் 2: சுற்றிய ஜாயின்ட்டரை ஊசியில் இருந்து கழற்றி ஃபெவிக்கால் தடவிக் காயவிடவும்.