Published:Updated:

இயற்கை டாக்டர்

காய்கறி கைடு!

இயற்கை டாக்டர்

காய்கறி கைடு!

Published:Updated:
இயற்கை டாக்டர்

நாக்குக்கு அடிமையாகிப்போன தலைமுறை நாம். பெரியவர்களேகூட குழந்தைகளைப் போல ‘எனக்கு

இயற்கை டாக்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பீட்ரூட் பிடிக்காது’, ‘பாகற்காய் பிடிக்காது’ என்கிறார்கள். பிடிக்கும், பிடிக்காது என்பதைவிட, காய்கறி உடலுக்கு மிகவும் நல்லது, அவசியமானது என்ற எளிய புரிதல் இருந்தால் போதும், ஆரோக்கியத்துக்கு நம்மைப் பிடித்துவிடும். `தினசரி உணவில் அதிக அளவில் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்’ என்கின்றனர் மருத்துவர்கள். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடல்பருமன், சர்க்கரைநோய், இதய நோய்கள் உள்ளிட்டவற்றைத் தடுக்க முடியும்.

இன்றைக்குக் கிடைக்கும் காய்கறிகள், பூச்சிமருந்து, ரசாயன உரங்கள் கொண்டவையாக இருக்கின்றன. காய்கறிகளை உப்பு, மஞ்சள், புளி கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவிட்ட பின் அலசி, பாதுகாப்பான முறையில் சமைத்துச் சாப்பிட்டால், அதில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் குறையும். இன்சுலின் ஊசி, கசப்பு மிகுந்த மாத்திரை, மருந்துகளைவிட பாகற்காயும் வாழைப்பூவும் எவ்வளவோ சிறந்தவை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பலன் அறிந்து சாப்பிட்டாலே, நோய்கள் நம்மை நெருங்காது. நீர்க் காய்கள், நார்க் காய்கள், மாவாக இருக்கும் கிழங்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. அதுபோலவே அதன் பலன்களும் ஒவ்வொரு விதம். எந்தக் காயில், என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவற்றின் பலன்கள் என்னென்ன என விளக்குகிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.

இயற்கை டாக்டர்

தக்காளி

• வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன.

• ஆல்பா-டொமாட்டின் (Alpha-tomatine) என்ற சத்து, ப்ராஸ்டேட், வயிறு, நுரையீரல், மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்கும்.

• லைகோபீன், இதய நோய்களைத் தடுக்கும்.

• ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

• பார்வைத்திறனை மேம்படுத்தும்.

• உடல் எடை குறைய உதவும்.

• ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கும்.

இயற்கை டாக்டர்

• பித்தப்பை கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

• ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

• உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

• இயற்கையான ஆன்டிசெப்ட்டிக் இது.

• சருமம் பொலிவு பெறும்.

• வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

பாகற்காய்

• ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

• மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

• கல்லீரலைப் பலப்படுத்தும்.

• இளநரை வராமல் தடுக்கும்.

• புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

• சரும நோய்களைக் குணமாக்கும்.

• மாரடைப்பைத் தடுக்கும்.

இயற்கை டாக்டர்

• உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

• சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

• கொழுப்பைப் படியவிடாது.

• தொற்றுநோய்களைப் போக்கும்.

• பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

• உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் பிரச்னை சரியாகும்.

• மூலநோய் பிரச்னை இருப்போர், வாரம் இருமுறை சாப்பிடலாம்.

• ரத்தத்தைச் சுத்திகரித்து, நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்புழுக்களை நீக்கும்.

காளான்

• சிறுநீரகத்துக்கு நல்லது.

• எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

• நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

• அசைவத்தில் இருக்கும் சத்துக்கள் இதில் உள்ளன.

• உடல் எடையைக் குறைக்க உதவும்.

• ரத்தசோகையைப் போக்கும்.

• இதய நோய்களைத் தடுக்கும்.

இயற்கை டாக்டர்

• நரம்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்தும்.

• மூட்டு தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கும்.

• மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.

• ஈஸ்ட்ரோஜன் சுரப்பைச் சீராக்கும்.

• டைப் 2 சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டுவர, இன்சுலின் சுரப்பு சீராகும்.

• பீட்டாகுளுகன், நார்ச்சத்து இருப்பதால், சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும்.

• ஆண்களுக்கு ஏற்படும் ஆண்ட்ரோபாஸைத் தாமதப்படுத்தும்.

கேரட்

• வைட்டமின் ஏ, சி, கே, பி8, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன.

• பார்வைத்திறனை அதிகரிக்கும்.

• கொழுப்பைக் கரைக்கும்.

• சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.

• எலும்பு, பற்களுக்கு நல்லது.

• கல்லீரலைப் பலப்படுத்தும்.

• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

• சருமப் பொலிவு மேம்படும்.

இயற்கை டாக்டர்

• வயிற்றுப்புண்கள் குணமாகும்.

• செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.

• நுரையீரல், ப்ராஸ்டேட், பெருங்குடல், வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

• இதில் உள்ள தாதுஉப்புக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், உமிழ்நீரை சீராகச் சுரக்கச்செய்து, பற்சொத்தை வராமல் தடுக்கும். ரத்த சிவப்பணுக்களை மேம்படுத்தும்.

முள்ளங்கி

• சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும்.

• உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

• உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.

• மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

• புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

• கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

• நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும்.

இயற்கை டாக்டர்

• மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது.

• ரத்தத்தில் உள்ள பிலுருபினை  சீர்செய்வதால், மஞ்சள்காமாலையைக் குணமாக்க உதவும்.

• மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும்.

• ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள், தொண்டை எரிச்சல், தொற்று, அலர்ஜி சரியாகும்.

• சிகரெட்டால் பாதித்த நுரையீரலைச் சரிசெய்ய உதவும்.

• உடல் எடையைக் குறைக்க உதவும்.

• வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெங்காயம்

• பற்சிதைவைப் போக்கும்.

• சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

• கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

• வறண்ட தொண்டை, இருமலைச் சரிசெய்யும்.

• எலும்பு மெலிதலைத் தடுக்கும்.

• ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

இயற்கை டாக்டர்

• ரத்தசோகையைக் குணமாக்கும்.

• தசைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும்.

• மாதவிலக்கை சீராக்கும்.

• வெங்காயத்தில் உள்ள குரோமியம், ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். கந்தகம், தோல் நோய்களைப் தடுக்கும்.

• `குவர்சிடின்’ என்ற ஃப்ளேவனாய்டு இருப்பதால், புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

• காஸ்ட்ரிக் அல்சர் வராமல் காக்கும்.

• ஆன்டிசெப்டிக், ஆன்டிபயாடிக், ஆன்டி மைக்ரோபயல் தன்மை கொண்டிருப்பதால்,  தொற்றுக்கள் வராமல் காக்கும்.

பரங்கிக்காய்

• கிட்டப்பார்வை, தூரப்பார்வையைச் சரிசெய்யும்.

• புற்றுநோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

• உடல் எடை அதிகரிக்க உதவும்.

• தசைகள் வலுவாகும்.

• நல்ல உணர்வுகளை உண்டாக்கும்.

• பெப்டிக் அல்சரை சரிசெய்யும். ப்ராஸ்டேட் வீக்கத்தைச் சரிசெய்யும்.

• உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

இயற்கை டாக்டர்

• பொலிவான சருமம் கிடைக்கும்.

• இதய நோய்களைத் தடுக்கும்.

• நல்ல உறக்கத்தைத் தரும்.

• கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர, கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

• வைட்டமின் சி, இ, பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன.

• உடல் எடை அதிகரிக்க, இதைச் சாப்பிடலாம்.

• இனப்பெருக்க உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

வெண்டைக்காய்

• ஃபோலிக் ஆசிட் நிறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

• உடல் எடையைக் குறைக்கும்.

• வைட்டமின் பி9 இருப்பதால், மூளைக்கு நல்லது.

• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

• பார்வைத்திறனை அதிகரிக்கும்.

• ரத்தசோகையைத் தடுக்கும்.

இயற்கை டாக்டர்

• வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

• நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கலை சரிசெய்யும்.

• ஆஸ்துமாவின் வீரியத்தைக் குறைக்கும்.

• வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் உள்ளதால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

• சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட, சர்க்கரை கட்டுக்குள் வரும்.

பீட்ரூட்

• நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன.

• மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.

• ரத்தசோகையைக் குணமாக்கும்.

• சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிடலாம்.

• பீட்டாசயனின் இதில் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

• ரத்தத்தை சுத்திகரிக்கும்.

• மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

இயற்கை டாக்டர்

• செரிமானப்பாதையை ஆரோக்கியப்படுத்தும்.

• இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

• எலும்பு அடர்த்திக் குறைதல் நோயைத் தடுக்கும்.

• ஸ்டாமினாவை அதிகரிக்க உதவும்.

• கணையம், மார்பகம், ப்ராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும்.

• இதில் உள்ள நைட்ரிக் அமிலம்  பிராணவாயுவை சீராக்கி, ரத்தஓட்டத்தை மேம்படுத்தும்.

• மறதி நோயைத் தவிர்க்கும்.

சேப்பக் கிழங்கு

• வைட்டமின் ஏ, இ இருப்பதால், சருமத்துக்கு நல்லது.

• சிறுகுடல் மற்றும் பெருங்குடலுக்கு நல்லது.

• பால் ஊட்டும் தாய்மார்களுக்கு நல்லது.

• உடல் எடையை அதிகரிக்கும்.

• நச்சுக்களை வெளியேற்றும்.

• மூப்பினால் பார்வைக்குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும்.

இயற்கை டாக்டர்

• தசைகள், எலும்புகள் வலுவாகும்.

• உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

• வைட்டமின் ஏ, சி, இ, ஃபோலேட், மக்னீசியம், காப்பர் நிறைந்துள்ளன.

• சருமப் புண்கள், காயங்கள், சருமத் தொல்லைகள் தீர, இதைச் சாப்பிடலாம்.

• வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும். மூட்டுவீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

• அமினோ ஆசிட், ஒமேகா 3 சத்துக்கள் இருப்பதால், இதய நோய்கள் வராமல் காக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

• வைட்டமின் பி6, சி, டி, இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளன.

• கார்டினாய்டு, பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ இருப்பதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

• நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

• ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

• தைராய்டு சுரப்பியின் இயக்கத்தைச் சீராக்கும்.

• ரத்த செல்கள் உருவாக உதவும்.

• எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

இயற்கை டாக்டர்

• மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

• பளபளக்கும் சருமத்தைப் பெறலாம்.

• உடல் எடை கூடும்.

• சர்க்கரை நோயாளிகள் அளவாகச் சாப்பிடலாம்.

• மாரடைப்பு வராமல் தடுக்கும்.

• சருமத்துக்குத் தேவையான இழுதன்மை (Elasticity) அதிகரிக்கும்; சருமம் அழகாகும்.

• செரிமானப்பாதைக்கு நன்மையைச்செய்யும்.

• உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

உருளைக் கிழங்கு

• வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் இருப்பதால், சருமத்துக்கு நல்லது.

• கால்சியம், மக்னீசியம் நிறைந்துள்ளன.

• செரடோனின், டோபோமைன் உள்ளதால், மனம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

• தீக்காயங்களைச் சரிசெய்யும்.

• மூட்டு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும்.

• மாவுச்சத்து உள்ளதால், உடல் எடை கூடும்.

• செரிமான சக்திக்கு உதவும்.

இயற்கை டாக்டர்

• மூளை வளர்ச்சிக்கு உதவும்.

• புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும்.

• எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

• மூளை செல்களைத் தூண்டி, புத்துயிர் பெறச் செய்யும்.

• அதிகமாக வியர்ப்பவர்கள் அவசியம் சாப்பிட நல்லது.

• உதடுவெடிப்பு, ரத்தம் கசியும் ஈறுகள், வைரல் தொற்று, ஸ்கர்வி நோய்கள் சரியாகும்.

• குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டிய உணவு.

வாழைப்பூ

• இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகையைக் குணமாக்கும்.

• அல்சர் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

• மலச்சிக்கலைத் தீர்க்கும்.

• மக்னீசியம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

• சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

• கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

இயற்கை டாக்டர்

• கர்ப்பப்பை நோய்களைச் சரிசெய்யும்.

• மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியைத் தடுக்கும்.

• பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டுவர, பால் அதிகமாகச் சுரக்க உதவும்.

• கர்ப்பிணிகள் வாரம் இருமுறை சாப்பிட்டுவர, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

• சுவாசப்பாதை சீராகும்.

• சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

காலிஃபிளவர்

• கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும்.

• ஒரு நாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி நிறைவாக உள்ளது.

• உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

• செரிமானப்பாதையைச் சீர்செய்யும்.

• ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

• வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.

இயற்கை டாக்டர்

• தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

• நினைவுத்திறனை அதிகரிக்கிறது.

• எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்துகிறது.

• சல்ஃபோராபேன் (Sulforaphane) சத்து இருப்பதால், புற்றுநோய் செல்களை அழிக்கும்.

• மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கும்.

• பைடோநியூட்ரியன்ட்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், நாள்பட்ட நோய்களின் தீவிரம் குறையும்.

முருங்கைக்காய்

• வைட்டமின் சி இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

• வைட்டமின் ஏ இருப்பதால், பார்வைத்திறன் அதிகமாகும்.

• வறண்ட தொண்டையைச் சரிசெய்யும்.

• சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

• ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

• கால்சியம் உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கு உதவும். ஆண்மையைப் பெருக்கும்.

இயற்கை டாக்டர்

• நுரையீரல் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

• சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

• கர்ப்பிணிகளுக்கு நல்லது. குழந்தையின்மை, இனப்பெருக்கக் குறைபாடுகள் குணமாக வாய்ப்புகள் அதிகம்.

• தொற்றுக்கள் உருவாவதைத் தடுக்கும்.

• இதனை சூப்வைத்துக் குடிக்க, சுவாசம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் நீங்கும்.

கத்திரிக்காய்

• டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும்.

• பைட்டோநியூட்ரியன்ட்ஸ் இருப்பதால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

• இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்பைக் கரைக்கும்.

• புற்றுநோய் வராமல் காக்கும்.

• இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.

• உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புச்சத்தைச் சமன்படுத்தும்.

இயற்கை டாக்டர்

• மூளைச் செல்களைப் பாதுகாக்கும்.

• இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும்.

• முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

• உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மன அமைதியைத் தரும்.

• நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ஜீரணசக்தியை மேம்படுத்தும்.

குடமிளகாய்

• வைட்டமின் ஏ, பி6, சி, கே, நார்ச்சத்து நிறைந்துள்ளன.

• மூட்டு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

• மெனோபாஸின் தொல்லைகளை ஓரளவுக்குக் குறைக்கும்.

• பெப்டிக் அல்சரை சரிசெய்யும்.

• சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

• மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

இயற்கை டாக்டர்

• பாதித்த மூளை செல்களைச் சரிசெய்யும்.

• சருமத்தின் ஆரோக்கியத்தைக் கூட்டும்.

• மன அழுத்தம், இதய நோய்களை வராமல் செய்யும்.

• வைட்டமின் சி இருப்பதால், பளபளப்பான சருமம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

• நரம்பு தொடர்பாக ஏற்படும் வலிகள் சரியாகும்.

• உயர் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு சீராகும்.

• இரைப்பை தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும்.

முட்டைகோஸ்

• உடல் எடை குறைப்போருக்கு ஏற்றது.

• வைட்டமின் பி6, சி, கே நிறைந்துள்ளன.

• இதில் உள்ள பீட்டாகரோட்டின் பார்வைத்திறனை மேம்படுத்தும்.

• ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், புற்றுநோயைத் தடுக்கும்.

• கவனச்சிதறல்களைச் சரிசெய்யும்.

• மூட்டுவலிகளைச் சரிசெய்யும்.

இயற்கை டாக்டர்

• அல்சரைத் தடுக்கும். செரிமான உறுப்புகளைச் சீராக்கும்.

• ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

• சல்ஃபர் இருப்பதால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

• ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

• மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

• மூளைக்கான உணவுப்பட்டியலில் அவசியம் இருக்க வேண்டியது இது.

நூல்கோல்

• வைட்டமின் ஏ, சி, இ, பீட்டாகரோட்டின், நார்ச்சத்து நிறைவாக உள்ளன.

• கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன.

• மாரடைப்பைத் தடுக்கும்.

• புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்.

• நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

• நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்; வராமல் தடுக்கும்.

இயற்கை டாக்டர்

• நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும்.

• செரிமானத்தைத் தூண்டும்.

• எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

• கலோரிகள் குறைவு, உடல் எடை அதிகரிக்காது.

• உடல் துர்நாற்றத்தைக் குறைக்கும்.

• வைட்டமின் சி, இ, பீட்டாகரோட்டின், மாங்கனீசு போன்றவை செல்களில் உள்ள ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தைத் குறைக்கும்.​

• வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை ஆஸ்துமா பிரச்னையைக் குறைக்கும்.

பச்சைப் பட்டாணி

• வைட்டமின் சி, பி, கே நிறைந்துள்ளன.

• புரதம், நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

• வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும்.

• மறதி நோய் வராமல் காக்கும்.

• சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

• இதயத்தைப் பாதுகாக்கும்.

இயற்கை டாக்டர்

• எனர்ஜி கொடுக்கும் சிறப்பான உணவு இது.

• ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சமன்செய்யும்.

• லூட்டின் சத்து இருப்பதால், கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

• ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, முதல் திட உணவாகத் தரலாம்.

• சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.

• செரிமான மண்டலம் மேம்படும்.

அவரைக்காய்

• வைட்டமின்கள் ஏ, சி, நீர்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளன.

• இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், ரத்தசோகை குணமாகும்.

• புதிய செல்கள் உருவாக உதவும்.

• கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாகும்.

• நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்பு வளர்ச்சி சீராக இருக்கும்.

இயற்கை டாக்டர்

• கெட்ட கொழுப்பைக் கரைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதய நோய்களைத் தடுக்கும். சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்.

• நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் தீரும்.

• கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஃபோலேட் சத்துக்கள் கிடைக்கின்றன.

• வைட்டமின் சி நிறைந்துள்ளதால், புற்றுநோய் வராமல் காக்கும்.

பீன்ஸ்

• நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீசு உள்ளன.

• ரத்தம் உறையாமல் பாதுகாக்கும்.

• கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

• எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும்.

• இரும்புச்சத்தைக் கிரகிக்கும்.

• ஒருநாளுக்குத் தேவையான ஃபோலேட் சத்துக்களைத் தரும்.

இயற்கை டாக்டர்

• வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும்.

• இரைப்பை பிரச்னைகளைச் சரிசெய்யும்.

• சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

• செரடோனின், டோபோமைன் போன்ற நல்ல ஹார்மோன்களின் உற்பத்தியைச் சீராக்கும்.

• உடைந்த எலும்புகள் விரைவில் சேர உதவும்.

• கர்ப்பிணிகள் சாப்பிட, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

• மனம் தொடர்பான பிரச்னைகளின் தீவிரம் குறைய உதவும்.

புரோகோலி

• நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கொழுப்பைக் குறைக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

• அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும்.

• கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.

• நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

• உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்யும்

இயற்கை டாக்டர்

• இளநரையைத் தடுக்கும்.

• மூளையின் திறனை அதிகரிக்கும். அல்சைமரைத் தடுக்கும்.

• ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

• ஆரம்ப நிலை மார்பகப் புற்றுநோயைக் குணமாக்க உதவும்.

• உணவுக்குழாய், ப்ராஸ்டேட், கணையப் புற்றுநோய்கள் வரும் வாய்ப்புகள் குறையும்.

• நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

இஞ்சி

• வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும்.

• மலச்சிக்கலைப் போக்கும்.

• ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும்.

• சளி, தும்மல், இருமலைக் கட்டுப்படுத்தும்.

• நெஞ்சு எரிச்சலைச் சரிசெய்யும்.

• சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

• உடல் எடையைச் சீராகவைத்திருக்க உதவும்.

இயற்கை டாக்டர்

• மாதவிலக்கு வலியைக் குறைக்கும்.

• சிறந்த நச்சுநீக்கியாகச் செயல்படும்.

• இஞ்சியில் ‘ஜிஞ்சரால்’ எனும் சத்து இருக்கிறது. இது, செரிமானமண்டலத்தைச் சீர்செய்கிறது. மைக்ரேன் தலைவலியைப் போக்கும்.

• இஞ்சியில் வைட்டமின் இ, மக்னீசியம் நிறைந்துள்ளன. தினமும் ஏதாவது ஒருவகையில் இஞ்சியைச் சமையலில்  சேர்த்துவருவது நல்லது.

• வாந்திக்கு, இஞ்சி சிறந்த நிவாரணி. பசியின்மை, ஏப்பம் போன்றவற்றையும் சரிசெய்யும்.

பூண்டு

• ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

• எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

• எலும்புகளை உறுதியாக்கும்.

• மறதி நோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும்.

• வைட்டமின் சி, பி6, மாங்கனீசு நிறைந்துள்ளன.

• குடலில் ஏற்படக்கூடிய தொற்றுகளைத் தடுக்கும்.

இயற்கை டாக்டர்

• கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

• உடலில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றும்.

• உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

• பல் வலியைக் குறைக்கும். டான்ஸில்ஸ் பிரச்னை குணமாகும்.

• கபம், வாதம் போன்றவை அதிகரிக்கும்போது, பூண்டு சாப்பிடுவது நல்லது. பூண்டு சாப்பிட்டுவந்தால், ஆண்மைசக்தி பெருகும்.

• பார்வையைத் தெளிவாக்கும். நல்ல குரல் வளம் கிடைக்க உதவும். ரத்தக் குழாய் அடைப்பைச் சரிசெய்யும். கந்தகச்சத்து நிறைந்தது. பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும்.

கொத்தவரங்காய்

• கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியப்படுத்தும்.

• உடலில் ரத்த உற்பத்தி சீராகும்.

• உடலுக்குத் தேவையான உயிர்சக்தி கிடைக்கும்.

• இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சீர்செய்யும்.

• கால்சியம், பாஸ்பரஸ் உள்ளதால், எலும்புகள் உறுதியாகும்.

இயற்கை டாக்டர்

• உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, மலச்சிக்கலைத் தீர்க்கும்.

• மன அழுத்தம், அதீத உணர்வுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

• வைட்டமின் ஏ, பி, கே, கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம் நிறைந்துள்ளன.

• ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளதால், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டும்.

• குறைந்த கிளைசமிக் இண்டெக்ஸ் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது.

பீர்க்கங்காய்

• வைட்டமின் சி, தயமின், ரிபோஃபிளேவின், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.

• ஃபிளேவனாய்டு, ஃபீனாலிக் அமிலம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன.

• இந்தக் காயில் உள்ள சத்துக்கள் மூளை செல்கள், திசுக்களைப் பாதுகாக்கும்.

• இதன் சாறு இ-கோலி, பி சப்டிலிஸ் (B. Subtilis) போன்ற கிருமிகளை அழிக்கும்.

• சீஸனல் அலர்ஜிக்கு, இந்தக் காயை 48 நாட்கள் சாப்பிட்டுவர, நல்ல பலன் கிடைக்கும்.

இயற்கை டாக்டர்

• அதிக அளவு நீர்சத்து இருப்பதால், உடல் எடை குறைக்க உதவியாக இருக்கும்.

• குடியால் பாதித்த கல்லீரலைப் பலப்படுத்தும்.

• மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்களுக்கு பீர்க்கங்காயைச் சாப்பிடக் கொடுக்கலாம்.

• நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

• இதில் உள்ள செல்லுலோஸ் சத்துக்கள், மூல நோயின் பாதிப்பைக் குறைக்க உதவும்.

• சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

சுரைக்காய்

• சிறுநீர்த்தொற்றைத் தடுக்கும்.

• கோடை காலத்தில் சாப்பிட்டால்,  சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

• நார்ச்சத்து நிறைந்து, மலச்சிக்கல் சரியாகும்.

• அசிடிட்டி, செரிமானப் பிரச்னை, அல்சர்  ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வு.

• இதில், 96 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால், உடல் எடையைப் பராமரிக்க உதவும்.

இயற்கை டாக்டர்

• தயமின், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளன.

• பற்சொத்தை, பற்கள் பாதிப்பைத் தடுக்க உதவும்.

• கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் பாதிப்பைக் குறைக்கும்.

• இளநரையைத் தடுக்கும்.

• உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதயத்தைப் பலப்படுத்தும்.

• உடலுக்குத் தேவையான எலெக்ட்ரோலைட் சத்துக்களைச் சமன்படுத்தும்.

கோவைக்காய்

• பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு.

• மலமிளக்கியாகச் செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும்.

• பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ, சி, பி1, பி2 நிறைந்துள்ளன.

• சுவாசப் பிரச்னைகளைத் தடுக்கும்.

• தொழுநோய், ஸ்காபீஸ், சொரியாசிஸ் பிரச்னைகளின் வீரியத்தைக் குறைக்கும்.

இயற்கை டாக்டர்

• இதன் சாறு, சருமத்தைப் பளபளப்பாக்கும். நீர்ச்சத்தின் தேவையைப் பூர்த்திசெய்யும்.

• ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும்.

• சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்

• இதயப் படபடப்பு, மன அழுத்தப் பாதிப்புகளைக் குணப்படுத்தும்.

• வயிறு தொடர்பான புண்களை சரிசெய்யும்.

• நார்ச்சத்து நிறைந்தது, செர்மானத்துக்கு ஏற்றது.

புடலங்காய்

• அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால், கலோரிகள் குறைவு. உடல் எடை குறைப்போருக்கு ஏற்றது.

• வைட்டமின் ஏ,பி,சி, தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன

• படபடப்பு உணர்வு குறையும்.

• சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

• மார்பகம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

இயற்கை டாக்டர்

• டீடாக்ஸ் ஏஜென்டாகச் செயல்படும் என்பதால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

• மஞ்சள்காமாலை, கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகளைச் சரிசெய்யும்.

• வாயுத் தொல்லை, மலச்சிக்கல் பிரச்னைகளைச் சரியாக்கும்.

• செரிமான சக்தியை மேம்படுத்தும். இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சரிசெய்யும்.

• சரும வறட்சி, சருமப் பிரச்னைகள் தீரும்.

• அசிடிட்டி, அல்சர், ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு.

• வைட்டமின் சி, பி, ஏ, புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வாழைத்தண்டு

• வைட்டமின் ஏ, பி6, சி, ஃபோலேட்ஸ், நியாசின் உள்ளன.

• சிறுநீரகம், பித்தப்பை ஆகியவற்றில் உள்ள கற்களைக் கரைக்கும்.

• ரத்தசோகை, கரோனரி இதய நோய், நரம்பு மண்டலப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றது.

• ரத்த அழுத்தம், அதிகப்படியான இதயத் துடிப்பு கட்டுக்குள் வரும்.

• நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

இயற்கை டாக்டர்

• வைட்டமின் ஏ இருப்பதால், கண்களுக்கு நல்லது.

• இதில் உள்ள மக்னீசியம், எலும்புகளை வலிமையாக்கும்.

• கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறை உண்ணலாம்.

• உடலில் உள்ள தொற்றுக்கள், கழிவுகள் வெளியேறும்.

• உடல் எடை குறைக்க நினைப்போருக்கு சிறந்த தீர்வு

• பைட்டோகெமிக்கல்ஸ் சத்துக்கள் உள்ளதால், அல்சரைத் தடுக்கும்.

வெள்ளைப் பூசணி

• ​உடல் எடை குறைக்க நினைப்போருக்கு சிறந்த உணவு.

• நீர்ச்சத்து மிகுந்துள்ளதால், சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்பட்டு, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும்.

• நரம்பு மண்டலத்தைச் சரிசெய்யும்.

• குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.

• வாரம் இருமுறை சர்க்கரை நோயாளிகள் அவசியம் சாப்பிடவும்.

இயற்கை டாக்டர்

• உடலுக்குக் குளிர்ச்சி என்பதால், கோடை காலத்தில் சாப்பிடலாம்.

• உடலில் பிஹெச் (pH) நிலையைச் சமநிலைப்படுத்த உதவும்.

• சிறுநீரகம், கல்லீரல், குடல் போன்ற முக்கிய உறுப்புகளைச் சுத்தம்செய்யும்.

• புரதம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளன.

• பித்தப்பைக் கற்கள் வெளியேற, இதன் சாறு பயன்படும்.

செளசெள

• ஃபோலேட், வைட்டமின்  பி, அமினோ அமிலங்கள் இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.

• வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், மாங்கனீசு, காப்பர், துத்தநாகம், பொட்டாசியம் நிறைந்துள்ளன.

இயற்கை டாக்டர்

• ரத்தசோகையைச் சரிசெய்யும்.

• செலினியம், வைட்டமின் பி6 ஆகியவை கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கும்

• தசைப்பிடிப்பு, மறதி, சருமப் பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகள் சரியாகும்.

- ப்ரீத்தி

படங்கள்: ப.சரவணகுமார்