Published:Updated:

"தி.மு.தி.க-லாம் தெரியாது!”

நா.சிபிசக்கரவர்த்தி

ட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் பரபரப்பு மெள்ள மெள்ள சூடுபிடிக்குதுல்ல... நல்ல விஷயம். சரி, நீங்க கேள்விகளைக் கேளுங்க” எனத் தயாராகிறார் பா.ம.க முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.

“அலியா பட் கிட்ட ஜி.கே கேள்விகள் கேட்டப்ப, அந்தப் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியலை. அதுக்கு அப்புறம் `அலியா பட் ஜோக்ஸ்’ உருவாக்கி எல்லாரும் கிண்டல்பண்ணினாங்க. அப்பவே என் பொண்ணுங்ககிட்ட சொன்னேன்... `இந்த மாதிரி நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டா என்னையும் கிண்டல் பண்ணுவாங்க’னு. இப்ப என்னை ஜாலி கேள்விக்குக் கூப்பிடுறீங்களே...” எனக் குழப்ப மாகவே ஓ.கே சொல்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

“நான் ஷாட்ல நடிக்க ரெடியா நிக்கிறேன். அரை மணி நேரத்துல கூப்பிடறேன்பா” என்றவர் சரியாக அரை மணி நேரம் கழித்து அழைத்தார். “இப்ப நான் ரெடி. கேள்வியை ஷூட் பண்ணுங்கப்பா” எனத் தயாராகிறார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்.

“இப்பதான் காலேஜ்ல டெஸ்ட் எழுதிட்டு வந்தேன். அடுத்து ஆனந்த விகடன் டெஸ்ட்டா? சிலபஸ் என்னன்னு சொன்னா, படிச்சிட்டு வர வசதியா இருக்கும்’’ எனக் கண்ணடித்துச் சிரிக்கிறார் நடிகை ‘கயல்’ ஆனந்தி.

 "தி.மு.தி.க-லாம் தெரியாது!”

“கடந்த வாரம், ம.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வுக்கு எத்தனை மாவட்டச் செயலாளர்கள் தாவினார்கள்?”

விடை: 4 மாவட்டச் செயலாளர்கள். (எஸ்.ஜோயல்  (தூத்துக்குடி), சரவணன் (நெல்லை புறநகர்), பெருமாள் (நெல்லை மாநகர்), தில்லை செல்வம் (கன்னியாகுமரி).

அன்புமணி: “நல்ல கேள்வி. நான்கு பேர். அந்தக் கட்சியில் இருந்து தாவுறதுக்கு இன்னமும் ஆட்கள் இருக்காங்களா என்ன? ஒவ்வொரு நாளும் யாரோ ஒருத்தர் தாவிட்டுத்தானே இருக்காங்க. வைகோ மீது தனிப்பட்ட முறையில் நல்ல மரியாதை உண்டு. ஆனால், அவர் கட்சி நடத்துறது பத்தி என்ன சொல்றது?”

சரண்யா பொன்வண்ணன்: ‘‘அரசியல்னா எனக்குச் சுத்தமா பிடிக்காது. அதைப் பத்தி நான் தெரிஞ்சுக்கக்கூட விரும்ப மாட்டேன். நீங்க  தப்பான ஆள்கிட்ட கேள்வி கேக்்கிறீங்க” என்றவர், என்ன நினைத்தாரோ, ‘`வேண்டாம் தம்பி. இந்த ஆட்டத்துக்கு நான் வரலைப்பா’’ என்று சீரியஸ் ஆகிறார்.

ராஜேந்திரன்: சிரிக்கிறார்... ‘‘யார் தாவினாங்கனு எனக்குத் தெரியாது. எங்க அப்பாவும் அண்ணனும் எம்.ஜி.ஆருக்கு டூப்பு போட்டிருக்காங்க. அதுனால எங்க குடும்பமே இரட்டை இலை கட்சிதான்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனந்தி: வெகுநேரம் சிரித்தவர், “ம.தி.மு.க-ன்னா என்ன... தி.மு.க-ன்னா என்ன? ரெண்டும் பொலிட்டிகல் பார்ட்டியா?” என்று கேட்டவருக்கு நீண்ட நெடிய விளக்கம் கொடுத்த பிறகு, “எனக்கு தமிழ்நாடு பாலிட்டிக்ஸ்ல கருணாநிதி தெரியும்; ஜெயலலிதா தெரியும். அவ்வளவுதான். தி.மு.தி.க (தி.மு.தி.க-வா??)லாம் தெரியாது” என்று மீண்டும் சிரிக்கிறார்.

 "தி.மு.தி.க-லாம் தெரியாது!”

“ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் குழந்தை பெயர் என்ன?”

விடை: மேக்ஸ்.

அன்புமணி: யோசித்தவர், “பெண் குழந்தைனு தெரியும். ஆனா, பேரு ஞாபகம் வரலை.”

சரண்யா பொன்வண்ணன்: ஆச்சர்யமாக, “அவருக்கு குழந்தை பிறந்திருக்கா? வாழ்த்துகள். ஆனா, இன்னைக்கு சின்னப் பசங்க தொடங்கி பெரியவங்க வரைக்கும் பலருக்கும் மன அழுத்தம் வர்றதுக்குக் காரணம் இந்த சோஷியல் மீடியாதான். அதையும் தாண்டி உலகம் இருக்குனு புரிஞ்சுக்கங்க.”

ராஜேந்திரன்: “அய்யோ... என்னப்பா பேரு இது? மார்க்கு, டெஸ்ட்னு. அவரு அமெரிக்கா ஆளா? ரைட்டு. நான் ஃபேஸ்புக்... விட்டர்... (`ட்விட்டர் சார்’) இதை எல்லாம் கண்ணால பார்த்ததுகூடக் கிடையாதுப்பா.”

ஆனந்தி: “நான் ட்விட்டர்லதான் ஆக்டிவா இருக்கேன். ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட்டே கிடையாது. எப்பூடி?’’

 "தி.மு.தி.க-லாம் தெரியாது!”

“இந்த வருட பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்... எந்த நாட்டைச் சேர்ந்தவர்?”

விடை: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பியா அலோன்ஸோ.

அன்புமணி: “ம்ம்ம்.... கொலம்பியா நாட்டைச் சேர்ந்த பொண்ணுதான் முதலில் உலக அழகினு அறிவிச்சாங்க. அதுக்கு அப்புறம் தவறுதலாக அறிவிச் சுட்டோம்னு சொல்லி, பிலிப்பைன்ஸ் நாட்டு அழகிக்குக் கொடுத்தாங்க. அவங்க பேரு ஏதோ பியானு வரும்.”

சரண்யா பொன்வண்ணன் : “ஐ சூப்பர் தம்பி. இப்பதான் என் ஏரியா சம்பந்தமான கேள்வியைக் கேட்கிறீங்க. சீனா பொண்ணு மாதிரியே முகச்சாயல் இருக்கும். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பொண்ணு. ஆனா, பேர் மட்டும் ஞாபகம் வரலையே...’’

ராஜேந்திரன்: “ஹி... ஹி... எனக்கு ஒரே ஒரு உலக அழகிதான்... அது ஐஸ்வர்யா ராய். ஓ.கே-வாப்பா?”

ஆனந்தி: “மிஸ் யூனிவர்ஸ் போட்டி நடந்துச்சுனு தெரியும். ஆனா, யார் ஜெயிச்சாங்கனு தெரியலை.”’

 "தி.மு.தி.க-லாம் தெரியாது!”

“மலர் டீச்சர் யார்?”

விடை: `பிரேமம்’ படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவரான நடிகை சாய் பல்லவியின் கேரக்டர் பெயர்.

அன்புமணி: கேள்வியை மூன்று முறை கேட்டவர் “மலர் டீச்சரா? யாரு இவங்க. புதுசா இருக்காங்களே... எனக்குத் தெரியலையே” என்றவரிடம் பதிலைச் சொன்னதும் சிரித்தவர், “எனக்கு மூணாவது தொடங்கி காலேஜ் வரைக்கும் எல்லா டீச்சர் பேரும் தெரியும். இன்னமும் அவங்க எல்லார்கூடவும் டச்லதான் இருக்கேன். எல்லாத்தையும்விட எங்க அப்பாதான் எனக்கு பெரிய டீச்சர்.”

சரண்யா பொன்வண்ணன்: “என் பொண்ணுங்க ‘பிரேமம்’ படம் பார்த்துட்டு வந்து, `சாய் பல்லவிங்கிற பொண்ணு மலர் டீச்சர் கேரக்டர்ல ரொம்ப அருமையாக நடிச்சிருக்காங்க’னு சொன்னாங்க. நான் பயந்த மாதிரி இல்ல. உங்க குறும்புக் கேள்விங்க நல்லாவே இருக்கு’’ என தம்ஸ்அப் காட்டி சிரிக்கிறார்.

ராஜேந்திரன்: “மலர் டீச்சர்லாம் தெரியாதுப்பா. எனக்கு பல்கலைக்கழகம், டீச்சர் எல்லாம் பாலா சார்தான். அவர்தான் என் குரு.”

ஆனந்தி: “ ‘பிரேமம்’ படத்தில் சாய் பல்லவியோட ரோல். என்னை செலின் ரோலுக்கு நடிக்கக் கூப்பிடுறாங்க. அந்த ரோல்ல நடிச்சா நல்லா இருக்கும்ல? சரி, நான் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கேன் டீச்சர் சார்?” எனக் கேட்டுச் சிரிக்கிறார்!